Sorting by

×

தமிழகத்தில் 9,050 எம்பிபிஎஸ் இடங்கள்; அக்.1 முதல் வகுப்புகள்: மா. சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 9050 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளது. இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய சேர்க்கை இடங்கள் எதுவும் இல்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார். மேலும், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை 2024- 25ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 14 தேதி தொடங்கும் என்றும் தெரிவித்தார். சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட ஜெயிக்கா கட்டடத்தின் […]

`பாதுகாப்பின்றி சாலையில காத்து கிடக்குறோம்’- புது பேருந்து நிறுத்த கட்டடம் கோரும் கேம்பலாபாத் மக்கள்

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரியை அடுத்துள்ள ஊர், கேம்பலாபாத். திருச்செந்தூர் செல்லும் வழிப்பாதையில் வலது புறம் உள்ள இந்த ஊரில், சுமார் 540 வீடுகள் உள்ளன. 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்துவருகின்றனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17-ம் தேதி ஏற்பட்ட மழை வெள்ளத்தால், கேம்பலாபாத் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. சிறிய கிராமமான கேம்பலாபாத்தில் நான்கு தெருக்கள், இரண்டு கடைகள் மட்டுமே உள்ள. எனவே மக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய மற்ற ஊர்களுக்குச் செல்ல […]

Thirumavalavan: மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிரான பேரணி வழக்கு… திருமாவளவனுக்கு பிடிவாரன்ட்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவனுக்கு, 2003-ம் ஆண்டு வழக்கில், நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்திருக்கிறது. முன்னதாக, கடந்த 2003-ல் மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக வி.சி.க சார்பில் திருமாவளவன் தலைமையில் காவல்துறை அனுமதியுடன் நடைபெற்ற பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதில், பொது சொத்துகள் சேதமடைந்ததாக போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். திருமாவளவன் மேலும், இது தொடர்பான வழக்கை விசாரித்துவந்த மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் அனுப்பிய சம்மன்களுக்கு திருமாவளவன் ஆஜராகாமலிருந்திருக்கிறார். இவ்வாறிருக்க, மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி […]

ராணிப்பேட்டை: `என் நிலத்துக்கு நானே லஞ்சம் தரணுமா..?’ – தாசில்தாருக்கு `செக்’ வைத்த நபர்!

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் குட்டைத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்குச் சொந்தமான ஏறக்குறைய அரை ஏக்கர் நிலம், திண்டிவனம் – நகரி இடையிலான ரயில் பாதைத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. நில மதிப்பீட்டுத் தொகையாக ரூ.6.27 லட்சம் கோவிந்தராஜிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், `உயில்’ பத்திரத்தை கேட்டு ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் செயல்படும் நில எடுப்பு தாசில்தார் அலுவலகத்தை அணுகியபோது… `பத்திரம் வேண்டுமானால் நில மதிப்பீட்டுத் தொகையில் இருந்து 1 சதவிகதத்தை கமிஷனாக தர வேண்டும்’ […]

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு: ஆயிரக்கணக்கான வாழைகள் நீரில் மூழ்கின

மேட்டுப்பாளையம்: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துவருவதால், சிறுமுகை பகுதியில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் நீரில் மூழ்கின. கோவை மாவட்டம், சிறுமுகையில் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியான லிங்காபுரம், காந்தவயல் உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் பெருமளவில் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கதளி, ரோபஸ்டா, நேந்திரன் ஆகிய வாழைகளை பயிரிட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு வாழைத்தார்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கேரளா […]

புதுச்சேரி அரசை எதிர்த்த பாஜக அமைச்சருக்கு அதிகாரம் குறைப்பு; அமைச்சர் திருமுருகனுக்கு துறைகள் ஒதுக்கீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சராகப் பொறுப்பேற்று நான்கரை மாதங்களுக்குப் பிறகு திருமுருகனுக்கு இன்று (ஜூலை 31) துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பாஜக அமைச்சருக்கு அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. புதுவை அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒரேயொரு பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அவரிடம் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலம், வீட்டுவசதி, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, கலைப்பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறைகள் இருந்தன. அமைச்சர் நீக்கத்தால் அத்துறைகளை முதல்வர் […]

கோவையில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான மாநகராட்சி இடம் மீட்பு

கோவை: கோவை அருகே கிருஷ்ணா நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 16 சென்ட் இடம் மீட்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட 51-வது வார்டில் கிருஷ்ணா நகர் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதி கடந்த 1980ம் ஆண்டு 7 ஏக்கர் பரப்பளவில் 100 மனைகளாக பிரிக்கப்பட்ட இடம் ஆகும். இதில் நான்கு இடங்கள் அதாவது 16 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடமாக அப்போது ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டு பொது […]

ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கியது ஐகோர்ட் – யூடியூப் சேனலை மூடவும் உத்தரவு

சென்னை: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைதான யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம், அவரது யூடியூப் சேனலை மூட உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை பெண் அதிகாரிகளை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் கைதான சவுக்கு சங்கர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்டு […]

சென்னை விமான நிலையத்தில் தீவிரவாதிகள் விமானத்தை கடத்த முயற்சிப்பதை தடுக்கும் பாதுகாப்பு ஒத்திகை

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் திடீரென தீவிரவாதிகள் விமானத்தை கடத்த முயற்சி செய்தால், அதனை எவ்வாறு முறியடித்து, தீவிரவாதிகளை மடக்கிப் பிடித்து, விமானத்துக்கும், பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை இன்று நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையின்போது, தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் திடீரென விமான நிலையத்தின் உள் பகுதியில், பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் புகுந்துவிட்டனர். அவர்கள் சென்னையில் இருந்து புறப்பட இருக்கும் ஒரு விமானத்துக்குள் ஊடுருவி, அந்த […]

ஆம்பூர் அருகே வனப்பகுதி பாதையின் குறுக்கே மண் திருட்டை தடுக்க பள்ளம் வெட்டிய வருவாய் துறையினர்!

ஆம்பூர்: ஆம்பூர் அருகே வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதிகளில் கனிம வள கொள்ளை நடப்பதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் நேற்று செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, ஆம்பூர் வருவாய்த் துறையினர் அப்பகுதியில் ஆய்வு நடத்தி மண் திருட்டு நடைபெறாமல் இருக்க அங்கு 10 அடிக்கு பள்ளம் வெட்டி வழிப்பாதையை மூடினர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனச்சரகத்தில், துருகம் காப்புக்காடுகள், மிட்டாளம் வடக்கு பகுதி ஒட்டியுள்ள பெங்கள மூலை பகுதி சுற்றிலும் காப்புக் காடுகள் […]