Sorting by

×

மோடி, நட்டாவை எல்லாம் கேள்விப்பட்டதே இல்லை! அவசர நிலைக் காலம் பற்றி லாலு

மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவையில் பேசுகையில், நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25ஆம் தேதி ஒரு கருப்பு நாள் என்றார், இதனை பிரதமர் நரேந்திர மோடி வழிமொழிந்தார். இருவருமே, அரசு மற்றும் அரசமைப்பை நிலைநிறுத்துவதில் ஏற்பட்டிருக்கும் தோல்விகளிலிருந்து மக்களை திசைதிருப்ப முயன்றுள்ளனர் என்கிறார் லாலு பிரசாத் யாதவ். அவசரநிலை குறித்து மத்திய அரசு தொடர்ச்சியாக பேசிவரும் நிலையில், பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் […]

தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூலை 1 முதல் மாணவர் சேர்க்கை

தமிழ்நாட்டில் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூலை 1 முதல் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது. இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2024 – 2025-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, ஜூலை 1 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் […]

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் சூர்யகுமார் யாதவ்; இன்றும் தொடருமா?

டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பார்படாஸில் நடைபெறுகிறது. இரு அணிகளும் லீக் சுற்று மற்றும் சூப்பர் 8 சுற்றுகளில் தோல்வியே காணாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இரண்டு இறுதிப்போட்டி தோல்விகள் இந்தியாவை பாதிக்காது: ராகுல் டிராவிட் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் மற்றும் சூர்யகுமார் தொடர்ச்சியாக தங்களது சிறப்பான ஆட்டத்தை […]

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் டிரைலர்!

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 10 என்றதுக்குள்ள, கோலி சோடா படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விஜய் மில்டன். இவரின் புதிய படம் மழை பிடிக்காத மனிதன். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் மில்டன் கதை எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அவர் என்னை ஏமாற்றிவிட்டார்.. யாரைச் சொல்கிறார் நிவேதா பெத்துராஜ்? இப்படத்தில் இசையமைப்பாளர் ராயின் […]

அமர்நாத் முகாம்களில் மருத்துவமனைகள் அமைத்த ஓஎன்ஜிசி!

காஷ்மீரில் உள்ள இரண்டு அடிப்படை முகாம்களிலும் 100 படுக்கை வசதிகள் கொண்ட இரண்டு மருத்துவமனைகளை ஓஎன்ஜிசி அமைத்துள்ளது. வருடாந்திர அமர்நாத் யாத்திரை இன்று முதல் தொடங்கியுள்ளது. தொடர்ந்து 52 நாள்கள் நடைபெற உள்ளது. அனந்த்நாக்கில் 48 கி.மி நுன்வான்-பஹல்காம் பாதை மற்றும் கந்தர்பாலில் 14 கி.மீட்டர் செங்குத்தான பால்டால் பாதையிலும் மக்கள் பயணிக்க உள்ளனர். பிராந்தியத்தின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையுடன் ஓஎன்ஜிசி நிறுவனம் இணைந்துள்ளது. நிலையான சுகாதார உள்கட்டமைப்பின் அவசியத்தை உணர்ந்து […]

தில்லி விமான நிலைய வடிவமைப்பு யாருடையது? எல்&டி விளக்கம்!

தில்லியில் பெய்து வரும் மழையில் இந்திரா காந்தி விமான நிலையத்தின் மேற்கூரை (முனையம் 1) சரிந்து விழுந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். உலகத் தரம் வாய்ந்த விமான நிலையம் என்று புகழப்படும் தில்லி விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்ததாலும், பல்வேறு இடங்களில் தண்ணீர் கசிந்ததாலும் அதன் வடிவமைப்பு குறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். விமான போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் பிரஃபுல் பட்டேலும் தில்லி விமான நிலையத்தின் மேற்கூரை வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டது எல் & […]

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல்!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் 14 நாள் நீதிமன்றக் காவல் கோரும் சிபிஐ மனு தில்லி நீதிமன்றத்தில் இன்று(ஜூன் 29) விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில், கேஜரிவால் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க சிபிஐ தரப்பில் அனுமதி கோரப்பட்டது. சிபிஐ தரப்பு மனு மீதான விசாரணையில் உத்தரவு பிறப்பிக்காமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், அதைத் […]

விழுப்புரம் – திருப்பதி விரைவு ரயில் ஜுலை 31 வரை பகுதியளவில் ரத்து

விழுப்புரம் – திருப்பதி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில், ஜூலை 31-ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தெற்கு மத்திய ரயில்வே எல்லைக்குள்பட்ட திருப்பதி ரயில் நிலையத்தில், பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக விழுப்புரம் – திருப்பதி இடையேயான ரயில் சேவை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்திலிருந்து தினமும் காலை […]

இரண்டு இறுதிப்போட்டி தோல்விகள் இந்தியாவை பாதிக்காது: ராகுல் டிராவிட்

ஐசிசி தொடரின் இரண்டு இறுதிப்போட்டி தோல்விகள், இந்தியாவின் டி20 உலகக் கோப்பையை வெல்லும் நோக்கத்தை பாதிக்காது என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. தற்போது இந்திய அணி ஐசிசி நடத்தும் தொடரான டி20 உலகக் கோப்பையில் மீண்டுமொருமுறை இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. இறுதிப்போட்டியில் தோற்றால் ரோஹித் சர்மா கடலில் […]

பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து: பிகார் முதல்வர் மீண்டும் கோரிக்கை!

பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு பிகார் முதல்வரும் ஒருங்கிணைந்த ஜனதா தளக்கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார். ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் பொதுக்கூட்டம் இன்று (ஜூன் 29) தில்லியில், கட்சித்தலைவரான பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் தலைவர்கள் உள்பட பல்வேறு கட்சி எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். மேலும் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ஜா, கட்சியின் செயல்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கூட்டத்தின்போது, புதிதாக […]