பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் வில்வித்தையில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். உலகின் முன்னாள் நம்பர்.1 வீராங்கனையான இந்திய வில்வித்தை வீராங்கனையான தீபிகா குமாரி, பெண்களுக்கான தனிநபர் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று, பாரீஸ் ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்று முன்னேறினார். நான்கு முறை ஒலிம்பியனான தீபிகா, புதன்கிழமை லெஸ் இன்வாலைட்ஸ் மைதானத்தில் நடந்த 32 ஆவது சுற்றில் நெதர்லாந்து வில்வீரர் குயின்டி ரோஃபெனை 6-2 என்ற கணக்கில் தோற்கடித்தார். தீபிகா முதல் செட்டில் வெற்றிபெற்றார். ஆனால், […]
Month: July 2024
வேலூர்: `நீ சாப்பிடுமா, நான் வச்சிருக்கிறேன்’ – பையில் போட்டு பச்சிளம் குழந்தை கடத்தல்!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டுக்கு அருகேயுள்ள அரவட்லா மலைக் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கோவிந்தன் – சின்னு. கர்ப்பமாக இருந்த சின்னு கடந்த 27-ம் தேதி இரவு பிரசவத்துக்காக வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் விடியற்காலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, குழந்தை நல வார்டுக்கு குழந்தையுடன் சின்னு மாற்றப்பட்டார். இந்த நிலையில், இன்று காலை 7:15 மணியளவில் சின்னுவின் கணவர் சாப்பாடு வாங்கி வந்து கொடுத்துவிட்டு, மீண்டும் வெளியே சென்றதாக தெரிகிறது. […]
சென்னை விமான நிலையத்துக்கு 2 மாதங்களில் 10-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து மும்பை, கோவா, பெங்களூரு செல்லும் விமானங்களில் சோடியம் கரைசல் எனப்படும் திரவ வடிவிலான குண்டுகள் வைக்கப்பட்டுள்ளது என்று சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு புதன்கிழமை பகல் 12 மணி அளவில் இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சம்பந்தமான அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த […]
மேகேதாட்டு விவகாரம்: கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
சென்னை: “மேகேதாட்டு அணை விவகாரத்தில், கர்நாடக காங்கிரஸ் அரசு அவமானப்படுத்தியிருப்பது திமுக என்ற கட்சியை அல்ல. காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்படுவது திமுகவுக்குப் புதிதும் அல்ல. ஆனால், ஒட்டு மொத்த தமிழக மக்களையும், விவசாயிகளையும் மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு. காங்கிரஸ் கட்சியின் இந்த எதேச்சதிகாரப் போக்கினை தமிழக பாஜக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “மேகேதாட்டு அணை தொடர்பாக, […]
காஞ்சிபுரம் அருகே ராணுவ பயிற்சி ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் இன்ஜின் கோளாறு காரணமாக இன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் இரு விமானப் படை வீரர்கள் இருந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் பகுதியில் திருவந்தார் அருகே சாய்பாபா கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலின் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புதன்கிழமையன்று திடீரென தரையிறங்கியது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் […]
Annamalai: ’கார் ரேஸ் விவகாரம்! அரசியலுக்கு வந்தீங்களா? நடிக்க வந்தீங்களா? அண்ணாமலைக்கு திருச்சி சூர்யா சரமாரி கேள்வி!
தமிழ்நாடு பாஜகவினரால் மிரட்டப்பட்ட தொழிலதிபர்கள் லிஸ்ட் வேண்டுமா? இந்திய அளவில் அமலாக்கத்துறையை ஏவி, பின்னர் தேர்தல் பத்திரத்திற்கு பணம் வசூலிக்கப்பட்ட கதை தான் ஊரே நாறியது? Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL
பூஜா கேத்கரின் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி ரத்து!
தனது பதவியை தவறாக பயன்படுத்திய புகாரில் சர்ச்சையில் சிக்கிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தேர்ச்சி ரத்து செய்யப்படுவதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. பதவியை தவறாக பயன்படுத்திய முறைகேடு புகார்களில் சிக்கிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கரின் தேர்ச்சியை, மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் ரத்து செய்துள்ளது. மேலும், வருங்காலங்களில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு குடிமைப் பணியியல் தேர்வில் தேர்ச்சி பெற்ற பூஜா கேத்கர், தன்னுடைய ஜாதி, பெற்றோர், […]
கேரளத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை நீடிக்கும்!
கேரளத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பருவமழையால் பெய்த கனமழையால், வயநாட்டில் ஏற்பட்டு நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தவர்களில் 175-க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. 200 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ராணுவம் மீட்டுள்ளது. மக்கள் எண்ணம் நம் பக்கம்; அதீத நம்பிக்கை வேண்டாம்: சோனியா காந்தி கேரளத்தைப் புரட்டிப்போட்ட நிலச்சரிவில் ராணுவம், காவல்துறையினர், கடற்படையினர், விமானப்படையினர் […]
என் கைதுக்கு உதயநிதிதான் காரணம்: சவுக்கு சங்கர்
என் கைதுக்கு அமைச்சர் உதயநிதிதான் காரணம் என்று யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்தார். சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், நீலகிரி போலீஸார் கோவையிலிருந்து சென்னைக்கு வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக, சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக அழைத்து சென்றனர். இதனிடையே, உதகை சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் புகார் அளித்தன் பேரில் சென்னையிலிருந்து கடந்த 29-ந்தேதி, விசாரனைக்கு அழைத்து சென்ற நிலையில் உதகை ஜே.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் சென்னைக்கு அழைத்து […]
பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் லவ்லினா!
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். குத்துச்சண்டை 75 கிலோ பெண்கள் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லவ்லினா வெற்றி பெற்றுள்ளார். நார்வே வீராங்கனை ஹோஃப்ஸ்டாடை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி லவ்லினா காலிறுதிக்கு முன்னேறினார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 இல் வெல்டர்வெயிட் பிரிவில் (69 கிலோ) லவ்லினா போர்கோஹைன் வெண்கலப் பதக்கம் வென்றார். 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் விஜேந்தர் சிங் மற்றும் லண்டன் ஒலிம்பிக் 2012 இல் மேரி […]
