மைசூருவில் திரைப்பட நகரத்தை உருவாக்க தனது அரசு உறுதிபூண்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைப்பட நகரத்துக்காக மைசூருவில் 100 ஏக்கர் நிலத்தை எங்கள் அரசு வழங்கியது. தனியார் பங்களிப்புடன் திரைப்பட நகரம் கட்டப்படும். கன்னடத் திரையுலகிற்கு திரைப்பட நகரம் வேண்டும் என்பது மறைந்த ராஜ்குமாரின் கனவு. அதனை அவரது அரசு நிறைவேற்றும். திரைப்பட நகரத்துக்கு முந்தைய பாஜக அரசு எதுவும் […]
Month: June 2024
குவைத்தில் ஹிந்தியில் வானொலி நிகழ்ச்சிகள்: பிரதமர் பாராட்டு
மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி மக்களுடன் உரையாற்றினார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று வானொலி மூலம் ஒலிபரப்பப்படும் ’மனதின் குரல்’ நிகழ்ச்சி, மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ’மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி இன்று(ஜூன் 30) உரையாற்றினார். குவைத் நாட்டின் தேசிய வானொலிப் பிரிவில், ஹிந்தி மொழியில் சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகிறது. இந்த முன்னெடுப்புக்கு அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் பிரதமர் மோடி […]
இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படுகிறது பாஜக: அகிலேஷ் யாதவ்
இட ஒதுக்கீட்டின் அடிப்படை மதிப்பிற்கு எதிராக பாஜக செயல்படுவதாக சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று (ஜூன் 30) குற்றம் சாட்டினார். பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மை மக்களின் கல்வி நிலையை சுட்டிக்காட்டி, விளிம்புநிலை மக்களுக்கு எதிராக பாஜக செயல்படுவதாகவும் விமர்சித்தார். தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர், பழங்குடியினத்தோர், முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டில் பாசாங்கு வேலையைச் செய்கிறது. இவர்களின் குடும்பத்திலிருந்து கல்வி நிலையங்களில் உள்ள பணியிடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை […]
விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு அறிவிப்பு குறித்து பேசிய கௌதம் கம்பீர்!
டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ள இந்திய அணிக்கு முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆட்டத்தின் இறுதி ஓவரில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணிக்கு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இறுதிப்போட்டியில் திருப்புமுனையாக அமைந்த தருணங்கள்! […]
வயிற்றுப்போக்கால் சிறுவன் உயிரிழந்த விவகாரம் | குழாய் குடிநீர் விநியோகத்தை நிறுத்திய சென்னை குடிநீர் வாரியம்
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் வயிற்றுப்போக்கால் சிறுவன் உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் குழாய் மூலமாக குடிநீர் விநியோகிப்பதை நிறுத்திவிட்டு, லாரியில் குடிநீர் விநியோகிக்கும் பணியை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது. சென்னை சைதாப்பேட்டை அபித் காலனியில் வசிக்கும் வெளி மாநிலத் தொழிலாளி ராஜேஷ்குமாரின் மகன் யுவராஜ் (11). வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு, அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Disclaimer :- This story is generated by computerised program […]
பருவ இதழ்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு பயண அட்டை வழங்கப்படுமா? – அமைச்சர் சாமிநாதன் பதில்
சென்னை: செய்தியாளர் அட்டை (Press Pass) பெற்றுள்ள பருவ இதழ்கள் / கால முறை இதழ்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு பேருந்து பயண அட்டை வழங்குவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பத்திரிகையாளர்களுடன் பொது மக்களை மாதந்தோறும் நேரில் சென்று சந்தித்து, அரசின் நலத்திட்டங்கள் மூலம் […]
மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பு – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வலியுறுத்தல்
விழுப்புரம்: மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் இண்டியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக விழுப்புரம் வந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ''ஆட்சியில் உள்ளவர்களை ஆட்டுவிக்கும் சக்தியை இண்டியா கூட்டணி பெற்றுள்ளது. பிரதமரின் மறைமுக வேட்பாளராக ஓ.பன்னீர் செல்வம் ராமநாதபுரத்தில் நிறுத்தப்பட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய […]
சிவகங்கை | வெடிகுண்டு தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்கள் வெடித்ததில் சிதறிய வீடு – இளைஞர் கைது
சிவகங்கை: சிவகங்கை அருகே வெடிகுண்டு தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்கள் வெடித்ததில் வீடு சிதறியது. இது தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். சிவகங்கை அருகே அரசனேரி கீழமேடு பகுதியில் உள்ள ஓட்டு வீட்டில் இன்று திடீரென பலத்த சத்தம் கேட்டது. இதில் வீட்டின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். டிஎஸ்பி சிபிசாய் சவுந்தரயன், இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டி, எஸ்ஐ ஹரிகிருஷ்ணன் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் விசாரணை […]
Anbumani: விக்கிரவாண்டியில் அப்பட்டமான விதிமீறல்! பாமக, அதிமுக நிர்வாகிகள் மீது தாக்குதல்! அன்புமணி ஆவேசம்!
இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்தல் விதிமீறல்கள் மற்றும் வன்முறைகளை ஆளும் திமுக கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. திமுகவினரின் சட்டவிரோத செயல்களை தட்டிக் கேட்ட பா.ம.க. மற்றும் அதிமுகவினர் மீது ஆளும் திமுகவைச் சேர்ந்த குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL
திருப்பதியில் கௌதம் கம்பீர் சாமி தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக முன்னாள் எம்பியுமான கௌதம் கம்பீர் சாமி தரிசனம் செய்தார். மேலும், டி20 உலகக் கோப்பையை இந்தியா வெற்றி பெற்றது குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக தலைவருமான கெளதம் கம்பீர் கூறுகையில், “ஒட்டுமொத்த நாடும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ரோஹித் ஷர்மா மற்றும் இந்திய அணியை வாழ்த்த விரும்புகிறேன்” என்றார். விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் ஓய்வு குறித்து கூறுகையில், “உலகக் கோப்பை […]
