நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட்லர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இறுதியாக நடித்த ‘ரோமியோ’, ‘மழைப்பிடிக்காத மனிதம்’ திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தற்போது, ‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் ‘ஹிட்லர்’ என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
செந்தூர் ஃபிலிம் இண்டர்னேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் முன்னதாக வெளியானது.
இந்த நிலையில், இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

