புதுதில்லியில் ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டருக்கும் மேல் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. புதன்கிழமை(ஜூலை 31) இரவு வரை மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை ஒரு மணி நேரத்தில் 112.5 மி.மீ. மேல் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மேகவெடிப்பால் குறுகிய நேரத்தில் மிக கனமழை பெய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலைநகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்திலும், நாடாளுமன்ற வளாகத்தினுள்ளும் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏர்படுத்தியுள்ளது. […]
Month: July 2024
Wayanad Landslide: `துயர சம்பவத்தில் தவறான பிரசாரம் கூடாது…’ – அமித் ஷாவுக்கு பினராயி விஜயன் பதில்
கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மரணங்கள் நாட்டையே உலுக்கி உள்ளது. மண்ணுக்குள் புதைந்த மனிதர்களை மீட்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், கேரள அரசு மத்திய அரசின் எச்சரிக்கைப்படி செயல்படவில்லை என்ற ரீதியில் உள்த்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா, “வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படும் என ஒரு வாரத்துக்கு முன்பே கேரள அரசை மத்திய அரசு எச்சரித்தது. தென் மாநிலத்தில் அதிகனமழை […]
மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் திமுக கவுன்சிலர்கள் ரகசிய கூட்டம்: ஓசூர் திமுகவில் பரபரப்பு
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் பங்கேற்காமல் தனியார் ஓட்டலில் ரகசிய கூட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் திமுக 22, அதிமுக 16, பாஜக 1, பாமக,1 காங்கிரஸ் 1 சுயேட்சி 4 என மொத்தம் 45 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்நிலையில் ஓசூர் மாமன்ற கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் மேயர் சத்யா தலைமை வகித்தார். துணை ஆணையாளர் டிட்டோ முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் அதிமுக 16 பேர் , […]
இன்ஃபோசிஸ் மீது ரூ. 32,000 கோடி வரி ஏய்ப்பு புகார்!
இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது ரூ. 32,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்நிறுவனத்தில் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்திருப்பதாவது, இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளிநாடுகளில் கிளைகளை நிறுவி அதன்மூலம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜூலை 2017 முதல் 2021-2022 வரையிலான காலகட்டத்தில், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவைகள் வரி(ஐஜிஎஸ்டி) மூலம் ரூ. 32,000 கோடி வரி ஏய்ப்பு நிகழ்ந்துள்ளதாக ஜிஎஸ்டி இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டு சேவைகளைப் பெற்று […]
பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: டேபிள் டென்னிஸ் வீராங்கனை தோல்வி!
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தோல்வியடைந்தார். பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா 16 ஆவது பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில் ஜப்பானின் மியு ஹிரானோவிடம் தோல்வியடைந்து வெளியேறினார். பாரீஸ் ஒலிம்பிக்ஸ் வில்வித்தை: இந்திய வீராங்கனை அசத்தல்! சௌத் பாரீஸ் அரங்கில் 47 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் எட்டாம் நிலை வீரரான ஹிரானோ 11-6, 11-9, 12-14, 11-8, 11-6 என்ற […]
RSS: `குற்றம்சாட்ட முடியாத நற்சான்றிதழ்களைக் கொண்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ்!’ – துணை ஜனாதிபதி புகழாரம்
“பாஜக ஒரு இந்துத்துவா கட்சி, பாஜக-வின் சித்தாந்த வழிகாட்டியும், பல்வேறு சமயங்களில் மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புமான ஆர்.எஸ்.எஸ்ஸின் (RSS) கொள்கைகளை நிறைவேற்றுவதுதான் மோடி அரசின் வேலை” என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்துவருகின்றன. இவ்வாறிருக்க, ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க கூடாது என்ற 58 ஆண்டுகால தடையை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியிருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆர்.எஸ்.எஸ் இந்த நிலையில், துணை குடியரசுத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தன்கர் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு […]
சவுக்கு சங்கருக்கு திடீர் உடல்நல பாதிப்பு: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
சேலம்: யூடியூபர் சவுக்கு சங்கரை போலீஸார் சென்னைக்கு அழைத்து செல்லும் வழியில், வயிற்று வலி ஏற்பட்டதால் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது. பெண் போலீஸாரை பற்றி அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில், யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். அதேபோல, நீலகிரி போலீஸாரும் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். சென்னை புழல் சிறையில் இருந்த சவுக்கு சங்கரை, உதகை குற்றவியல் நடுவர் மன்றத்தில் […]
மகள், பேத்தியின் உடல்களை குன்னூருக்கு கொண்டு வர இயலாததால் வயநாட்டிலேயே தகனம்: தந்தை கண்ணீர்
குன்னூர்: “மகள் மற்றும் பேத்தியின் உடல்கள் குன்னூருக்கு கொண்டு வர இயலாததால் அங்கேயே தகனம் செய்துவிட்டோம்” என வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த கவுசல்யாவின் தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்தார். வயநாடு நிலச்சரிவில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த கரன்சி பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் கவுசல்யா(26) குடும்பத்துடன் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகள், மருமகன் மற்றும் பேத்தி உயிரிழந்ததை அறிந்து வயநாடு சென்று விட்டு, உடல்களை குன்னூர் கரன்சி பகுதிக்கு கொண்டு வர […]
வயநாடு மக்களுக்கு நிவராணமாக ஒரு மாத அமர்வுக் கட்டணம் அளிக்க குன்னூர் கவுன்சிலர்கள் தீர்மானம்
குன்னூர்: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு குன்னூரில் நடந்த நகராட்சி கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் கவுன்சிலர்கள் அனைவரும் ஒரு மாதத்திற்கான தங்களின் அமர்வுக் கட்டணத்தை நிவாரண நிதிக்கு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றினர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை மற்றும் சுரல்மலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் 190-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 31) குன்னூர் நகராட்சியில் நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு […]
வயநாடு நிலச்சரிவு: அதிமுக ரூ.1 கோடி நிவாரண நிதி – இபிஎஸ் அறிவிப்பு
சென்னை: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக, அதிமுக சார்பில், நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும், என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடுமையான மழைப் பொழிவின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச் சரிவில் […]
