Sorting by

×

மருத்துவமனையின் பிழையால் சிறுவனுக்கு பிறப்புறுப்பில் சிகிச்சை!

மகாராஷ்டிரத்தில் காலில் ஏற்பட்ட காயத்திற்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, தவறுதலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பினை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தின் தானே மாவட்டத்தில் உள்ள ஷாஹாப்பூரில் ஒன்பது வயது சிறுவன், கடந்த மாதம் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக ஜூன் 15ஆம் தேதி ஷாஹாப்பூரின் துணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். இந்நிலையில், காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு, மருத்துவர் குழு தவறுதலாக சிறுவனின் […]

உலக சாதனை படைக்க அர்ஷ்தீப் சிங்குக்கு எத்தனை விக்கெட்டுகள் தேவை?

டி20 உலகக் கோப்பையில் இந்திய வேகப் பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கு சாதனை படைக்க நல்ல வாய்ப்பு. 25 வயதான இடது கை வேகப் பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் மத்திய பிரதேசத்தில் பிறந்தவர். ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். ஸ்விங் செய்வதில் வல்லவர். டெத் ஓவரில் (போட்டியின் இறுதிக் கட்ட ஓவர்) சிறப்பாக பந்து வீசக்கூடியவர். இதுவரை நடந்த 7 போட்டிகளில் அர்ஷ்தீப் சிங் 15 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எக்கானமி 7.5ஆக இருக்கிறது. […]

அதே அன்பும், அக்கறையும்.. நீண்ட நாள் கழித்து நடிக்கும் தேவையானி!

சின்னத்திரை நடிகை நீலிமா, தேவையானி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்ட நாள்கள் கழித்து நடிகை தேவையானி நடிக்கவுள்ளதால், ரசிகர்கள் பலர் நீலிமாவின் பதிவுக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சின்னத்திரையில் பிரபலமானவர்கள் என்பதால், இருவரும் புதிய தொடரில் இணைந்து நடிப்பார்கள் என பலர் எதிர்பார்த்த நிலையில், இருவரும் புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதையும் நீலிமா விளக்கியுள்ளார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த தேவையானி, சின்னத்திரையிலும் […]

அவர் என்னை ஏமாற்றிவிட்டார்.. யாரைச் சொல்கிறார் நிவேதா பெத்துராஜ்?

நடிகை நிவேதா பெத்துராஜின் நேர்காணல் பதில் வைரலாகியுள்ளது. மதுரையில் பிறந்தவரான நிவேதா பெத்துராஜ் சினிமா மற்றும் பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். தமிழில், ‘ஒருநாள் கூத்து’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுடன் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் நடித்தார். பின், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு ஆளுங்கட்சித் தலைவர் ஒருவர் […]

மின் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பை அதானி குழுமத்திடம் வழங்கும் தெலங்கானா முதல்வர்!

ஹைதராபாத்திலுள்ள பழைய நகரப் பகுதியின் மின் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பு மற்றும் மின் விநியோக உரிமையை அதானி குழுமத்திற்கு வழங்குவதாக, தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கடந்த வியாழனன்று (ஜூன் 27) தில்லியில் அறிவித்துள்ளார். கௌதம் அதானி குழுமத்திடம் முன்னோடி திட்டமாக பழைய நகரப் பகுதியின் பொறுப்பு வழங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். மின் நுகர்வோர் கட்டணத்தைச் செலுத்தாமல் இருப்பதும், மின்வாரிய ஊழியர்கள் அதனை வசூலிக்கச் சென்றால் அந்தப் பகுதி மக்களால் தாக்குதலுக்கு ஆளாவதுமே தனியாரிடம் பொறுப்பை […]

டேங்கர் லாரியில் வாயு கசிவு: சுவாசித்த கல்லூரி மாணவிகள் மயக்கம்!

டேங்கர் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட ஹைட்ரோகுளோரிக் அமிலம் கசிந்ததால் அதை சுவாசித்த மாணவிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்திலிருந்து எர்ணாகுளம் நோக்கி ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஏற்றிச் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று கேரளத்தின் கண்ணூர் மாவட்டம் ராமாபுரம் அருகே வெள்ளியன்று(ஜூன் 28) மாலை சென்று கொண்டிருந்தபோது, லாரியின் டேங்கரில் பின்புறத்தில் ஓட்டை ஏற்பட்டு அதன் வழியே ஹைட்ரோகுளோரிக் அமிலம் கசிந்ததால் காற்றில் அதன் வாயு பரவியது. இந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே இருந்த […]

சுந்தர். சி – அனுராக் காஷ்யப்பின் ‘ஒன் 2 ஒன்’ டிரைலர்!

சுந்தர்.சி நடிப்பில் உருவான ‘ஒன் 2 ஒன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் கே. திருஞானம் எழுதி இயக்கியுள்ள ‘ஒன் 2 ஒன்’ படத்தில் சுந்தர். சி கதாநாயகனாகவும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடித்துள்ளனர்.  இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் வில்லன் கதராபாத்திரத்தை ஏற்றுள்ளார். மகாராஜா படத்திலும் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தில் ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் அதிரடியாக இதுவரையிலும் […]

`ஆயுள் தண்டனை… ரூ.10 லட்சம் வரை அபராதம்!’ – சட்டப்பேரவையில் நிறைவேறிய மதுவிலக்கு திருத்த மசோதா

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டே கள்ளச்சாராயத்தால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்கு 65 பேர் பலியாகியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கள்ளச்சாராய உயிர் பலிகள் மீண்டும் மீண்டும் நிகழ்வதால், திமுக அரசின் ஆட்சி நிர்வாகத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துவருகின்றன. கூடவே, சிபிஐ விசாரணையையும் எதிர்க்கட்சிகள் கோருகின்றன. கள்ளச்சாராயம் இவ்வாறிருக்க, மதுவிலக்கு சட்டத்தில் தண்டனையைக் கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் கொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற […]

மதுபோதையில் படுத்து தூங்கிய கண்டக்டர்… நடுவழியில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து – பயணிகள் ஷாக்!

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து [ வழித்தட எண்-51 ] சுற்றுவட்டாரக் கிராமங்கள் வழியாக சோளிங்கர் பேருந்து நிலையத்துக்கு மகளிர் கட்டணமில்லாத அரசுப் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் 5 நடைகள் இந்த பேருந்து சென்று திரும்ப வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள்தான் அதிகமாக இந்த பேருந்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். தினமும் மாலை 3 மணிக்கு காவேரிப்பாக்கத்தில் இருந்து புறப்பட வேண்டிய பேருந்து, நேற்றைய தினம் மிகத் தாமதமாக 3.40 மணிக்குத்தான் […]

சென்னையில் உள்ள இந்த விசித்திர கோயில் பற்றி தெரியுமா – முருகனின் ஆறு படைவீடுகளும் ஒரே இடத்தில்!

here is the detailed information about 6 padai veedu of lor Murugan is located in one place in chennai, read all about arupadai veedu Murugan temple in besant nagar, read all about how to reach arupadai veedu Murugan temple in chennai, சென்னையில் ஒரே இடத்தில் அமைந்துள்ள முருகனின் 6 படைவீடு பற்றிய விரிவான தகவல்கள் இங்கே உள்ளன, பெசன்ட் நகரில் […]