Sorting by

×

லடாக் வெள்ளப்பெருக்கில் 5 ராணுவ வீரர்கள் பலி: ராகுல் காந்தி இரங்கல்

புது தில்லி: லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் இறந்ததற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார். எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே மந்திர் மோர் அருகே வெள்ளிக்கிழமை மாலை டி-72 ரக ராணுவ டேங்கரில் ஆற்றைக் கடக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நீர் மட்டம் திடீரென அதிகரித்ததன் காரணமாக ராணுவ டேங்கர் விபத்துக்குள்ளானது. இதில், டேங்கரில் இருந்த இளநிலை கமிஷனர் அதிகாரி […]

தாயைப் பிரிந்த குட்டி யானை உயிரிழந்தது ஏன்?

நோய் வாய்ப்பட்டிருந்த தாயிடமிருந்து பிரிந்து, தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த குட்டி யானைக்கு, குடலில் புண் இருந்ததால், உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்றும் வனத்துறை தகவல் அளித்துள்ளது. மருதமலை வனப்பகுதியில் நோய்வாய்ப்படிருந்த தாய் யானையிடமிருந்து பிரிந்த குட்டி யானை கோவையில் இருந்து தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உயிரிழந்தது. தெப்பக்காட்டில் உள்ள யானைகள் முகாமில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வந்த குட்டி யானையின் குடலில் புண் இருந்ததாகவும், […]

மூத்த குடிமக்களுக்கு புனித யாத்திரை திட்டம்: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு!

அனைத்து மதங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான் புனித யாத்திரைத் திட்டத்தை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று அறிவித்தார். சிவசேனை எம்எல்ஏ பிரதாப் சர்நாயக்கின் கவன ஈர்ப்பு நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையில், மாநில சட்டப் பேரவையில் ஷிண்டே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக சர்நாயக் தனது கோரிக்கையில், அனைத்து மதங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்களும் சொந்தமாகப் புனிதப் பயணம் மேற்கொள்வது என்பது இயலாத காரியமாகும். அவர்களுக்கு அரசு வழிவகை செய்ய வேண்டும். ஒருநாள் மழைக்கே மிதக்கும் அயோத்தி: […]

ஆஸ்கர் விழாவில் கிறிஸ் ராக்கை அறைந்த சம்பவம்: பாடலில் கருத்து தெரிவித்த வில் ஸ்மித்?

2022ஆம் ஆண்டு மார்ச் 27இல் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருது விழாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், நடிகர் வில் ஸ்மித்தின் மனைவியின் முடியில்லா தலையைப் பற்றி கேலியாகக் குறிப்பிட்டார். இதனைக் கேட்ட பார்வையாளர்கள் சிரித்தனர். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வில் ஸ்மித் அந்த மேடையிலேறி கிறிஸ் ராக்கைக் கன்னத்தில் அறைந்தார்.  இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையானது. பின்னர், நோயின் காரணமாக மனைவிக்கு முடி கொட்டும் பிரச்னையால் அவருடைய மனது பாதிக்கப்பட்டது. அதனால் கோபத்தில் அடித்தேன் என  வில் ஸ்மித், கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். […]

2024-ல் – அரியலூர் ரயில் விபத்தும் சாஸ்திரியின் ராஜிநாமாவும்… கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ்!

மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து நேரிட்டு இன்னும் 15 நாள்கள்கூட ஆகவில்லை. ஒட்டுமொத்தமாக இந்த நாடும் நாட்டு மக்களும் அதை அப்படியே மறந்துவிட்டு அடுத்தடுத்த செய்திகளுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர், வழக்கம்போல. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம், மக்களவைத் தலைவர் தேர்தல், நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை, நாடாளுமன்றத்தில் அமளி… இன்ன பிறவாகக் கவனக் குவியங்கள் மாறிக்கொண்டே செல்கின்றன. இனி வரும் காலத்தில் அடுத்தடுத்து நேரிடக் கூடிய ரயில் விபத்துகளின்போது வெளியிடப்படும் பட்டியல்களில் இதுவுமொன்றாக இடம் பெறும். ஆனால், உயிரிழந்தோர் மற்றும் […]

பிரபல நடிகைக்கு புற்றுநோய்!

பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான் தனக்கு புற்றுநோய் இருப்பதை அறிவித்துள்ளார். நடிகை ஹினா கான் (36) பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பாராட்டுகளைப் பெற்றவர். பிக்பாஸ் 14 நிகழ்ச்சியில் பங்குபெற்று கவனம் ஈர்த்தார். சமீபத்தில், இவர் புற்றுநோய் தொடர்பாக சிகிச்சை எடுத்து வருவதாகத் தகவல் வெளியானது. இது, வதந்தியாகவே இருக்கும் என ரசிகர்கள் நம்ப மறுத்தனர். இந்த நிலையில், ஹினா கான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு 3ஆம் […]

திமுக அரசின் மதுவிலக்கு திருத்தச் சட்டம் பலன் தருமா?! – ஒரு பார்வை

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. மேலும், அந்தச் சம்பவம் தி.மு.க அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கியது. தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளே போராட்டத்தில் இறங்கின. கள்ளச்சாராயம் இந்த நிலையில், மதுவிலக்கு திருத்தச் சட்டத்தை தமிழக அரசு தற்போது கொண்டுவந்திருக்கிறது. தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். அப்போது அவர், “கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு […]

புதிய காவல்நிலையங்கள் உள்ளிட்ட 100 அறிவிப்புகள்: பட்டியலிட்டு பேசிய முதல்வர்

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்கள், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை புறக்காவல் நிலையம் அமைக்கப்படும் என புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டலின் பட்டியலிட்டு பேசினார். தமிழ்நாடு சட்டப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்ட புதிய அறிவிப்புகள்: * கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய […]

`பின்வாசல் வழியே IAS ஆனாரா ஓம் பிர்லா மகள்?!’ – முதல் முயற்சி வெற்றியும் மீண்டும் கிளம்பிய விவாதமும்

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே (ஜூன் 4) மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், வினாத்தாள் கசிவு, மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு போன்றவை நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பின்னர், நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையில் முன்னேற்றம் தேவை மத்திய கல்வியமைச்சர் கூறியது, அதன் இயக்குநர் நீக்கப்பட்டது, கடைசி நேரத்தில் மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நீட் ஒத்திவைக்கப்பட்டது, நீட் மோசடியில் பீகாரில் ஈடுபட்டதாக இருவரை சிபிஐ கைதுசெய்திருப்பது, தொடர்ந்து […]

கள்ளச் சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை; ரூ.10 லட்சம் அபராதம்: பேரவையில் மசோதா தாக்கல்

சென்னை: கள்ளச்சாராயம் தயாரித்து, விற்றால் ஆயுள் தண்டனை வழங்கவும், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்து மதுவலிக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தீர்மானங்கள், சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு முக்கிய அறிவிப்பாக கள்ளச் […]