Sorting by

×

டி20: இந்தியா அபார சாதனை; இலங்கை மிக மோசமான சாதனை!

இலங்கைக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா ‘சூப்பா் ஓவா்’-இல் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து டி20 தொடரை 3-0 என முழுமையாக இந்தியா கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் சோ்க்க, இலங்கையும் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 137 ரன்கள் சோ்த்ததால், ஆட்டம் ‘டை’ ஆனது. இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட சூப்பா் ஓவரில், முதலில் இலங்கை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 2 […]

பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும்: அப்பாவு

சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். பேரவைத் தலைவர் அப்பாவு, முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர், தூத்துக்குடி. திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், தீப்பெட்டி உற்பத்தி தொழில் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. கடந்த காலத்தில் வெளிநாட்டு தீப்பெட்டிகள் மற்றும் சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதி காரணமாக தீப்பெட்டி உற்பத்தி தொழில் கடுமையாக பாதித்தது. இதைத் […]

மைக்ரோசாஃப்ட் இயங்குதளத்தில் மீண்டும் பிரச்னையா?

மைக்ரோசாஃப்ட் இயங்குதளத்தில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டு, சுமார் 10 மணி நேரம் பயனர்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

‘வயநாடு நிலச்சரிவு… கண்ணீரில் கடவுளின் தேசம்’ – சூழலியல் ஆர்வலர்களின் கருத்து என்ன?

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில்தான் கடந்த 29-ம் தேதி வயநாட்டில் வெளுத்து வாங்கிய மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மேப்பாடி, சூரல் மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்தடுத்து வீடுகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 170-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 220-க்கும் மேற்பட்ட மக்களைக் காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து மீட்புப் பணிகளில் 200-க்கும் […]

வன்முறை: பற்றி எரியும் வங்கதேசம்; 10 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு… பின்னணி என்ன?

சமீபத்தில் வங்கதேசம் முழுவதும் கலவர பூமியாக மாறி உள்ளது. காரணம், அரசாங்க வேலைகளில் பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச போரில் ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு தருவதை இளைஞர்கள் எதிர்க்கின்றனர். தாத்தா சுதந்திர போராட்ட வீரர் என்றால், அவரின் கொள்ளு பேரனுக்கும் இந்த இட ஒதுக்கீடு தரப்படுகிறது. வாழையடி வாழையாக அவர்களின் குடும்பமே அரசாங்க வேலைகளில் சேரும் சூழல் ஏற்படுகிறது. இந்த 30% இட ஒதுக்கீட்டுடன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் என அரசாங்க […]

`தனது சாதி தெரியாதவர்’- ராகுலை மறைமுகமாகச் சாடிய அனுராக்; பாராட்டிய மோடி… கிளம்பும் எதிர்ப்பு!

பீகாரில் கடந்த 2022 பிற்பாதியில் பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறிய நிதிஷ் குமார், ஆர்.ஜே.டி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணியமைத்து மீண்டும் முதல்வரான பிறகு, அதே ஆண்டு அக்டோபரில் மாநில அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட்டார். அதோடு, மாநில அரசின் இட ஒதுக்கீட்டை 65 சதவிகிதமாக உயர்த்துவதாகவும் உறுதியளித்தார். அன்றுமுதல் தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் பா.ஜ.க அரசை வலியுறுத்திவருகின்றன. சாதிவாரி கணக்கெடுப்பு ஆனால், இதில் […]

`சொத்துவரியைத் தொடர்ந்து தொழில்வரியும் உயர்வு; மக்களைக் கசக்கிப் பிழியும் கொடுங்கோன்மை!’ – சீமான்

சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்றக் கூட்டம், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று சென்னையில் தொழில் வரியை 35 சதவிகிதமாக உயர்த்துவது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஸ்டாலின் இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தொழில்வரியை 35℅ அளவிற்கு உயர்த்த சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. சொத்துவரியைத் தொடர்ந்து […]

வயநாடு மீட்புப் பணி | தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு

சென்னை: கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கேரள மாநிலம், வயநாட்டில் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத அதி கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு 167 பேர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த இயற்கை சீற்றத்தின் காரணமாக, பேரிழப்பை வயநாடு மக்கள் சந்தித்திருப்பது மிகவும் […]

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக 2003-ம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி பெறப்பட்டது. அதையடுத்து, மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் இருந்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் பேரணி நடைபெற்றது. நம்பர் 1 காமராஜர் சாலையில் பேரணி செல்வதற்கு அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில், பேரணியில் பங்கேற்றவர்கள் நம்பர் […]

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை 56 ஏரிகளுக்கு நிரப்பும் பணி தொடக்கம்

மேட்டூர்: மேட்டூர் உபரி நீர் திட்டத்தில், மேட்டூர் திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து மின் மோட்டர்கள் மூலம் காவிரி உபரிநீரை 56 ஏரிகளுக்கு நிரப்பும் பணியை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று தொடங்கி வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் காவிரி உபரி நீரை, சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங்கும் திட்டம் ரூ 673.88 கோடியில், சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து […]