கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் சிறப்பு வந்தேபாரத் ரயில், கிருஷ்ணராஜபுரம் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எா்ணாகுளத்தில் இருந்து ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 25 வரை புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் 12.50 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் – பெங்களூரு வந்தேபாரத் சிறப்பு ரயில் (எண்: 06001) அன்று இரவு 10 மணிக்கு பெங்களூரைச் […]
Month: July 2024
கோவை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை: காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற்ற முதல் வெளிநாட்டவா்
நேபாள நாட்டைச் சோ்ந்த பெண்ணுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இந்த சிகிச்சை பெற்ற முதல் வெளிநாட்டுப் பயனாளி இவராவாா். நேபாள நாட்டைச் சோ்ந்த 31 வயதுப் பெண் கடந்த 10 ஆண்டுகளாக குன்னூரில் வசித்து வருகிறாா். நேபாளத்தைச் சோ்ந்த இவரது கணவா் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பண்ணைப் பணியாளராக வேலை செய்து வருகிறாா். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென […]
வயநாட்டில் நிலச்சரிவு: 125 பேர் உயிரிழப்பு
வயநாடு (கேரளம்): கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக, மலைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 125 பேர் உயிரிழந்தனர். 481 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் 90 பேரை காணவில்லை. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பசுமை படர்ந்த மலைகள், வனங்கள் மற்றும் அருவிகளுக்குப் பெயர்பெற்ற மாவட்டம் வயநாடு. இங்கு கடந்த திங்கள்கிழமை வரை இயற்கை எழிலுடன் காட்சியளித்த முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட […]
தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி நிலையம் 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்: இபிஎஸ்-க்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில்
சென்னை: சேலம் தலைவாசலில் உள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையத்துக்கான பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியின்போது சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்ரோட்டில் தொடங்கப்பட்ட கால்நடைப் பூங்கா இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். Disclaimer :- This story is generated by computerised program and […]
சாலையில் மாடுகளை விடுபவர்களுக்கு அபராதம் அதிகரிப்பு: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் தொடங்கியதும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலரும் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவருமான ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மதிமுக கவுன்சிலர்கள் ஜீவன், சுப்பிரமணியன் ஆகியோர் எழுந்து மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்ததுடன் மத்திய பட்ஜெட்டின் நகலையும் கிழித்து எறிந்தனர். அதுபோல காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் மத்திய அரசு பட்ஜெட் நகலை கிழித்து எறிந்தனர். Disclaimer :- This story […]
கேரள நிலச்சரிவு நிவாரணத்துக்காக தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிதி அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை: வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வரிடம் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், நிவாரண பணிக்காக ரூ.5 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுவினர் உடனடியாக கேரளா செல்ல உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடும் மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் அதிக அளவில் உயிரிழப்புகளும், பொது சொத்துகளுக்கு சேதமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனை, […]
மழை பாதிப்பு பகுதிகளில் முன்கூட்டியே 365 மீட்பு வீரர்கள் நிலைநிறுத்தம்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
சென்னை: வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்படும் இடங்களில் இருந்து பொதுமக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் நீலகிரி, கோயம்புத்தூர் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களிலும் மீட்பு, நிவாரணப்பணிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் மேற்கொள்ள, […]
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். Disclaimer :- This story is […]
வயநாடு நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு தலைவர்கள் இரங்கல்: மீட்பு பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்
சென்னை: வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன், மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
சீன முதலீடுகளுக்கு கட்டுப்பாடு: மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை
புது தில்லி: ‘சீன முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள மத்திய அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை மத்திய அரசின் நிலைப்பாடாக எடுத்துக்கொள்ளக்கூடாது’ என மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். சீனாவை இந்தியா மிகவும் சாா்ந்திருப்பதாகவும் அந்த நாட்டில் இருந்து பெறும் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அரசு ஆதரவளிப்பதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.பி.கௌரவ் கோகாய் குற்றம்சாட்டினாா். இதற்கு பியூஷ் […]
