
திருப்புவனம்: நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையின்போது மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி உயிரிழந்தார். இது தொடர்பாக தனிப்படை காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் பாலகுரு மகன் அஜித்குமார் (27). திருமணமாகாத இவர், அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கோயிலுக்கு காரில் வந்த நிகிதா என்பவரது நகைகள் திருடுபோய்விட்டன. இது தொடர்பான புகாரின் பேரில் அஜித்குமார் உள்ளிட்ட சிலரை திருப்புவனம் போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


