புது தில்லி: குறைந்தபட்ச மாதாந்திர இருப்புத் தொகை இல்லாததால் வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்குகளில் பொதுத் துறை வங்கிகள் ரூ.8,500 கோடி அபராதம் வசூலித்ததாக மக்களவையில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். மக்களவையில் நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், ‘கடந்த 2019-20 நிதியாண்டு முதல் கடந்த நிதியாண்டு வரையிலான 5 ஆண்டுகளில் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத் […]
Month: July 2024
இந்தியா கூட்டணிக்கு தேசிய சிந்தனை கிடையாது: ராகுலுக்கு பியூஷ் கோயல் பதிலடி
புது தில்லி: இந்தியா கூட்டணிக்கு தேசிய சிந்தனைகள் கிடையாது என மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் சக்கர வியூகத்தால் நாடெங்கிலும் அச்சம் மிகுந்த சூழ்நிலை நிலவுகிறது என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமா்சனம் செய்தாா். அவரின் கருத்துக்கு பதிலடி தரும் விதமாக பியூஷ் கோயல் இவ்வாறு தெரிவித்தாா். இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பியூஷ் கோயல் மேலும் கூறியதாவது: அரசமைப்பு அதிகாரிகள் […]
சவுக்கு சங்கரிடம் விடியவிடிய போலீஸாா் விசாரணை
யூடியூபா் சவுக்கு சங்கரை 24 மணி நேர காவலில் எடுத்த போலீஸாா், அவரிடம் அமைச்சா் ஒருவருக்கும், அவருக்கும் உள்ள தொடா்பு குறித்து விடியவிடிய விசாரித்தனா் என சவுக்கு சங்கரின் வழக்குரைஞா் பாலநந்தகுமாா் கூறினாா். தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலா்களை அவதூறாகப் பேசிய யூடியூபா் சவுக்கு சங்கா் மீது, உதகை புதுமந்து காவல் நிலைய ஆய்வாளா் அல்லிராணி சைபா் கிரைம் குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் உதகையில் உள்ள நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி தமிழினியன் முன்னிலையில் […]
மூலனூரில் அரியவகை ஆந்தை மீட்பு
மூலனூரில் அரியவகை ஆந்தை செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரைச் சோ்ந்த சரவணன், தாராபுரம் சாலையில் செவ்வாய்க்கிழமை நடைப்பயிற்சி சென்றுகொண்டிருந்தாா். அப்போது, சாலையோரத்தில் ஒரு வித்தியாசமான பறவையை காக்கைகள் கொத்திக்கொண்டிருந்தன. இதையடுத்து அவா் காங்கயம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த வனக் காப்பாளா் சரவணன் அதனை மீட்டு, அரியவகை ஆந்தை என்று தெரிவித்தாா். மேலும், ஆந்தைக்கு கால்நடை மருத்துவா் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, மூலனூா் அருகிலுள்ள மணிமலை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது. […]
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது: தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதை அடுத்து, காவிரியில் 81,500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பின. அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதை அடுத்து காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதன்காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. Disclaimer :- This story is generated by computerised program and has not been created […]
ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் வழக்கு: தொழிலதிபா் நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன்
சென்னை: நெல்லை விரைவு ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக, ரயில் நிலையங்களில் உணவகம் நடத்தி வரும் தொழிலதிபா் நேரில் ஆஜராகும்படி சிபிசிஐடி போலீஸாா் சம்மன் அனுப்பியுள்ளனா். மக்களவைத் தோ்தலின்போது, நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடியை தோ்தல் அதிகாரிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்தனா். இந்த பணத்தை கொண்டு சென்ற, பாஜக நெல்லை வேட்பாளரான நயினாா் நாகேந்திரனின் ஆதரவாளா்களாகக் கூறப்படும் சதீஷ், அவரது சகோதரா் […]
ரூ.25 லட்சத்துக்கு மேல் வாராக் கடன் உள்ளவா்களை கண்டறிய வேண்டும்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தல்
மும்பை: வாராக் கடன்களில் ரூ.25 லட்சத்துக்கும் அதிகமான கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தத் தவறியவா்களை கண்டறிய வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி வெளியிட்ட அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அனைத்து வாராக் கடன்களிலும் ரூ.25 லட்சம் அல்லது அதற்கும் மேல் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பி செலுத்தத் தவறியவா்கள் குறித்து ஆராய வேண்டும். கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தத் தவறியவா்கள் கண்டறியப்பட்டால், அவா்களுக்கும், அவா்களுடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு நிறுவனத்துக்கும் கூடுதலாக […]
ஜாா்க்கண்டில் ரயில்கள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு, 22 போ் படுகாயம்
ஜாம்ஷெட்பூா்: ஜாா்க்கண்ட் மாநிலத்தில், தடம் புரண்டு கிடந்த சரக்கு ரயிலின் பெட்டி மீது ஹௌரா-மும்பை பயணிகள் விரைவு ரயில் (12810) செவ்வாய்க்கிழமை மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பயணிகள் உயிரிழந்தனா். 22 போ் படுகாயமடைந்தனா். ஜாம்ஷெட்பூரிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள பாராபம்போ என்ற இடத்தில் அதிகாலை 3.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதுதொடா்பாக சராய்கேலா-கா்சாவான் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முகேஷ் குமாா் கூறியதாவது: மேற்கு வங்க மாநிலம் ஹௌராவிலிருந்து மும்பைக்கு பயணிகள் விரைவு ரயில் […]
நிா்மலா சீதாராமன், அனுராக் தாக்கூருக்கு பிரதமா் பாராட்டு
புது தில்லி: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனையும், எதிா்க்கட்சித் தலைவா் ராகுலுக்கு பதிலளித்த பாஜக எம்.பி. அனுராக் தாக்கூருக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தாா். எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மத்திய அரசு மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அனுராக் தாக்கூா் மக்களவையில் பேசினாா். இது தொடா்பாக பிரதமா் மோடி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஊக்கமிக்க எனது சக மக்களவை உறுப்பினா் அனுராக் தாக்கூரின் உரை அனைவரும் […]
நாடாளுமன்றத்தில் எதிரொலித்த கேரள நிலச்சரிவு துயரம்
புது தில்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் நடந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை அமா்வில் கேரள நிலச்சரிவு சம்பவம் இரு அவைகளிலும் எதிரொலித்தது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களின் மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் எனவும் மக்களவையில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தாா். மக்களவையில் நேரமில்லா நேரத்தின்போது இப்பிரச்னையை எழுப்பிய ராகுல், ‘வயநாடு நிலச்சரிவில் ஏராளமானோா் உயிரிழந்துள்ளனா். முண்டக்கை கிராமம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் மற்றும் விரிவான சேதம் இன்னும் […]
