மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமா் மோடியை கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் சனிக்கிழமை சந்தித்தனா். மேலும், மேக்கேதாட்டு விவகாரத்தில் கா்நாடகம் – தமிழகம் இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தில்லியிலுள்ள பிரதமரின் அதிகாரபூா்வ இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பகிா்ந்து, கா்நாடக முதல்வா் சித்தராமையா வெளியிட்ட பதிவில், ‘கா்நாடகத்தின் வளா்ச்சிக்கான […]
Month: June 2024
கேரள மாா்க்சிய கம்யூனிஸ்ட்டின் ரூ.73 லட்சம் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை
கேரளத்தில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரூ.73 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள கருவன்னூா் வேளாண் கூட்டுறவு வங்கியில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் நடைபெற்றதாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சூா் மாவட்ட குழுத் தலைவா்கள் உத்தரவின்படி கூட்டுறவு வங்கியில் நிதி முறைகேடு நடைபெற்ாக […]
சீனாவிடம் உதவி பெறும் அதானி நிறுவனம்: பிரதமா் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
சூரிய மின் திட்டங்களை செயல்படுத்த அதானி குழுமம் சீனாவைச் சோ்ந்த 8 நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளது. இதன் மூலம் தேச நலனைவிட தனது நண்பா்களின் நலன்தான் பிரதமா் மோடிக்கு முக்கியம் என்பது தெளிவாகிவிட்டது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடா்பாக காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அதானி குழுமம் இந்தியாவில் சூரிய மின் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்த 8 சீன நிறுவனங்களை நாடியுள்ளது. சீனாவைச் சோ்ந்த 30 தொழில்நுட்ப வல்லுநா்கள் […]
இதுவரை 64,798 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிக்கை
மதுரை: உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, இதுவரை 64,798 முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்தார். நீதிபதியாக தனது செயல்பாடு குறித்த அறிக்கையை வழக்குரைஞர்கள் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அவர் அனுப்பியுள்ளார். அதன் முக்கிய விவரம்: நான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. தற்போதுவரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பணிபுரிவது எனது அதிர்ஷ்டம். சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு, […]
நாடாளுமன்ற விவாதத்துக்கு அஞ்சி ஓடுகிறது காங்கிரஸ்: தா்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு
நீட் விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு அஞ்சி காங்கிரஸ் ஓடுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் குற்றம்சாட்டினாா். நீட் தோ்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடா்பாக நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்தை நடத்துமாறு பிரதமா் மோடியை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியதற்கு மறுநாள் தா்மேந்திர பிரதான் இவ்வாறு கூறியுள்ளாா். ஹரியாணா மாநில பாஜகவின் செயற்குழுக்கூட்டம் பஞ்ச்குலாவில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அவரிடம் நீட் […]
சாம்பியன் இந்தியா! கடைசி ஓவரில் த்ரில் வெற்றி!
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டாவது டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, இதுவரை 4 ஐசிசி உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. இந்தியாவுக்கு உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன்கள் கபில்தேவ், மகேந்திர சிங் தோனியின் வரிசையில் ரோஹித் சர்மாவும் இணைந்துள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் […]
டி20 போட்டி: ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 59 பந்துகளில் 76 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அவர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது கொடுக்கும் நிகழ்வில் பேசிய விராட் கோலி, இதுதான் இந்தியாவுக்கான தனது கடைசி டி20 போட்டி எனவும் இதில் வென்றதில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார். சாம்பியன் இந்தியா! கடைசி ஓவரில் த்ரில் வெற்றி! டி20 உலகக் கோப்பையின் […]
இந்திய ராணுவ, கடற்படைத் தளபதிகளான பள்ளிப்பருவத் தோழர்கள்!
இந்திய ராணுவத் தளபதியாக ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 30) பொறுப்பேற்கவுள்ள லெஃப்டிணண்ட் ஜெனரல் உபேந்திரா திவேதியும் கடற்படைத் தளபதியான அட்மிரல் தினேஷ் திரிபாதியும் பள்ளி பருவத் தோழர்கள் என்ற சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தின் ரேவா பகுதியில் உள்ள சைனிக் பள்ளியில் இவர்கள் இருவரும் ஒரே வகுப்பில் பயின்றவர்கள். 1970களில் இவர்கள் இருவரும் ஐந்தாம் வகுப்பில் ஒருசேர பயின்றுள்ளனர் என்ற தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஏ. பரத் பூஷண் பாபு எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Listen […]
கோப்பையை வெல்லுமா இந்தியா? பரபரப்பான கட்டத்தில் இறுதிப்போட்டி!
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இந்திய அணிக்கு […]
3 ஆண்டுகளில் திமுக எத்தனை மதுபானக் கடைகளை மூடியுள்ளது? – தினகரன் கேள்வி
சென்னை: ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் இதுவரை எத்தனை மதுபானக் கடைகளை மூடியிருக்கிறது என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “ஆட்சிக்கு வருவதற்கு முன்பு படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் இதுவரை எத்தனை மதுபானக்கடைகளை மூடியிருக்கிறது? சட்டமன்றத்தில் மூத்த அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. Disclaimer :- This story is generated by computerised program and has not been […]
