சென்னை: புளியந்தோப்பில் அடுக்குமாடி குடியிருப்பு லிப்டில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழந்தார். சென்னை புளியந்தோப்பு கே.பி பார்க் நகர்புற மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு இ பிளாக்கில் 8 மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் கணேசன்(60). இவர் கே.பி.பார்க் அலுவலகம் அருகே டிபன் கடை நடத்தி வந்தார். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited […]
Month: June 2024
பெரியார் பல்கலை., துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு!
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் 19-ஆம் தேதி வரை நீட்டித்து ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார். பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தராக 2021ஆம் ஆண்டு முதல் ஜெகநாதன் பணியாற்றி வருகிறார். அவரின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைய இருந்தது. இதனையடுத்து புதிய துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் பல்கலைக் கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனிடையே பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025 மே […]
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா பேட்டிங்!
டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்கிறது. Disclaimer :- This story is […]
’மோடி அமைதியோ அமைதி..!’ கேலிச்சித்திரம் வெளியிட்டு காங். கண்டனம்
நீட் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எதுவும் பேசாமல் அமைதி காப்பதாக, மோடியை கிண்டலடித்து காங்கிரஸ் கேலிச்சித்திரம் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. Modi On Mute Mode pic.twitter.com/Exat0UkN9o — Congress (@INCIndia) June 29, 2024 காங்கிரஸ் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: நீட் தேர்வித்தாள் கசிய விடப்பட்டதால் நாட்டிலுள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் அபாயத்தில் உள்ளது. 24 லட்சம் இளைஞர்களின் கடின உழைப்பு, அவர்களின் குடும்பங்கள் கடினமாக உழைத்து ஈட்டிய […]
சுகாதாரமான குடிநீரை உறுதிசெய்ய முடியவில்லையா? இபிஎஸ் கண்டனம்
மக்கள் வாழ்வியலுக்கு மிக அடிப்படை தேவையான குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதைக் கூட ஒரு அரசாலும் மாநகராட்சி நிர்வாகத்தாலும் உறுதிசெய்யமுடியவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் சுகாதாரமற்றக் குடிநீரால் 10 பேர் பலியானதாக செய்திகள் வந்துள்ள நிலையில், தலைநகர் சென்னையிலும் […]
நெல்லை மாநகராட்சி தீர்மானத்துக்குப் பின் ஓராண்டாகியும் புதுமைப்பித்தனுக்கு சிலை இல்லை: எழுத்தாளர்கள் வேதனை
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் தீர்மானம் போட்டு ஓராண்டாகியும், புதுமை பித்தனுக்கு சிலை அமைக்கப்படாமல் இருப்பது எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலிக்குப் பெருமை சேர்த்த தமிழ் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடியான புதுமைப்பித்தனின் 76-வது நினைவு நாள் நாளை (ஜூன் 30) அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு நினைவு சின்னம் எழுப்பும் வகையில், பாளையங்கோட்டை மேலக்கோட்டை வாசல் பூங்காவில் அவருக்கு மார்பளவுச் சிலை எழுப்ப திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை அவருக்கு சிலை […]
ஆர்டிஐ சட்டத்தின் கீழ் ஆவணங்கள் கோரியவர் 3 ஆண்டாக இழுத்தடிப்பு: சென்னை ஐகோர்ட் அதிருப்தி
சென்னை: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஆவணங்கள் கோரி விண்ணப்பித்தவரை 3 ஆண்டுகளாக அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் இழுத்தடித்து வருவது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட செஞ்சி தாலுகா பெரியாமூரில் பச்சையப்பன் என்பவரின் தாயாருக்குச் சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு கூட்டுப்பட்டா உள்ள நிலையில் திடீரென அதில் 96 சென்ட் நிலம் புகழேந்தி என்பவரது பெயருக்கு மாறியிருப்பது […]
காட்பாடி செல்லும் மெமு ரயில்கள் ஜூலை 31 வரை ரத்து
திருப்பதி – காட்பாடி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா மெமு விரைவு ரயில், ஜூலை 31-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தெற்கு மத்திய ரயில்வே எல்லைக்குள்பட்ட திருப்பதி ரயில் நிலையத்தில், பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக திருப்பதி – காட்பாடி இடையேயான ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதியிலிருந்து காலை 6.50 மணிக்குப் புறப்படும் திருப்பதி – […]
எதிர்கால பிரதமர் அகிலேஷ் யாதவ்! சமாஜவாதி அலுவலகத்தில் பதாகை!
எதிர்கால பிரதமர் அகிலேஷ் யாதவ் எனக் குறிப்பிட்டு சமாஜவாதி கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகள் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 1ஆம் தேதி சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், லக்னெளவில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்திற்கு வெளியேயும் எதிர்கால பிரதமர் எனக் குறிப்பிட்டு அகிலேஷ் யாதவுக்கு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்தது சமாஜவாதி கட்சி. தேர்தலில் இக்கூட்டணி 43 இடங்களில் வெற்றி […]
மோகத்தால் ரூ. 1.2 லட்சம் மோசடி!
தில்லியில் டேட்டிங் செயலி மூலம் ரூ.1.2 லட்சம் மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தில்லியில் சிவில் தேர்விற்கு படித்துவரும் போட்டித்தேர்வாளர் ஒருவர், டிண்டர் என்ற டேட்டிங் செயலி மூலம் வெர்ஷா என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையில் (ஜூன் 23) வெர்ஷா, தன்னுடைய பிறந்தநாளினைக் கொண்டாடுவதற்காக அந்த போட்டித்தேர்வாளருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரும் வெர்ஷாவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு, விகாஸ் மார்க்கில் உள்ள பிளாக் மிரர் கஃபே என்ற விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு சென்று, […]
