கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரளம் மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலையில் பணியாற்றிவந்த நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்கோடு 1 கிராமம், கொல்லிஅட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்யாணகுமார் (52) செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான […]
Month: July 2024
பேராசிரியர் வைரக்கண்ணு மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் வை. முத்துராஜா தந்தை பேராசிரியர் வைரக்கண்ணு மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் வை. முத்துராஜா தந்தையாரான ஓய்வுபெற்ற பேராசிரியர் வைரக்கண்ணு மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். ஆளாக்கிய தந்தையை இழந்து வாடும் முத்துராஜா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். Disclaimer :- This story is generated […]
மக்கள் எண்ணம் நம் பக்கம்; அதீத நம்பிக்கை வேண்டாம்: சோனியா காந்தி
புது தில்லி: மக்கள் எண்ணம் நம் பக்கம்தான் உள்ளது, ஆனால், அதற்காக மனநிறைவு மற்றும் அதீத நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சோனியா காந்தி அறிவுரை வழங்கியிருக்கிறார். முக்கிய சில மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம், சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, மக்களின் எண்ணம் தற்போது நம் பக்கம்தான் உள்ளது, மக்களவைத் தேர்தலின்போது மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட நற்மதிப்பு […]
மீட்புப் படையினரை தவிர வயநாட்டுக்கு யாரும் வரவேண்டாம்: பினராயி விஜயன்
வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவனந்தபுரத்தில் மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் குழுவினருடன் அவசர ஆலோசனையில் புதன்கிழமை காலை முதல்வர் பினராயி விஜயன் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அரசியல் கட்சிகளுக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் ஒரு ஊரையே காணவில்லை; ஆற்றின் பாதையே மாறியது: மக்கள் கண்ணீர் மேலும், நிவாரண உதவிகளை அளிக்க […]
மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு 1 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 81,500 கன அடியிலிருந்து 1,00,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி வீதமும்; 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 78,500 கன அடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 82,000 […]
திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!
விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் 2003ஆம் ஆண்டில் மதமாற்ற தடைச் சட்டத்தைக் கண்டித்து பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. தற்போது, வழக்கில் ஆஜராகததாலும், வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, அவர் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யாததாலும், திருமாவளவனுக்கு மாவட்ட அமர்வு நீதிபதி […]
அமர்நாத்: 32 நாள்களில் 4.71 லட்சம் பேர் தரிசனம் செய்து சாதனை!
அமர்நாத் யாத்திரையில் இதுவரை 4.71 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குகைக் கோயிலைத் தரிசனம் செய்து சாதனை படைத்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிகழாண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்தாண்டு அமர்நாத் பனி லிங்கத்தை மொத்தம் 4.45 லட்சம் பேர் தரிசித்த நிலையில், இந்தாண்டு 32 நாள்களில் 4.71 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். சிக்கிம் ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு! நேற்று ஒரேநாளில் 5 ஆயிரம் பக்தர்கள் குகைக் […]
மீண்டும் மீண்டுமா? அந்தகன் வெளியீட்டுத் தேதி மாற்றம்!
நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் திரைப்படம் ஹிந்தியில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெற்றிருந்தார். பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக், அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவர் விலக, தியாகராஜனே இப்படத்தை […]
சட்டமன்றத்தில் குட்கா: “உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும்..!” – உயர் நீதிமன்றம்
அ.தி.மு.க ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டிஸை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, உரிமை மீறல் நோட்டிஸை ரத்து செய்து உத்தரவிட்டது. அதை எதிர்த்து முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் […]
மேட்டூர் அணை நீர் வெளியேற்றம் 1.75 லட்சம் கன அடியாக அதிகரிக்கலாம்: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1.75 லட்சம் கன அடியாக மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதையடுத்து காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு, கடந்த 16-ம் தேதி முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர் […]
