விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
10 என்றதுக்குள்ள, கோலி சோடா படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விஜய் மில்டன். இவரின் புதிய படம் மழை பிடிக்காத மனிதன்.
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் மில்டன் கதை எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அவர் என்னை ஏமாற்றிவிட்டார்.. யாரைச் சொல்கிறார் நிவேதா பெத்துராஜ்?
இப்படத்தில் இசையமைப்பாளர் ராயின் இசையமைப்பில் ‘தீரா மழை’ , இசையமைப்பாளர் ஹரி டபுசியாவின் இசையமைப்பில் ‘தேடியே போறேன்’ ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
இந்நிலையில், மழை பிடிக்காத மனிதன் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை வெளியீடாக திரைக்கு வருகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

