நமது ஆட்சியில் எதிர்க்கட்சியின் அவையில் எவ்வளவு நேரம் பேசியுள்ளனர் என்பதையும், அதிமுக ஆட்சியில் நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது நமக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டு ஆட்சிகள் ஜனநாயக பண்பு தெரியும் புரியும் என முதல்வர் மு.க.ஸ்டலின் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலுரை: எதை மறைத்தோம் என்று சிபிஐ விசாரணை கேட்கிறார்கள்? […]
Month: June 2024
தென் அமெரிக்காவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு!
நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது. இதைத் தொடர்ந்து, நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்துக்கு, ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் இரண்டு […]
குற்றங்களைத் தடுக்க நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும்: மு.க. ஸ்டாலின்
குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது அல்ல; குற்ற எண்ணத்தைக் குறைப்பது காவல் துறையின் பணியாக இருக்கும், எனவே, வருங்காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன் என்றார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக சட்டப் பேரவையில், இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றிய போது, காவல் துறையில் கடந்த மூன்றாண்டு காலத்தில் மொத்தம் 190 அறிவிப்புகள் […]
புதிய காவல்நிலையங்கள் உள்ளிட்ட 100 அறிவிப்புகள்: பட்டியலிட்டு பேசிய முதல்வர்
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்கள், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை புறக்காவல் நிலையம் அமைக்கப்படும் என புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டலின் பட்டியலிட்டு பேசினார். தமிழ்நாடு சட்டப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்ட புதிய அறிவிப்புகள்: * கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய […]
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் சனிக்கிழமை (ஜூன் 29) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (45), நடுச்சூரங்குடியைச் […]
ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்தது!
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள விமான நிலையத்தில் மேற்கூரை சரிந்ததில், நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. குஜராத்தில் பெய்த கனமழையில் ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் இருந்த மேற்கூரை கிழிந்து கீழே சரிந்தது. தில்லியில் நேற்று பெய்த கனமழையில், தில்லி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல்-1 மேற்கூரை வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் காயமடைந்தனர். மேற்கூரை ஷீட் தவிர, சப்போர்ட் தூண்களும் இடிந்து விழுந்ததில் முனையத்தின் பிக்-அப் […]
கல்கி வசூல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. நடிகர்கள் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வியாழக்கிழமை (ஜூன் 27) திரையரங்குகளில் வெளியாகி […]
2011இல் தோனியும் பெரிதாக ரன் அடிக்கவில்லை: கோலிக்கு ஆதரவாக முன்னாள் வீரர்!
டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. இன்று இரவு தெ,ஆ. அணியுடன் மோதுகிறது. இந்த டி20 உலகக் கோப்பையின் தொடர் முழுவதும் ( 7 போட்டிகளிலும்) மோசமாக விளையாடியுள்ளார் விராட் கோலி. அதாவது 1,4,0,24,37,0,9 என மொத்தமாக 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரியாக 10.71 என இருக்கிறது. மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார். ரோஹித் சர்மா கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார். […]
தனிஷ்டா பஞ்சமியும், பரிகாரமும்!
நம் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவ ராசிக்கும் பிறப்பு என்பது ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று உண்டு. முக்கியமாக ஒரு மனிதன் இறப்புக்குப் பிறகு உள்ள பல்வேறு ரகசியங்கள் கருட புராணத்தில் சொல்லப்படுகிறது. இவற்றில் இறந்தவரின் ஆன்மாவிற்கு ஒரு சில நாள்களுக்கு அடைப்பு என்ற நிகழ்வு உள்ளது. அவற்றை தனிஷ்டா பஞ்சமி என்பார்கள். அவற்றின் விளக்கத்தைப் பார்ப்போம். ஒருவர் இறந்த மறுகணமே அவரின் உடலை விட்டு அந்த ஆன்மா, அவரவர் கர்மா மற்றும் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப […]
2023ல் திறக்கப்பட்ட ராஜ்கோட் விமான நிலையத்திலுமா? 3 நாள்களில் மூன்றாவது சம்பவம்!
கனமழை காரணமாக குஜராத் மாநிலம் ராஜ்கோட் விமான நிலையத்தில் விமானப் பயணிகள் இறங்கும் மற்றும் வெளியேறும் இடத்தில் இருந்த மேற்கூரை கிழிந்து விழுந்துள்ளது. புது தில்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தபோது, 2009ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டமைப்புதான் இடிந்துவிழுந்ததாக மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு நேற்று விளக்கம் அளித்திருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், 2023ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ராஜ்கோட் விமான நிலையத்திலும் மேற்கூரை கிழிந்து தொங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் சமூக வலைத்தளங்களில் விமரிசித்து வருகிறார்கள். […]
