சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி, ஒரு சவரன் தங்கம் ரூ.71,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மே 26ஆம் தேதி இந்த வாரம் தொடங்கிய போது, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.71,600க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமையான இன்று, வார இறுதியில் கிட்டத்தட்ட ரூ.240 குறைந்து ரூ.71,360 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,360-க்கு விற்பனையானது. இன்று காலை இந்த விலையில் மாற்றமின்றி அதே விலையில் உள்ளது.
சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் புதன்கிழமை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.71,480-க்கு விற்பனையானது. தொடா்ந்து தங்கம் விலை வியாழக்கிழமை மீண்டும் குறைந்தது.
அதன்படி, கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.8,895-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.71,160-க்கும் விற்பனையானது. இந்த வாரத்தில் இதுதான் மிகவும் குறைவான விலையாகும்.
ஆனால், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,920-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,360-க்கு விற்பனையானது. இந்த விலைதான் சனிக்கிழமையும் நீடிக்கிறது.
வெள்ளி விலை தொடா்ந்து 9-ஆவது நாளாக மாற்றமின்றி கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,11,000-க்கும் விற்பனையாகி வருகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


