ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் ஜப்பானை இந்தியா 3 – 2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. கடைசிவரை கோல் அடிக்க போராடிய ஜப்பான் அணி தோல்வியை தழுவியது.
இந்த ஆட்டத்தில் 4’, 5’ அடுத்தடுத்த இரு நிமிஷங்களில் கோல் அடித்து அசத்திய இந்திய அணி வீரர்கள் ஜப்பானை போராடச் செய்தனர். பின்னர் சுதாரித்து ஆடிய ஜப்பான், 38’-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தது. அடுத்து, ஆட்டத்தை சமன் செய்ய போராடியது.
கடைசி கட்ட விறுவிறுப்பான ஆட்டத்தில் 45’-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கு இன்னொரு கோல் கிடைக்க வெற்றி இந்திய அணி வசமானது.எனினும், 59’-ஆவது நிமிஷத்தில், ஜப்பான் ஒரு கோல் அடிக்க, இறுதியில் ஜப்பானை இந்தியா 3 – 2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
India defeated a fighting Japan 3-2 to qualify for the Super Four stage of the Hero Men’s Asia Cup
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


