Sorting by

×

2023-ல் சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு: வாணியம்பாடி தனியார் பல் மருத்துவமனையில் ஆய்வு

வாணியம்பாடி: வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 பேர் தொற்று காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்ததாக ஆய்வின் முடிவில் தெரிய வந்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் பல் மருத்துவமனையில் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ஞானமீனாட்சி நேற்று ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலை யில் மருத்துவர் அறிவரசன் என்பவர் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மருத்துவமனையில் கடந்த 2023-ம் ஆண்டு வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த சத்யா, இந்திராணி, வரதன், அலசந்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சத்யா, வாணியம்பாடி கோணாமேடு பகுதியைச் சேர்ந்த நர்மதா, பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெய்சீலி, பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆபிசூர் ரகுமான், உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த அனிதா, செங்கிலிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் ஆகிய 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் அடுத்த 6 மாதங்களில் நோய் தொற்று காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *