
சென்னை: வட சென்னை வியாசர்பாடி பகுதியில் கணேசபுரம் ரயில்வே மேம்பாலப் பணி 40 சதவீதம் மட்டுமே நிறைவடைந் திருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் பதில் அளித்துள்ளது. வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே மேம்பாலப் பணி நீண்ட காலமாக முடிக்கப்படாமல் உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகிறார்கள். எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சண்முகம், சென்னை மாநகராட்சி மேயரிடம் அண்மையில் மனு அளித்திருந்தார். இதற்கு பதில் அளித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம், டி.கே.சண்முகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


