
புதுச்சேரி: புதுச்சேரியில் தமிழ் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸின் பணிகள் என்பது தமிழ் நல்லுலகத்துக்கு மிகப்பெரிய சான்று மற்றும் சாட்சியாக இருந்துள்ளது.
பாமக, வடமாவட்டங்களில் உழைக்கும் வர்க்கங்களான வன்னியர், பட்டியலின மக்களை இணைத்து களமாடியிருந்தால் வீழ்ச்சிக்கு வந்திருக்க வாய்ப்பிருக்காது. தற்போது உட்கட்சி விவகாரத்தில் மருத்துவர்ராமதாஸ் கண் கலங்கியிருப்பது வருத்தத்துக்குரிய ஒன்றுதான். இதற்கான விளக்கத்தை அன்புமணிதான் கூற வேண்டும்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


