சென்னை: மாணவார்களுக்கு தரமான மிதிவண்டிகளை வழங்கி வருவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. சனிக்கிழமை (ஜூன் 29) அன்று மாணவர்களுக்கு அரசு வழங்கும் மிதிவண்டிகளின் தரம் குறைந்துள்ளதால், இலவசமாக வழங்கப்பட்ட மிதிவண்டிகளை விற்பனை செய்கிறார்கள் என்று தவறான செய்தி வெளிவந்துள்ளது. மாணவ, மாணவியர்களின் நலன் கருதி ஆண்டுதோறும் இலவச மிதிவண்டிகள் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் […]
Month: June 2024
திருமணத்துக்கு மோடியை வரவேற்ற வரலட்சுமி சரத்குமார்!
நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது திருமணத்துக்காக பிரதமர் நரேந்திர மோடியை தில்லி நாடாளுமன்றத்தில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். நடிகர் சரத்குமார், ராதிகா, வருங்கால கணவர் நிக்கோலாய் சச்தேவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம்வரும் வரலட்சுமி சரத்குமார், மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ்வை திருமணம் செய்யவுள்ளார். ஜூலை 2ஆம் தேதி தாய்லாந்தில் வரலட்சுமி – நிக்கோலாய் திருமணம் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து திருமண வரவேற்பு […]
தில்லியில் கனமழை: மெட்ரோ ரயில்களில் கூடுதலாக 7 லட்சம் பேர் பயணம்
புதுதில்லியில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. இதனால், பல பகுதிகளில் தண்ணீா் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட மற்றும் கடுமையான வெப்பத்திற்குப் பிறகு இறுதியாக பருவமழை தில்லியை வந்தடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்த நிலையில், புதுதில்லியில் கடந்த 20 முதல் 30 மணி நேரத்தில் 228 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தில்லியில் ஜூன் மாத […]
விராட் கோலி, அக்ஷர் படேல் அசத்தல்; தென்னாப்பிரிக்காவுக்கு 177 ரன்கள் இலக்கு!
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இந்திய அணிக்கு […]
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் மாற்றம்!
தொடக்கக் கல்வி இயக்குநராக இருந்த கண்ணப்பன் பள்ளிக் கல்வி இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக இருந்த அறிவொளி இன்று ஓய்வு பெற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேபோன்று அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா, தொடக்கக் கல்வி இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி இயக்குனர் லலிதாவுக்கு, அரசுத் தேர்வுகள் இயக்குநர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசாணையை பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ளார். இந்த […]
கள்ளச் சாராய சம்பவம்: திமுக எம்எல்ஏ-க்கள் மன்னிப்புக் கோர ராமதாஸ், அன்புமணி பதில் நோட்டீஸ்
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் ஆளுங்கட்சியினரை தொடர்புபடுத்தி பேசியதாக தலா ரூ.1 கோடி நஷ்டஈடு கோரி நோட்டீஸ் அனுப்பிய திமுக எம்எல்ஏ-க்கள் இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சார்பில் பதில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷத்தன்மை கொண்ட கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கள்ளச் சாராய வியாபாரிகளுக்கும், தங்களுக்கும் தொடர்பு இருப்பதாகக்கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் […]
குட்டி பத்மினிக்கு எதிரான மோசடி வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
சென்னை: பாஜக நிர்வாகியும், நடிகையுமான குட்டி பத்மினிக்கு எதிரான மோசடி வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மடிப்பாக்கத்தில், ரமேஷ் என்பவருக்கு சொந்தமான சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபு பாஷா என்பவரின் மனைவி இம்ரானா என்பவருக்கு விற்றதாகக் கூறி, நடிகையும், பாஜக நிர்வாகியுமான குட்டி பத்மினிக்கு எதிராக, கடந்த 2011-ம் ஆண்டு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. Disclaimer :- This story […]
ஹிஜாப் அணிந்து தேர்வெழுதிய மாணவிகள்: தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்த இலங்கை கல்வித்துறை!
ஹிஜாப் அணிந்து தேர்வெழுதிய 70 இஸ்லாமிய மாணவிகளின் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் இலங்கை தேர்வாணையம் நிறுத்தி வைத்துள்ளது. இலங்கை திருகோணமலை பகுதியிலுள்ள சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவிகள் கடந்த ஜனவரி மாதம் இலங்கை அரசின் கல்வித்துறையால் நடத்தப்படும் ஏ/எல் உயர்கல்வித் தேர்வுகளை எழுதியுள்ளனர். தேர்வு எழுதுகையில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து அவர்களின் காதுகள் மறைக்கப்பட்டதால் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளதாகத் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. கல்லூரியின் விதிமுறைகளுக்குட்பட்டு முழுதாக மறைக்கும் ஹிஜாபினைப் பயன்படுத்தாமல், மெலிதான வெள்ளைத் துணிகளைத் […]
இறுதிப்போட்டியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பவர் பிளேவில் விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது. டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. இறுதிப்போட்டியில் தோற்றால் ரோஹித் சர்மா கடலில் குதித்து விடுவாரா? என்ன சொல்கிறார் சௌரவ் கங்குலி! இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இந்திய அணிக்கு தொடக்கம் […]
சாத்தூர் வெடி விபத்து: ஆலை உரிமையாளரின் மகன் கைது!
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஆலை உரிமையாளரின் மகனை காவல் துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. ஆலையில் இன்று (ஜூன் 29) காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் ரசாயன மூலப்பொருட்கள் கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பட்டாசு தயாரிப்பு அறைகளும் […]
