புதுதில்லி: அடுத்த சில நாள்களுக்கு நாட்டின் வடமேற்கு, வடகிழக்கு, மேற்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் மிக கனமழையுடன் கூடிய மிக கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வடமேற்கு, வடகிழக்கு, மேற்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் மிக கனமழையுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் […]
Month: July 2024
கண்டிப்பாக கேளுங்கள்.. சர்ச்சையான அனுராக் தாக்கூா் பேச்சுக்கு பிரதமர் பாராட்டு
புது தில்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கோரிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் ஜாதி குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூா் பேசியது தலைப்புச் செய்தியான நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை! பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, எனது இளமையான, துடிப்பான சக அமைச்சர் அனுராக் தாக்கூரின் இந்த பேச்சை கண்டிப்பாக கேளுங்கள். உண்மையான […]
கேரள அரசின் மீது அமித் ஷா குற்றச்சாட்டு!
கேரளத்தில் பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கையை ஒரு வாரத்திற்கு முன்பாகவே கேரள அரசுக்கு மத்திய அரசு தகவல் அளித்திருந்தது என்று அமித் ஷா மக்களவையில் கூறியுள்ளார். புது தில்லியில், இன்று நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, “வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படும் என்று ஒரு வாரத்திற்கு (ஜூலை 23) முன்பே கேரள அரசுக்கு மத்திய அரசு எச்சரித்தது. தென் மாநிலத்தில் அதிகன மழை பெய்யும் என்று கணிக்கப்பட்ட பின்னர், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் […]
ராகுல் காந்தியின் சாதியைக் கேட்பதில் என்ன தவறு?: கிரண் ரிஜிஜூ கேள்வி!
சாதி அடிப்படையில் நாட்டைப் பிரிக்க முயற்சிக்கும் ராகுல் காந்தியின் சாதி குறித்து கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக எம்பி அனுராக் தாகூர் மக்களவையில் நேற்று (ஜூலை 30) பேசுகையில் சாதி என்னவென்று தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கேட்கிறார்கள் என ராகுல் காந்தியைச் சுட்டும்படி பேசியதற்கு எதிர்கட்சிகள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆயுள், மருத்துவக் காப்பீடுகள் மீதான வரியை நீக்க வேண்டும்: நிதின் […]
அது இதுதான்… வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்!
இயக்குநர் வெங்கட் பிரபு கோட் படத்தின் அடுத்த அப்டேட்டை பகிர்ந்துள்ளார். லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முன்னதாக, விசில் போடு மற்றும் சின்னச் சின்ன கண்கள் […]
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை!
புது தில்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்திய ராகுல் காந்தியின் ஜாதி குறித்து அனுராக் தாக்கூா் பேசியது அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அதனை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது. பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான சரண்ஜித் சிங் சன்னி, அவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட அனுராக் தாக்கூரின் பேச்சு அடங்கிய விடியோவை, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் […]
ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த ஜோ ரூட்! டாப் 10இல் 3 இந்தியர்கள்!
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் கேப்டனும் நட்சத்திர வீரருமான ஜோ ரூட் 143 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,027 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 32 சதங்கள், 5 இரட்டை சதங்கள், 63 அரை சதங்கள் அடங்கும். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என அபார வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் ஜோ ரூட் சிறப்பாக விளையாடினார். இதன் மூலம் ஐசிசியின் […]
பிகார்: பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 5 வயது சிறுவன்!
பீகாரில் தனது பையில் துப்பாக்கியை மறைத்து பள்ளிக்கு எடுத்துச்சென்று, துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட 5 வயது சிறுவனால் அப்பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரின் சுபால் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் படித்துவரும் 5 வயது சிறுவன் பையில் துப்பாக்கியை மறைத்து பள்ளிக்கு எடுத்துச்சென்று, 3 ஆம் வகுப்பு மாணவரை சுட்ட சம்பவம் அப்பள்ளியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷைஷவ் யாதவ் கூறுகையில், ‘‘அதேப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது […]
பஞ்சாப், மணிப்பூர், ஜார்கண்ட் ஆளுநர்கள் பதவியேற்பு
புதுதில்லி: பஞ்சாப், மணிப்பூர் மற்றும் ஜார்கண்ட் மாநில புதிய ஆளுநர்கள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். குலாப் சந்த் கட்டாரியா பஞ்சாப் மாநிலத்தின் புதிய ஆளுநராகவும், சண்டிகர் நிர்வாகியாகவும் குலாப் சந்த் கட்டாரியா புதன்கிழமை பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். அவருக்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பஞ்சாபின் 30 ஆவது ஆளுநராக கட்டாரியா பதவியேற்றுள்ளார். பதவியேற்பு விழாவில் முதல்வர் பகவந்த் மான், […]
ரயில்வே துறையின் பொற்காலம்: பாஜக எம்.பி.
`கடந்த 10 ஆண்டுகளை இந்திய ரயில்வே துறையின் பொற்காலம்’ என்று பாஜக எம்.பி. கூறியுள்ளார். புது தில்லியில் இன்று (ஜூலை 31) நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் ரயில்வே அமைச்சகத்திற்கான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்தின்போது பேசிய பாஜக எம்.பி. அனில் பலுனி, “ரயில்வே துறை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது செயல்பட்டு வருகிறது. गढ़वाल के वीर सपूत दरबान सिंह नेगी जी के 110 साल पुराने सपने को […]
