இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, ஃபகத் பாசில், துஷாரா உள்ளிட்ட படக்குழுனர் தங்களது டப்பிங் பணிகளை முடித்துவிட்டனர்.
Kuri Vechha… Erai Vizhanum. Superstar @rajinikanth at the dubbing session. ️ Watchout VETTAIYAN ️ is on the way.
Releasing on October 10th in Tamil, Telugu, Hindi & Kannada!#Vettaiyan ️ @rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran… pic.twitter.com/BUDMuC5jeq
— Lyca Productions (@LycaProductions) August 31, 2024
டப்பிங் விடியோவில் நடிகர் ரஜினி, “டிரைக்டர் சார்… இது சூப்பர் சார்” எனக் கூறும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடல் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

