Sorting by

×

நிலச்சரிவில் ஒரு ஊரையே காணவில்லை; ஆற்றின் பாதையே மாறியது: மக்கள் கண்ணீர்

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், முண்டைக்கை உள்ளிட்ட சில ஊர்களில், அனைத்தும், மண்ணால் மூடப்பட்டு, அழகிய பகுதிகள் அனைத்தும் இன்று படுபயங்கர போர்க்களம் போல மாறிநிற்கிறது. மிக மோசமாக நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கையில, சில கிலோ மீட்டர் வரை மக்கள் வாழ்ந்த தடயமே இல்லாமல் ஒரு ஊரையே காணவில்லை என்று மக்கள் கதறிக்கொண்டிருக்கிறார்கள். வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகளின்போது, கழுகுப் பார்வையில்தான், எறுவழிஞ்சி ஆற்றின் பாதையே மாறி, ஒரு கிராமத்துக்கு நடுவில் எப்போதும் ஓடிக்கொண்டிருப்பாதைப்போல சலனமில்லாமல் […]

Hamas தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த தாக்குதலில் உயிரிழப்பு… உறுதிப்படுத்திய ஹமாஸ்!

கடந்த ஒரு வருடமாக இஸ்ரேல் – ஹமாஸ் குழுவுக்கு மத்தியில் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் 39,400 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேயும், அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் ஈரானில் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரான் சென்றிருந்தார். இஸ்மாயில் ஹனியே செவ்வாய்க்கிழமை […]

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்: ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் புதன்கிழமை (ஜூலை 31) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் பேசத் தொடங்கியதுமே திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டாக எழுந்து நின்று பேசத் தொடங்கினர். அவர்களிடம், “முதலில் எனது உரையை கேட்டு விட்டு தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். புதுச்சேரி சட்டப் பேரவையில் எனது முதல் உரை இது. வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால் இதுவே கடைசி உரையும்” என்று குறிப்பிட்டு பேசத் தொடங்கினார் ஆளுநர். அப்படியும் சமாதானமாகாத திமுக, காங்கிரஸ் […]

டிஎன்பிஎஸ்சி குளறுபடிகள், முறைகேடுகள் பற்றி விசாரணை தேவை: ராமதாஸ்

சென்னை: "இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணி நியமனத்தில் டிஎன்பிஎஸ்சியின் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் பற்றி விசாரணை தேவை" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்த அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணிக்கான கல்விச் சான்றிதழை சரிபார்ப்பதில் நடைபெற்ற குளறுபடிகள் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற 127 பேருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. Disclaimer :- This story is […]

காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணை திறப்பு: அமைச்சர்கள், ஆட்சியர்கள் மலர் தூவி வரவேற்பு

தஞ்சாவூர்: மேட்டூர் அணை திறக்கப்பட்டதை அடுத்து காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று (புதன்கிழமை) காலையில் கல்லணை திறக்கப்பட்டது. அப்போது அமைச்சர்கள், ஆட்சியர்கள், விவசாயிகள் பூக்கள் தூவி காவிரி தண்ணீரை வரவேற்றனர். கர்நாடக மாநிலம், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், கடந்த 28-ம் தேதி டெல்டா மாவட்ட பாசனத்திற்காகவும், ஆடி பெருக்கு விழாவை கொண்டாடவும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று அணை […]

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த நீலகிரி தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சென்னை: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணகுமார் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம். சோங்கோடு கிராமம், கொல்லிஅட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்யாணகுமார் (வயது 52) என்பவர் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் […]

இணைந்து செயல்பட்டு கட்சியை வலுப்படுத்துங்கள்: சித்தராமையா, டி.கே.சிவகுமாரிடம் ராகுல் வலியுறுத்தல்

புது தில்லி: கா்நாடகத்தில் நடந்து வரும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இருவரும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை செவ்வாய்க்கிழமை சந்தித்தபோது, இரு தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு கட்சியை வலுப்படுத்துமாறும், மாநில அரசை ஒருங்கிணைந்து நடத்துமாறு ராகுல் வலியுறுத்தியதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தில் காங்கிரஸ் தலைவருக்குள் கோஷ்டி பூசல்கள் இருப்பதாகக் கூறப்படும் செய்திகளை அடுத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கட்சியை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். […]

கண்முன் புதைந்த குழந்தைகள்.. வயநாடு நிலச்சரிவில் உயிர் தப்பியவர் பேட்டி!

வயநாடு நிலச்சரிவில் குழந்தைகள் கண்முன்னே புதைந்ததை கண்டதாக உயிர்பிழைத்தவர் பேட்டி அளித்துள்ளார். கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, மேம்பாடி கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் மண்ணுக்குள் புதைந்தனர். இதுவரை 153 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 200-க்கும் அதிகமானோரை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர்பிழைத்தவர்கள், தங்களின் மோசமான அனுபவத்தை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளனர். வயநாடு நிலச்சரிவு முண்டக்கை கிராமத்தை சேர்ந்த […]

யுபிஎஸ்சி தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம்!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதனை நியமித்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. யுபிஎஸ்சி தலைவராக இருந்த மனோஜ் சோனியின் பதவிக்காலம் முடிய ஐந்தாண்டுகள் இருந்த நிலையில், திடீரென சில நாள்களுக்கு முன் ராஜிநாமா செய்தார். இந்நிலையில், அவரது ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், யுபிஎஸ்சி தேர்வுக் குழு உறுப்பினராக இருக்கும் ப்ரீத்தி சுதனை அடுத்த தலைவராக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவிப்பு மேலும், […]

ஜமா டிரைலர்!

ஜமா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜமா. தெருக்கூத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை பாரி இளவழகன் எழுதி, இயக்கியிருக்கிறார். கூழாங்கல் படத்தை தயாரித்த லெர்ன் அண்ட் டெக் புரோடக்‌ஷன் நிறுவனம் ஜமா படத்தை தயாரித்துள்ளது. இதில், பாரி இளவழகன் நாயகனாகவும் அம்மு அபிராமி, சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அழியா மணிவண்ணன்! ஆகஸ்ட் 2 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. தற்போது, படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். […]