Sorting by

×

விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு அறிவிப்பு குறித்து பேசிய கௌதம் கம்பீர்!

டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ள இந்திய அணிக்கு முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆட்டத்தின் இறுதி ஓவரில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணிக்கு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இறுதிப்போட்டியில் திருப்புமுனையாக அமைந்த தருணங்கள்!

இந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விஷயங்கள் நடைபெறுவதைக் காட்டிலும் சிறப்பானதாக இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பிடிஐ-ல் அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைத் தொடரை வெற்றி பெறுவதற்கு மிக முக்கியப் பங்காற்றிய பிறகு, இருவரும் தங்களது ஓய்வு முடிவை அறிவித்துள்ளனர். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சிறந்த வீரர்கள். உலகக் கோப்பை வெற்றியுடன் அவர்கள் ஓய்வு பெற்றது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விஷயங்கள் நடைபெறுவதைவிட சிறப்பானது. இந்திய கிரிக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் நிறைய பங்காற்றியுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகள் என்றார்.

உலகக்கோப்பையை உச்சிமுகர்ந்த தருணம்: தோனி அனுப்பிய வாழ்த்துச் செய்தி!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *