Sorting by

×

விக்கிரவாண்டியில் அப்பட்டமான விதிமீறல் – தேர்தல் அதிகாரியை மாற்ற அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்தல் விதிமீறல்கள் மற்றும் வன்முறைகளை ஆளும் திமுக கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்தல் விதிமீறல்கள் மற்றும் வன்முறைகளை ஆளும் திமுக கட்டவிழ்த்து […]

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு: சிபிஐ

சென்னை: "புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்த வேண்டும். இந்தச் சட்டங்களை செயல்படுத்தக்கூடாது. இவற்றை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்தும் தொடர் போராட்டங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவை தெரிவிக்கிறது என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நடைமுறையில் உள்ள, இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளை மக்களுக்கு விரோதமான முறையில் […]

நீட் தேர்வு முறைகேடு: காங்கிரஸுக்கு பேச்சு மட்டுமே, செயலில் பாஜக!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பாஜக நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று (ஜூன் 30) தெரிவித்தார். நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மெளனம் காத்து வருவதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் விமர்சித்திருந்த நிலையில், ரவிசங்கர் பிரசாத் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார். பிகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பாஜக அமையதியாக இல்லை. மாறாக செயலில் இறங்கி […]

ரூ.4,000 கோடி கடன்காரராக இறந்தாரா மைக்கேல் ஜாக்சன்?

பிரபல பாப் இசை சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் இறக்கும்போது ரூ.4000 கோடி வரை கடன் நெருக்கடியில் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல பாப் இசைக்கலைஞரான மைக்கேல் ஜாக்சன் தன்னுடைய 50-வது வயதில், கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 25-ல் இறந்தார். இதுவரை 13 கிராமி விருதுகள் பெற்றுள்ள மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் உலகமெங்கிலும் புகழ்பெற்றவை. இந்த நிலையில், அவர் இறக்கும் போது கடுமையான நிதி நெருக்கடியில் இருந்ததாக அவருடைய எஸ்டேட் நிர்வாகிகள் அது குறித்த விவரங்களை […]

மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; முக்கிய வீரர்கள் இல்லை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று (ஜூன் 30) அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூலை 10 முதல் தொடங்கவுள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு அறிவிப்பு குறித்து பேசிய கௌதம் கம்பீர்! இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. […]

அமுல் நிறுவனம் விவாதத்திற்கான பொருளே கிடையாது: அமைச்சர் மனோ தங்கராஜ்

கோவை: அமுல் நிறுவனம் தமிழகத்திற்குள் வருவது விவாதத்திற்கான பொருளே கிடையாது. அமுல் நிறுவனம் உலகமயமாக்கலுக்கு பின் எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம். நமது பொருட்களுக்கு தேவையும், மக்கள் வரவேற்பு உள்ளதால் கவலைக்கொள்ள தேவையில்லை என பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். கோவையில் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது: ஆவின் நிர்வாகம் முன்னேற்றத்தை நோக்கி சென்று வருகிறது. கடந்த காலங்களில் பால் கொள்முதலில் ஏற்பட்ட தொய்வு நிலையில், இதுவரையில் 36 லட்சம் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு […]

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு!

இந்திய அணியின் ஆல்ரவுண்டரும், இடக்கை சுழற்பந்து வீச்சாளருமான ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “நன்றி நிறைந்த இதயத்துடன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். ஒரு வலிமையான குதிரை பெருமையுடன் துள்ளிக் குதிப்பதைப் போல, நான் எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன். ஆனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். டி20 உலகக் கோப்பையை […]

`பாவ புண்ணியத்தை நம்புகிறவன் நான்; தவறான தீர்ப்பை வழங்கினால்…’- நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடிதம்!

“புத்திசாலியான வழக்கறிஞராக இருப்பதை விட, ஒரு நல்ல வழக்கறிஞராக இருக்க வேண்டும் என்பதுதான் வழக்கறிஞர்களின் நோக்கமாக இருக்க வேண்டும்…” என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். ஜி.ஆர்.சுவாமிநாதன் உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கறிஞர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நான் நீதிபதியாக பொறுப்பேற்று ஏழு ஆண்டுகள் முடிவடையும் நிலையில், இதுவரை ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 685 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளேன். பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்தபோது எத்தனை வழக்குகளுக்கு தீர்வு […]

மதுரை | வண்ணமயமான அங்கன்வாடியாக மாறிய அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு

மதுரை: அழுகை அடங்கி சிரிப்பு சப்தம் கேட்கிறது! மருத்துவமனையா? அல்லது குழந்தைகள் ஓடியாடி விளையாடும் பூங்காவா? எனச் சொல்லுமளவுக்கு காண்போரை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு, வண்ணமயமாகவும், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய பூங்காவாகவும் அமைந்துள்ளது. பொதுவாக தனியார் காப்பரேட் மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சைக்கு வரும் குழந்தைகளிடம் அச்சத்தைப்போக்கி குதூகலத்தை ஏற்படுத்தவும், பொதுமக்களை கவரவும் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவுகள் வண்ணமாயமாகவும், குழந்தைகள் விளையாடும் உபகரணங்களுடனும் அமைக்கப்பட்டிருக்கும். Disclaimer :- This story […]

இரும்பு கடைகளில் இலவச சைக்கிள்கள்! வெளியான அதிர்ச்சி செய்தி! அரசு சொல்லும் பதில் இதுதான்!

இந்த அரசு பொறுப்பேற்று, கடந்த 3 ஆண்டுகளாக 16,73,374 தரமான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மிதிவண்டிகள் ஒப்பந்தப்புள்ளி சட்ட விதிமுறைகளின்படி கொள்முதல் செய்யப்படுகின்றன. மிதிவண்டிகள் தரம் இரண்டு நிலைகளில் உறுதி செய்யப்படுகின்றது என தமிழ்நாடு அரசு விளக்கம் ​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL