Sorting by

×

‘‘கள்ளச் சாராயத்தை ஊக்குவிக்கும் வகையில் பேசுவதா?’’ – அமைச்சர் துரைமுருகனுக்கு ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: கள்ளச் சாராயத்தை ஊக்குவிக்கும் திமுக அரசுக்கும், அமைச்சர் துரை முருகனுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கள்ளச் சாராய விற்பனை, கள்ளச் சாராய உயிரிழப்புகள், போதைப் பொருட்கள் விற்பனை, மக்களை மதுவிற்கு அடிமையாக்குவது போன்றவைதான் கடந்த மூன்றாண்டு கால திமுக ஆட்சியின் சாதனைகள். இவற்றைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. அண்மையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த […]

டாஸ்மாக்கில் தரம் இல்லை என்பதை அமைச்சரே கூறுகிறார்- பிரேமலதா

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை என்பதால் கள்ளச்சாராயத்தை வாங்கி மக்கள் அருந்துவதாக அமைச்சரே கூறியது கண்டனத்துக்குரியது. கள்ளச்சாராயம் வரக்கூடாது என ஒட்டுமொத்த மக்களையும் குடிகாரர்களாக மாற்றியது அரசுதான். கள்ளச் சாராயத்தால் தமிழ்நாட்டில் இனி ஒரு மரணம் கூட நிகழ கூடாது. தற்போது கைது செய்யப்பட்டவர்கள் மீதும், புதிய சட்டம் பாயுமா?. கள்ளச்சாராயத்தால் கடந்த ஆண்டே 22 பேர் உயிரிழந்துள்ளனர், அரசு இப்போது தான் விழித்துள்ளது. கல்வராயன் மலையில் ஆளுங்கட்சியினர் துணையோடு […]

சிவகங்கை அருகே வெடிகுண்டு மூலப்பொருட்கள் வெடித்துச்சிதறியதால் பரபரப்பு!

சிவகங்கை அருகே வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்கள் சேகரித்து வைத்திருந்த தோட்டத்து வீடு நள்ளிரவில் திடீரென வெடித்துச்சிதறிய சம்பவம் குறித்து காவல்துறையினர் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சிவகங்கை அருகே அரசேனரி கீழமேடு என்ற கிராமத்தில் உள்ள தோட்டத்து மோட்டார் பம்பு செட் அருகே உள்ள ஒரு ஓட்டு வீட்டில் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அரவிந்தன் என்பவர் அவ்வப்போது அங்கு வந்து சென்றுள்ளார். இவர் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை இந்த ஓட்டு வீட்டில் […]

அரக்கு காஃபி முதல் பாரிஸ் ஒலிம்பிக் வரை! பிரதமர் குறிப்பிட்ட விஷயங்கள்

மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி மக்களுடன் உரையாற்றினார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று வானொலி மூலம் ஒலிபரப்பப்படும் ’மனதின் குரல்’ நிகழ்ச்சி, மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ’மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி இன்று(ஜூன் 30) உரையாற்றினார். அவர் பேசியதாவது: இந்திய கலாசாரம் உலகளவில் புகழடைந்து வருவது, நம் ஒவ்வொருவருக்கும் பெருமை. அரசமைப்பின் மீதும் ஜனநாயக செயல்பாட்டின் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கையை […]

நைஜீரியாவில் தொடர் குண்டுவெடிப்பு: 18 பேர் பலி

நைஜீரியாவில் அடுத்தடுத்து 3 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு 18 பேர் பலியானார்கள். நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் உள்ள குவோசா நகரில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் திருமண விழாவில் குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் தன்னிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். தொடர்ந்து பொது மருத்துவமனையை குறிவைத்தும், பின்னர் திருமண குண்டுவெடிப்பில் பலியானவர்களின் இறுதிச்சடங்கு என அடுத்தடுத்து 2 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த தாக்குதல்களில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் […]

“உங்களிடம் நிதி கேட்க நாங்கள் பட்ட கஷ்டம் இப்போது தெரிகிறதா?” – தியாகராஜனிடம் துரைமுருகன் கேள்வி

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியபோது, ‘‘தமிழகத்தில் 30இடங்களில் ஐடி பார்க் அமைக்க கோரிக்கை வந்துள்ளது. ஆனால், இந்த நிதியாண்டுக்கு ஐடி துறைக்கு ரூ.119 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து ஓரளவுக்கு தான் செயல்பட முடியும். கர்நாடகா, தெலங்கானாவில் மொத்த பட்ஜெட் தமிழகத்தை விட குறைவாக இருந்தாலும், ஐடி துறைக்கு கர்நாடகாவில் ரூ.750 கோடி, தெலங்கானாவில் ரூ.776 கோடி ஒதுக்கப்படுகிறது. குறைந்த நிதியில் தமிழக ஐடி துறை சிறப்பாக செயல்படுவதற்கு, தமிழகத்தில் […]

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.14.56 கோடியில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள்

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.14.56கோடியில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.10.92 கோடியில் மூளை ரத்த நாளம் சார் கேத் ஆய்வகம், ரூ.1.2 கோடியில் எம்ஆர்ஐ இணக்கமான மயக்க மருந்து செலுத்தும் உபகரணம் மற்றும் கண்காணிப்பு சாதனங்கள், ரூ.1.25 கோடியில் இதயம் மற்றும் நுரையீரல் கருவி, ரூ.50.85 லட்சத்தில் அதிநவீன அல்ட்ரா சவுண்ட் இயந்திரம், அதி நவீன ரத்தநாள […]

தனியார் நிறுவனங்களின் சுரண்டலை தடுக்க பால் விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தனியார் நிறுவனங்களின் சுரண்டலைத் தடுக்க பால் விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் பால் கொள்முதல் விலையை தனியார் நிறுவனங்கள் பெருமளவில் குறைத்துள்ளன. பால் விலைக் குறைப்பு மட்டுமின்றி, பாலின் தரத்தையும் குறைத்துக் காட்டி குறைந்த விலைக்கு வாங்கி விவசாயிகளை ஏமாற்றுகின்றன. விவசாயிகளை சுரண்டும் தனியார் பால் நிறுவனங்களின் மோசடிகளை அரசு கண்டு கொள்ளாதது மட்டுமின்றி, […]

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு – ஈரோட்டில் இரு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

ஈரோடு: தடை செய்யப்பட்ட அமைப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், ஈரோட்டில் இரு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (ஞாயிற்று கிழமை) சோதனை மேற்கொண்டனர். சட்டவிரோத செயல்பாடு காரணமாக, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) உள்ளிட்ட 8 அமைப்புகள், ஐந்து ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. Disclaimer :- This […]

உலகக்கோப்பையை உச்சிமுகர்ந்த தருணம்: தோனி அனுப்பிய வாழ்த்துச் செய்தி!

முதன் முதலாக கடந்த 2007-ஆம் ஆண்டில் டி20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பிக்கப்பட்டபோது, மகேந்திர சிங் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில், 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. உலகக்கோப்பையை உச்சிமுகர்ந்த இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டு இந்திய […]