கேரளத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
கேரளத்தில் நிலச்சரிவால் கடுமையாக பாதிப்படைந்த முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
இதனையடுத்து, இருவழிஞ்சி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக வருவதால், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
சூரல்மலை – முண்டக்கை இடையே இரும்பு பாலம் அமைக்கும் பணியிலும் தொய்வு ஏற்பட்டது.
என் கைதுக்கு உதயநிதிதான் காரணம்: சவுக்கு சங்கர்
பருவமழையால் பெய்த கனமழையால், வயநாட்டில் ஏற்பட்டு நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தவர்களில் 175-க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. 200 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ராணுவம் மீட்டுள்ளது.
முண்டக்கை கிராமத்திலிருந்த 500 வீடுகளில், இப்போது 50 வீடுகள்கூட இல்லாத நிலை உருவாகியுள்ளது.
அந்தப் பகுதிகளில் 34 முதல் 49 வீடுகள் மட்டுமே தற்போது இருப்பதாகவும், வயநாடு வரைபடத்தில் இருந்து முண்டக்கை கிராமமே அழிந்துவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மீண்டும் பிரச்னையை எதிர்கொண்ட மைக்ரோசாஃப்ட்: சைபர் தாக்குதலா?
இதனைத் தொடர்ந்து, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

