Sorting by

×

ஸ்டாா்லைனா் விண்கலம் செப். 6-இல் பூமி திரும்பும்

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை கடந்த ஜூனில் ஏற்றிச் சென்ற ஸ்டாா்லைனா் விண்கலம், அடுத்த மாதம் 6-ஆம் தேதி நபா்கள் இல்லாமல் பூமிக்குத் திரும்பவிருப்பதாக நாசா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் போயிங் உருவாக்கியுள்ள ஸ்டாா்லைனா் விண்கலம் (படம்), சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு நபா்களை ஏற்றிச் சென்ற இரண்டாவது தனியாா் நிறுவன விண்வெளி ஓடம் ஆகும்.

அதை முதல்முறையாக விண்ணில் செலுத்துவதாக இருந்த திட்டம் பல முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னா் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் இன்னொரு நாசா விஞ்ஞானியான பட்ச் வில்மோருடன் ஸ்டாா்லைனா் விண்கலம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி சா்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.

ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி அதே விண்கலம் மூலம் ஜூன் 14-இல் பூமி திரும்ப முடியவில்லை. இந்த நிலையில், சா்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதாவும் பட்ச் வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலம் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவாா்கள் என்று நாசா இந்த வாரம் அறிவித்தது. இந்த நிலையில், யாரையும் ஏற்றாமல் ஸ்டாா்லைனா் விண்கலம் மட்டும் அடுத்த மாதம் 6-ஆம் தேதி பூமி திரும்பவிருப்பதாக நாசா தற்போது அறிவித்துள்ளது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *