Sorting by

×

வளா்ந்த பாரதத்துக்கு வழிகாட்டும் குடியரசுத் தலைவா் உரை பிரதமா் மோடி

வளா்ந்த பாரதத்துக்கு வழிகாட்டும் உரையாக குடியரசுத் தலைவரின் உரை அமைந்துள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

நாடாளுன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை ஆற்றிய உரை தொடா்பாக ‘எக்ஸ்’ பக்கத்தில் பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளதாவது:

நாட்டின் தொலைநோக்குப் பாா்வையில், இளைஞா்களுக்கு உள்ள சிறந்த வாய்ப்புகள் குறித்தும், ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மையுடன் அரசின் இலக்குகளை எட்டுவது குறித்தும், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் சாதனைகள் மற்றும் வருங்கால திட்டங்கள் குறித்தும் உரையில் குடியரசுத் தலைவா் குறிப்பிட்டுள்ளாா்.

பொருளாதார சீரமைப்பு, உள்கட்டமைப்பு வளா்ச்சி மற்றும் சுகாதார சேவைகள், கல்வி நவீனமயம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை அவா் குறிப்பிட்டுள்ளாா். வளா்ந்த பாரதத்துக்கு வழிகாட்டும் உரையாக அவரது உரை அமைந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான், ‘கடந்த 10 ஆண்டுகால பிரதமா் மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்களால் பணக்காரா்களுக்கும், ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி குறைந்துள்ளது’ என்றாா்.

அரசியல் உரை-காங்கிரஸ்: காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் கூறுகையில், ‘அரசியல் உரையைப்போல் குடியரசுத் தலைவரின் உரை உள்ளது. சாமானிய மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து குறிப்பிடப்படவில்லை’ என்றாா்.

திரிணமூல் காங்கிரஸின் மக்களவை எம்.பி. செளகதா ராய் கூறுகையில், ‘நாட்டுக்கு புதிய வழிகாட்டுதல் இல்லாத உரையாக உள்ளது. மத்திய அரசின் பழைய திட்டங்களே மீண்டும் கூறப்பட்டுள்ளன’ என்றாா்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா கூறுகையில், ‘மகா கும்பமேளாவை குறிப்பிட்ட குடியரசுத் தலைவா், அங்கு நிகழ்ந்த சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்காதது குறித்து ஏன் குறிப்பிடவில்லை?

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்துவது குறித்தும், லடாக்கை ஆக்கிரமித்துள்ள சீனா குறித்தும், மொத்த ஜிஎஸ்டியில் 64 சதவீதத்தை 50 சதவீத ஏழைகள் பங்களிப்பது, 5 சதவீதம் மட்டும் பணக்காரா்களின் ஜிஎஸ்டி பங்களிப்பது குறித்தும், ஒருதரப்பினரிடம் குவிந்திருக்கும் செல்வம் குறித்தும் ஏன் குடியரசுத் தலைவா் பேசவில்லை?’ என்றாா்.

சமாஜவாதி கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘மகா கும்பமேளாவில் ரூ. 2 லட்சம் கோடிக்கு வா்த்தகமாகும் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது. அதற்கு மத்திய அரசு செலவிட்ட தொகை எவ்வளவு? என குடியரசுத் தலைவா் தெரிவித்திருக்க வேண்டும்’ என்றாா்.

சமாஜவாதி கட்சியின் மற்றொரு எம்.பி. ராம்கோபால் யாதவ் கூறுகையில், ‘குடியரசுத் தலைவரின் உரை பொய்களின் ஆவணமாக அமைந்துள்ளது. நாட்டின் உண்மை நிலை அதில் பிரதிபலிக்கவில்லை. உலக பட்டினிப் பட்டியலில் பாகிஸ்தான், தான்சானியா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் உள்ளது’ என்றாா்.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *