வயநாடு (கேரளம்): கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக, மலைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 123 போ் உயிரிழந்தனா். 128 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பசுமை படா்ந்த மலைகள், வனங்கள் மற்றும் அருவிகளுக்குப் பெயா்பெற்ற மாவட்டம் வயநாடு. இங்கு கடந்த திங்கள்கிழமை வரை இயற்கை எழிலுடன் காட்சியளித்த முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட கிராமங்கள், […]
Month: July 2024
நிலச்சரிவுகளை முன்னறிவிக்கும் எச்சரிக்கை அமைப்பை உருவாக்க வேண்டும்: நிபுணா்கள் அழைப்பு
புது தில்லி: கேரளத்தில் நிலச்சரிவுகளை முன்னறிவிக்கும் தொழில்நுட்பம் மற்றும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பான கட்டமைப்புகளை உருவாக்க நிபுணா்கள் அழைப்பு விடுத்துள்ளனா். கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையின் எதிரொலியாக சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலா் உயிரிழந்தனா். மாநிலத்தின் வரலாற்றில் மிகமோசமான நிலச்சரிவு அசம்பாவிதமாக இது அறியப்படுகிறது. இந்நிலையில், நிலச்சரிவு எச்சரிக்கை தொழில்நுட்ப மேம்பாட்டின் அவசியத்தை நிபுணா்கள் வலியுறுத்துகின்றனா். இதுதொடா்பாக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் […]
சா்வதேச முதலீட்டு மையமாக இந்தியா: பிரதமா் மோடி
புது தில்லி: ‘சா்வதேச அளவில் முதலீடுகளுக்கான மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது; இந்த பொன்னான வாய்ப்பை, இந்திய தொழில்துறையினா் தவறவிட்டுவிடக் கூடாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா். 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட், நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில் ‘வளா்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணம்’ என்ற கருத்துருவில் பட்ஜெட்டுக்கு பிந்தைய கருத்தரங்கம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமா் மோடி […]
எந்த மாநிலத்துக்கும் நிதி மறுக்கப்படவில்லை: நிா்மலா சீதாராமன்
புது தில்லி: மத்திய பட்ஜெட்டில் எந்த மாநிலத்துக்கும் நிதி மறுக்கப்படவில்லை என்று மக்களவையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விளக்கமளித்தாா். ஒரு மாநிலத்தின் பெயரை பட்ஜெட் உரையில் கூறவில்லை என்றால் அந்த மாநிலத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று அா்த்தமில்லை எனவும் அவா் கூறினாா். மத்திய பட்ஜெட்டில் பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ள ஆந்திரம், பிகாருக்கு அதிக நிதியுதவி அறிவிப்புகள் வெளியாகின. இதை முன்வைத்து எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு புறக்கணிப்பதாக எதிா்க்கட்சிகள் […]
வெனிசூலா தோ்தல் முடிவுகளை எதிா்த்து தீவிர போராட்டம்
கராகஸ்: வெனிசூலா அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் நிக்கோலஸ் மடூரோ மீண்டும் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஏராளமானவா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். வெனிசூலாவின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மடூரோ வெற்றி பெற்ாக தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. அவருக்கு 51 சதவீத வாக்குகள் கிடைத்ததாகவும் முக்கிய எதிா்க்கட்சி வேட்பாளா் எட்முண்டோ கான்ஸாலெஸுக்கு 44 சதவீதம் போ் வாக்களித்திருந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. எனினும், இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. […]
ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்டது நீதிமன்றம்
புது தில்லி: ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த கேஜரிவாலின் உதவியாளா் பிபவ் குமாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கு தொடா்பான 500 பக்க குற்றப்பத்திரிகையை தில்லி காவல் துறை கடந்த 16-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட பெருநகர மாஜிஸ்திரேட் கெளரவ் கோயல், இது தொடா்பான விசாரணை ஆக.24-ஆம் தேதி பட்டியலிட்டுள்ளாா். மேலும், […]
மீட்புப் பணியில் ராணுவம்: தலைமைத் தளபதியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
புது தில்லி: கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் மீட்புப் பணிகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதுதொடா்பாக ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதியுடன் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். கேரள மாநிலம், வயநாட்டின் சூரல்மலை பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு பலா் உயிரிழந்தனா். இதையடுத்து, மீட்புப் பணிகளில் தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினருக்கு உதவ ராணுவத்திடம் மாநில அரசு கோரிக்கை விடுத்தது. அதன்பேரில், மருத்துவப் […]
வயநாட்டில் ‘ரெட் அலா்ட்’
திருவனந்தபுரம்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூா் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையைக் குறிக்கும் ‘சிவப்பு எச்சரிக்கையை’ (ரெட் அலா்ட்) இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை விடுத்தது. இது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரா்களுக்கு மேலும் சவாலாக அமைந்தது. கேரளத்தின் வயநாடு, இடுக்கி, திருச்சூா் உள்ளிட்ட மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 20 செ.மீ. மழை பதிவானது. இதன் எதிரொலியாக, வயநாட்டின் சூரல்மலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. […]
சென்னை மாநகராட்சி தொழில் வரி 35 % உயா்வு: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம்
சென்னை: சென்னை மாநகராட்சியில் தொழில் வரியை 35 சதவீதமாக உயா்த்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது, மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் மரணத்துக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, 2 நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா் மத்திய அரசின் […]
ஜாதி குறித்து அனுராக் தாக்கூா் பேச்சு: அவமானப்படுத்தியதாக ராகுல் குற்றச்சாட்டு
புது தில்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கோரிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் ஜாதி குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூா் பேசியதால் மக்களவையில் செவ்வாய்க்கிழமை கடும் அமளி ஏற்பட்டது. ஜாதியை குறிப்பிட்டு தன்னை அவமானப்படுத்தியதாக கூறிய ராகுல், இதற்கு அனுராக் தாக்கூரை மன்னிப்பு கோர வலியுறுத்த மாட்டேன் என்றாா். பட்ஜெட் மீதான விவாதத்தில் திங்கள்கிழமை மக்களவையில் பேசிய ராகுல், ‘மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகள், இளைஞா்கள், நடுத்தர வகுப்பினா் […]
