வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 240-ஆக உயர்ந்துள்ளது. வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக, மலைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறைந்தபட்சம் 225 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இரண்டாவது நாளாக மோசமான வானிலைக்கு இடையே ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, காவல் துறையினா், தீயணைப்புப் படையினா் உள்ளிட்ட பல்வேறு முகமைகள் […]
Month: July 2024
ஹமாஸ் தலைவர் கொலை: இஸ்ரேல்தான் காரணமா? ஹமாஸ் குற்றச்சாட்டு!
ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியான் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரானுக்கு பயணம் மேற்கொண்ட இஸ்மாயில் ஹனியா(62), இன்று(ஜூலை 31) அதிகாலை கொல்லப்பட்டுள்ளார். உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் இஸ்மாயில் ஹனியா தங்கியிருந்த கட்டடத்தை நோக்கி வான்வழி ஏவுகணை மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இஸ்மாயில் ஹனியா உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ஏவுகணை எங்கிருந்து அனுப்பட்டுள்ளது […]
Redpix Felix Gerald : சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்! ரெட்பிக்ஸ் சேனலை இழுத்து மூட உத்தரவு!
Redpix Felix Gerald: சர்ச்சைக்குரிய நேர்காணலை ஒளிபரப்பு செய்த ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
ரயில் ஓட்டுநர்களின் பணி நேரம், ஓய்வு குறித்து ஆராய ரயில்வே வாரியம் உத்தரவு
சென்னை: ரயில் ஓட்டுநர்களின் பணி நேரம், ஓய்வு குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ரயில்கள் இயக்கத்தில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்கள்) முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்திய ரயில்வேயில் நாடுமுழுவதும் மொத்தம் 50,000-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணியை முடித்த பிறகு வழங்கப்படும் 16 மணி நேர ஓய்வு மற்றும் வார ஓய்வு மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. தொடர் இரவுப் பணி, கூடுதல் பணிச்சுமை ஆகியவற்றால் அவர்களின் […]
அமித் ஷாவின் குற்றச்சாட்டுக்கு கேரள முதல்வர் மறுப்பு!
கேரள அரசின்மீது அமித் ஷா கூறிய குற்றச்சாட்டுக்கு கேரள முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளார். புது தில்லியில் இன்று (ஜூலை 31) நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, கேரளத்தில் ஏற்பட்ட பேரிடர் குறித்து ஒரு வாரத்திற்கு முன்பாகவே மத்திய அரசு முன்னெச்சரிக்கை விடுத்திருந்ததாக கூறியிருந்தார். முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டும், கேரள அரசு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார். இந்நிலையில், அமித் ஷாவின் குற்றச்சாட்டிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்துள்ளார். […]
ஒடிசா துறைமுகத்தில் சீனக் கப்பல் சிறைப்பிடிப்பு!
ஒடிசா மாநிலத்தின் பரதீப் துறைமுகத்தில் பண விவகாரம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து சீன சரக்குக் கப்பலை துறைமுக அதிகாரிகள் சிறைப்பிடித்தனர். அட்மிரால்டி சட்டம் எனப்படும் கடல்சார் சட்டப்படி கடல்சார்ந்த உரிமைகோரல்களை அமலாக்குவது தொடர்பாக எந்தவொரு கப்பலின் உரிமை, கட்டுமானம், உடைமைகள், நிர்வாகம், செயல்பாடு மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் அடிப்படையில் கப்பலை சிறைப்பிடிக்கலாம் என கூறப்படுகிறது. கப்பல் உரிமையாளருக்கும் கப்பலுக்கு மரைன் பெட்ரோல் அனுப்பிய நிறுவனத்துக்கும் இடையே பணம் வழங்குவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. கப்பலின் உரிமையாளர் […]
ஒலிம்பிக்: இறுதிச் சுற்றுக்கு தேர்வான ஸ்வப்னிலுக்கும் தோனிக்கும் இவ்வளவு ஒற்றுமைகளா?
மகாராஷ்டிர மாநிலம் கம்பல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 29 வயதான ஸ்வப்னில். 2012 முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது இந்தியாவின் சார்பாக 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவர் தகுதிச் சுற்றில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். ஸ்வப்னிலுக்கும் தோனிக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. தோனி இரயில்வேயில் பணியாற்றி மிகப்பெரிய கிரிக்கெட்டராக மாறினார். அதேபோல் ஸ்வப்னிலும் 2015இல் இரயில்வேயில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. பாட்மின்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்ற லக்ஷயா சென், […]
கழுத்தளவு மண்ணில் புதைந்தபடி கூக்குரலிட்ட பெண்! மீட்க முடியவில்லை -உயிர்பிழைத்த நபர்
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி பகுதியைச் சுற்றியுள்ள முண்டக்கை, சூரல்மலா, அட்டமலா, நூல்புழா கிராமங்களில் அடுத்தடுத்து 3 முறை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் அப்பகுதிகள் உருக்குலைந்து போயுள்ளன. நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மாவட்டத்தில் மீட்புப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. 2-வது நாளாக மீட்புப்பணி தொடருகிறது. குழந்தைகள், பெண்கள் உள்பட 174 போ் உயிரிழந்துள்ளதாகக் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவுகளில் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்பதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது. இதுவரை 160 பேரின் உடல்கள் […]
மோசடியாக நிலம் விற்கப்பட்ட விவகாரம்: காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடிகை கவுதமி ஆஜர்
காஞ்சிபுரம்: தனது நிலம் மோசடியாக விற்கப்பட்ட விவகாரத்தில் நடிகை கவுதமி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 31) நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். நடிகை கவுதமி மற்றும் அவரது அண்ணன் ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு சொந்தமான நிலம் திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்ய கடந்த 2015-ம் ஆண்டு தனது உதவியாளராக இருந்த அழகப்பன் என்பவரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த நிலத்தை அழகப்பன் பேருக்கு சுங்குவார் சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கவுதமி பவர் […]
தூத்துக்குடி மாநகராட்சியின் காலி இடங்களில் இனி விளையாட்டு மைதானங்கள்: மேயர் அறிவிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலியாக உள்ள இடங்களில் கைப்பந்து, கூடைப்பந்து விளையாட்டு மைதானங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாமன்ற கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. ஆணையர் லி.மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் பேசுகையில், ''கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் மண்டல வாரியாக மக்கள் […]
