Sorting by

×

வெனிசுலா VS ட்ரம்ப்: போதைப்பொருட்களுக்கு எதிரான போரா? எண்ணெய் வளங்கள் மீதானா பசியா?

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வான்வெளிகள் மூடப்பட்டதாகக் கருத வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியிருப்பதை, காலனித்துவ அச்சுறுத்தல் எனக் கடுமையாக எதிர்த்துள்ளது வெனிசுலா அரசு.

சட்டப்படி, ஒரு நாட்டின் வான்வெளியை மூடுவதற்கு அமெரிக்காவுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், டிரம்ப்பின் சமூக வலைதளப் பதிவு, அந்தப் பகுதிக்கு விமானப் பயணம் மேற்கொள்வோருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, விமான நிறுவனங்கள் அங்கு சேவை செய்வதைத் தவிர்க்க வழிவகுக்கிறது.

அமெரிக்காவின் ராணுவ அணிவகுப்பு

கடந்த சில மாதங்களாக அமெரிக்கா, கரீபியன் பகுதியில் தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, உலகின் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு (USS Gerald Ford) மற்றும் சுமார் 15,000 துருப்புக்களை வெனிசுலாவைத் தாக்கும் தொலைவில் நிலைநிறுத்தியுள்ளது.

USS Gerald R. Ford (CVN 78)
USS Gerald R. Ford (CVN 78)

1989-ல் பனாமாவை ஆக்கிரமித்ததிலிருந்து அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் மேற்கொண்டதிலேயே இதுதான் மிகப்பெரிய படை அணிவகுப்பாகும். இது போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்காகத்தான் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ, போதைப்பொருள் கடத்தலை காரணமாகக் காட்டி, தன்னை வெளியேற்றும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி வருகிறார்.

விமான சேவைகளுக்கு மிரட்டல்?

ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில், “அனைத்து விமான நிறுவனங்கள், விமானிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் மனிதர்களைக் கடத்துபவர்களும், ‘வெனிசுலாவுக்கு மேலேயும் அதைச் சுற்றியுள்ள முழு வான்வெளியும் மூடப்பட்டதாகக் கருதவும்’.” என்று எழுதியிருந்தார்.

அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) சில நாட்களுக்கு முன்னரே, வெனிசுலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ நடவடிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பது குறித்து விமான நிறுவனங்களை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Venezuela in Map
Venezuela in Map

கடந்த திங்கள் அன்று, சர்வதேச விமான சேவைகள் வெனிசுலாவில் சேவையைத் தொடரவேண்டும் என அந்த நாட்டு அரசு 48 மணி நேரம் காலக்கெடு விதித்திருந்தது. ஆனால் ஸ்பெயினின் இபேரியா (Iberia), டாபி போர்ச்சுகல் (TAP Portugal), கோல் (Gol), லேடம் (Latam), ஏவியன்கா (Avianca) மற்றும் டர்கிஷ் ஏர்லைன்ஸ் (Turkish Airlines) ஆகிய ஆறு பெரிய சர்வதேச விமான நிறுவனங்கள், விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு அளிக்கப்பட்ட 48 மணி நேர காலக்கெடுவைத் தவறவிட்டதால், அவை வெனிசுலாவில் தரையிறங்க வெனிசுலா அரசு புதன்கிழமை தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் அமெரிக்காவின் முயற்சிகள் “தரை மார்க்கமாக” “மிக விரைவில்” தொடங்கும் என்று டிரம்ப் கடந்த வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.

போதைப்பொருளுக்கு எதிரான போரா? எண்ணெய் வளங்களுக்கான பசியா?

வெனிசுலா வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா வாராந்திர குடியேற்றவாசிகள் திரும்பும் விமானச் சேவையை ‘தன்னிச்சையாக நிறுத்திவிட்டது’ என்று குற்றம் சாட்டியுள்ளது.

“அமெரிக்காவின் அநாகரீகமான ஆக்கிரமிப்புச் செயலை உறுதியாக நிராகரிக்க சர்வதேச சமூகம், உலகின் இறையாண்மை கொண்ட அரசாங்கங்கள், ஐ.நா. மற்றும் அது தொடர்புடைய பன்னாட்டு அமைப்புகளுக்கு நாங்கள் நேரடியாக அழைப்பு விடுக்கிறோம்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Nicolás Maduro
Nicolás Maduro

போதைப்பொருள் ஏற்றிச் சென்றதாக அமெரிக்கப் படைகள் குறைந்தது 21 படகுகளின் மீது தாக்குதல் நடத்தி, 80-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளது. இருப்பினும், அந்தப் படகுகளில் போதைப்பொருள் இருந்தது என்பதற்கான ஆதாரத்தை அமெரிக்கா வழங்கவில்லை.

மடுரோவின் 2018 மறுதேர்தல் முறைகேடானது என்று வெனிசுலா எதிர்க்கட்சிகள் மற்றும் பல வெளிநாடுகள் குற்றம் சாட்டின. ஆனால் அமெரிக்கா, எண்ணெய் வளம் மிகுந்த வெனிசுலாவின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கவே ஆட்சிக் கவிழ்ப்பு (Regime Change) நடத்த சதி செய்வதாக வெனிசுலா அதிபர் குற்றம் சாட்டுகிறார்.

அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையின் நோக்கம் மடுரோவைத் பதவி நீக்கம் செய்வதே என்று வெனிசுலா அரசாங்கம் நம்புகிறது. நீண்ட காலமாக அமெரிக்க அரசு வெனிசுலா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து, அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் உணவு இறக்குமதியை கட்டுப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

தனது வழிகாட்டி ஹியூகோ சாவேஸ் போலவே, மடுரோவும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். அமெரிக்கா ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அதன் எண்ணெய் வளத்தை சுரண்ட ஆட்சிக்கவிழ்ப்பு முதல் கொலை வரை பலவேறு சதிகளில் ஈடுபடுவதாக இவர்கள் தரப்பு குற்றம்சாட்டுகிறது.

மடுரோ மீது பல்வேறு குற்றவியல் புகார்களை முன்வைத்துள்ள அமெரிக்க அரசு, மடுரோவைக் கைது செய்ய உதவும் தகவல்களுக்கு அமெரிக்கா பெரும் தொகையைச் சன்மானமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

US vs Nenezuela
US vs Nenezuela

வெனிசுலா அதிபர் போதைப்பொருள் கூட்டத்தின் தலைவரா?

அத்துடன், அமெரிக்கா, ‘கார்டெல் டி லாஸ் சோல்ஸ்’ (Cartel de los Soles) என்ற குழுவை ஒரு வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்தக் குழுவுக்கு மடுரோதான் தலைமை தாங்குகிறார் என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

ஒரு அமைப்பைத் தீவிரவாதக் குழு என்று முத்திரை குத்துவது, அதை இலக்கு வைத்து அழிப்பதற்கான பரந்த அதிகாரங்களை அமெரிக்கச் சட்டம் அமலாக்கம் மற்றும் ராணுவ முகமைகளுக்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பு குறித்து வெனிசுலா வெளியுறவு அமைச்சகம் “தீவிரமாக, உறுதியாக, மற்றும் முற்றிலும் நிராகரிக்கிறோம்” எனக் கூறியுள்ளது.

இந்தக் கார்டெல்லின் உயர் பதவியில் உள்ள உறுப்பினர்களில் ஒருவராகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வெனிசுலாவின் உள்நாட்டு மற்றும் நீதித்துறை அமைச்சர் டியோஸ்டாடோ காபெல்லோ (Diosdado Cabello), நீண்ட காலமாகவே இது ஒரு “கற்பனைக் கதை” என்று கூறி வருகிறார்.

ஆனால், அமெரிக்க வெளியுறவுத்துறை, கார்டெல் டி லாஸ் சோல்ஸ் இருப்பது மட்டுமல்லாமல், அது “வெனிசுலாவின் ராணுவம், உளவுத்துறை, சட்டமன்றம் மற்றும் நீதித்துறையை ஊழல் நிறைந்ததாக மாற்றியுள்ளது” என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *