Sorting by

×

“மத்திய அரசு நிதியை ஒதுக்காததே மின் கட்டண உயர்வுக்கு காரணம்” – எர்ணாவூர் நாராயணன்

திருவாரூர்: “தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காததே மின் கட்டண உயர்வுக்கு காரணம்” என பனைமரத் தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார். திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்க துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், […]

மாவட்ட ஆட்சியருக்கான தனி எழுத்தரின் பணி விவரங்கள் – பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னை: மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கல்வி செயல்பாடுகளுக்காக நியமிக்கப்பட்ட தனி எழுத்தரின் பணி விவரங்களை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: 'பள்ளிகளில் கல்வி முறைகள் மற்றும் தரநிலைகளை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் ஆய்வு நடத்தப்பட வேண்டுமென தலைமைச் செயலர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி மாவட்டக் கல்வி ஆய்வு, கல்வி வளர்ச்சி குறைதீர் நாள், […]

வயநாடு நிலச்சரிவில் நீலகிரியைச் சேர்ந்த மேலும் இருவர் உயிரிழப்பு

கூடலூர்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஏராளமான மக்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி […]

Savukku Shankar vs Udhyanithi: ’என் கைதுக்கு உதயநிதி ஸ்டாலினே காரணம்!’ யூடியுபர் சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி!

உதகையில் இருந்து சென்னைக்கு அழைத்து செல்லப்பட்ட சவுக்கு சங்கருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சேலம் அடுத்த ஆத்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

கர்நாடகத்தில் பாஜக – மஜத உறவில் விரிசல்? நடைப்பயணத்தில் பங்கேற்கப் போவதில்லை -குமாரசாமி

கர்நாடகத்தில் பாஜக – மஜத உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், மைசூரு நகர வளா்ச்சிக் கழகம் மாற்று வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது பாஜக. வீட்டுமனை ஒதுக்கீட்டில் ரூ. 4,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் முதல்வா் சித்தராமையா ராஜிநாமா செய்யக் கோரி ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கி 7 நாள்கள் நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, பெங்களூரு, கெங்கேரியில் ஆக. 3ஆம் […]

பாட்மின்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்ற லக்ஷயா சென், பிவி சிந்து!

உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டி நிகழாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற்று வருகின்றன. 2024-இல் பாரீஸில் ஜூலை 26-இல் தொடங்கி ஆக. 11-ஆம் தேதி வரை நடைபெறுவது 33-ஆவது ஒலிம்பிக் போட்டியாகும். இதில் 196 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 10,672 வீரர், வீராங்கனைகள் 32 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். பிரான்ஸ் முழுவதும் 35 மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பாட்மின்டனின் இந்திய வீரர் லக்ஷயா சென், வீராங்கனை […]

விடாது கருப்புபோல கேரளத்தில் மீண்டும் கனமழை!

கேரளத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கேரளத்தில் நிலச்சரிவால் கடுமையாக பாதிப்படைந்த முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, இருவழிஞ்சி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக வருவதால், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். சூரல்மலை – முண்டக்கை இடையே இரும்பு பாலம் அமைக்கும் பணியிலும் தொய்வு ஏற்பட்டது. என் கைதுக்கு உதயநிதிதான் காரணம்: சவுக்கு சங்கர் பருவமழையால் பெய்த கனமழையால், வயநாட்டில் ஏற்பட்டு நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தவர்களில் 175-க்கும் மேற்பட்டோரின் […]

வயநாடு நிலச்சரிவு: 1,500க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்பு -கேரள முதல்வர்

நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மாவட்டத்தில் மீட்புப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. 2-வது நாளாக மீட்புப்பணி தொடருகிறது. குழந்தைகள், பெண்கள் உள்பட 174 போ் உயிரிழந்துள்ளதாகக் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவுகளில் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்பதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது. இதுவரை 160 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், 191 பேரைக் காணவில்லை என்றும் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து இதுவரை 1,592 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி […]

இன்றைய ரயில் விபத்து நிலவரம்: மேற்குவங்கத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டது

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் ரங்கபாணி என்ற இடத்தில் சரக்கு ரயிலின் 2 வேகன்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்தபோது, அதிலிருந்த இரண்டு வேகன்கள் மட்டும் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் தற்போது விபத்து நேரிட்டப் பகுதியில்தான், கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், அதே இடத்தில் இன்று […]

ஒலிம்பிக்ஸ்: இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்ற ஸ்வப்னில்! துப்பாக்கி சுடுதலில் 3ஆவது பதக்கம் வெல்ல வாய்ப்பு!

உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டி நிகழாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற்று வருகின்றன. 2024-இல் பாரீஸில் ஜூலை 26-இல் தொடங்கி ஆக. 11-ஆம் தேதி வரை 33-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 196 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 10,672 வீரர், வீராங்கனைகள் 32 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். பிரான்ஸ் முழுவதும் 35 மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. இதில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. […]