புதுதில்லியின் வசந்த் விஹாா் பகுதியில் கட்டுமானப் பணியின் கீழ் இருந்த சுவா் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளா்கள் உயிரிழந்தனர். தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீா் தேங்கி, சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், ‘வெள்ளிக்கிழமை(ஜூன் 28) வசந்த் விஹாா் பகுதியில் கட்டுமானப் பணியின் கீழ் இருந்த சுவா் இடிந்து விழுந்ததில் அங்கு பணியில் இருந்த மூவர் இடர்பாடுகளில் சிக்கிக்கொண்டதாக அதிகாலை 5.30 மணியளவில் தில்லி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் […]
Month: June 2024
ஜார்க்கண்டில் பாஜக முற்றிலும் துடைத்தெறியப்படும்: ஹேமந்த் சோரன்
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து பாஜக முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று (ஜூன் 29) தெரிவித்தார். சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து அவர் நேற்று (ஜூன் 28) சிறையிலிருந்து விடுதலையானார். இதனிடையே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தொண்டர்களை தனது இல்லத்தில் இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், சதித்திட்டம் தீட்டி தன்னை சிறையில் […]
ஹரிஷ் கல்யாணின் புதிய படம்!
ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானாலும் பியார் பிரேமா காதல் (2018) படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர்தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். இதன்பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயரைப் பெற்றுள்ளார். இறுதியாக, ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. 5 மொழிகளில் ரீமேக் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக, இவர் நடித்த டீசல் திரைப்படம் […]
இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்லும்; விராட் கோலியின் பயிற்சியாளர் நம்பிக்கை!
இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்லும் என விராட் கோலியின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று (ஜூன் 29) மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி பார்படாஸில் நடைபெறுகிறது. இரண்டு இறுதிப்போட்டி தோல்விகள் இந்தியாவை பாதிக்காது: ராகுல் டிராவிட் இந்த நிலையில், இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்லும் […]
Emergency:`இந்திரா எங்களைச் சிறையிலடைத்தார்; ஆனால் ஒருபோதும் துன்புறுத்தவில்லை’ – லாலு பிரசாத் யாதவ்
நாட்டில் நீட் தேர்வு முறைகேடுகள், தொடர் ரயில் விபத்து சம்பவங்கள், பற்றியெரிந்துகொண்டிருக்கும் மணிப்பூர் என முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வில்லாமல் இருக்கிறது. இப்படியிருக்க, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடரில், இந்தப் பிரச்னைகளை விட்டுவிட்டு, `1975-ல் இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சி (Emrgency) நாட்டின் இருண்ட காலம், அரசியலமைப்பின் மீதான தாக்குதல்’ என, பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸை விமர்சித்துவருகின்றனர். எமெர்ஜென்சி […]
`விஜய்-க்கு தூது விடும் சீமான்..!’ – த.வெ.க ரெஸ்பான்ஸ்தான் என்ன?!
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் த.வெ.க சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடத்த இந்நிகழ்ச்சியில் மைக் பிடித்த விஜய், “தமிழ்நாட்டில் உலகத்தரத்திலான மருத்துவர்கள், பொறியாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், இங்கே எது அதிகமாகத் தேவைப்படுகிறதென்றால், நல்ல தலைவர்கள்தான். […]
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் அறிவிப்பு
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று (சனிக்கிழமை) ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தைச் சேர்ந்தவர் சகாதேவன் (55). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 6 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு […]
“தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை எனில் அரசு பதவி விலக வேண்டும்” – அன்புமணி காட்டம்
சென்னை: “புளித்துப் போன காரணங்களைக் கூறியே மதுவிலக்கை தள்ளிப்போடக் கூடாது. மதுக்கடைகள் இருக்கும்போதே மாநிலம் முழுவதும் கள்ளச் சாராயம் ஆறாக ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. இது அரசின் தோல்வியே தவிர, இதற்கு வேறு காரணங்கள் இல்லை. மது விலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும். உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை என்று உழைக்கும் மக்களின் மீது பழியை சுமத்துவது கண்டிக்கத்தக்கது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக […]
எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெறுவோம்; தென்னாப்பிரிக்க கேப்டன் நம்பிக்கை!
வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும், எந்த சூழ்நிலையிலிருந்தும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று (ஜூன் 29) மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி பார்படாஸில் நடைபெறுகிறது. 2011இல் தோனியும் பெரிதாக ரன் அடிக்கவில்லை: கோலிக்கு ஆதரவாக முன்னாள் வீரர்! இந்த நிலையில், […]
நீலகிரியில் 3 நாள்களுக்கு கனமழை தொடரும்!
நீலகிரியில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் நல்ல வெயிலும், இரவு நேரத்தில் மழையும் பெய்து வருகின்றது. இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூன் 29(இன்று) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]
