காரைக்குடி: போராட்டம் நடத்தும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொன்நகரில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பூங்காவில் இன்று அழகப்பரின் மார்பளவு திருஉருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிலையைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் […]
Month: July 2024
அப்பாவுக்கு எதிரான அதிமுக நிர்வாகி வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்
சென்னை: சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையை, எம்பி-எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும் […]
பேரவைக்குள் குட்கா விவகாரம்: ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பான உரிமை மீறல் நோட்டீஸுக்கு, உரிமைக் குழுவிடம் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதாக, அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து […]
“நமது சிந்தனைகளை மக்கள் மீது திணிக்க முடியாது” – புதுச்சேரி ஆளுநர் கருத்து
புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இன்று (புதன்கிழமை) புதுச்சேரி மாநில சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், பின்னர் ஆளுநர் மாளிகையிலிருந்து விடை பெற்றார். அவருக்கு ஆளுநர் மாளிகையில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, தலைமைச் செயலர் சரத் சவுகான், டிஜிபி-யான ஸ்ரீநிவாஸ் மற்றும் அரசுச் செயலர்கள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வழியனுப்பி […]
வயநாடு மீட்புப் பணி: 5 ஹிட்டாச்சி வாகனங்கள் உள்பட உபகரணங்களை அனுப்பிய கோவை மாநகராட்சி
கோவை: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், கோவை மாநகராட்சி வயநாடு மீட்புப் பணிக்கு உபகரணங்களை அனுப்பியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், விமானப்படையினர் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் அங்கு மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். Disclaimer :- This story is generated […]
கேரளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்: பினராயி விஜயனிடம் ஸ்டாலின் உறுதி
சென்னை: “வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், கேரளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் நான் உறுதியளித்துள்ளேன்.” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வயநாடு நிலச்சரிவு குறித்து பேசினார். அப்போது, நான் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசினேன். சேதாரத்தை இன்னும் கணக்கெடுக்க முடியவில்லை என்றும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார். தமிழ்நாடு அரசின் சார்பாக எந்த உதவிகளும் […]
நிவாரண உதவிகளை வழங்குமாறு கேரள முதல்வர் வேண்டுகோள்!
கேரளத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு கேரள முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ முன்வருபவர்கள் நிவாரண உதவிகளை வழங்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பணமாக அளித்து உதவ விரும்புபவர்கள், கேரள அரசின் அதிகாரபூர்வ இணையதளத்திலும், பொருள்களாக அளிக்க விரும்புபவர்கள் 1077 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பொருள்களாக அளிக்க விரும்புபவர்கள், தாங்கள் உபயோகப்படுத்திய பொருள்களை வழங்கவேண்டாம் என்றும் […]
சத்தீஸ்கர் ஆளுநராகப் பதவியேற்றார் ராமன் டேக்கா!
சத்தீஸ்கரின் பத்தாவது ஆளுநராக ராமன் டேக்கா இன்று பதவியேற்றுக் கொண்டார். ராமன் டேக்காவுக்கு சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத் தலைவர் ரமேஷ் சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். வயநாட்டிற்கு நாளை செல்கிறார் ராகுல்! விழாவையொட்டி செய்தியாளர்களுடன் பேசிய அவர், சத்தீஸ்கர் ஆளுநராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவேன். அஸ்ஸாம் (அவரது சொந்த மாநிலம்) மற்றும் சத்தீஸ்கர் இடையே நீண்ட உறவு உள்ளது. அது மேலும் வளரும், இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பிணைப்பை […]
வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தலா?
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியைச் சேர்ந்த சின்னு-கோவிந்தன் தம்பதியருக்கு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை திருடப்பட்டதாக காவல்துறைக்கு புகார் வந்தது. கடந்த 27ஆம் தேதி பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட சின்னு என்ற பெண்ணுக்கு 27ஆம் தேதி இரவு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதன் பின் குழந்தை நல வார்டுக்கு சின்னு உடன் […]
தமிழகத்தில் ஆக. 21-ல் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் ஆக. 21-ல் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட ஜெயிக்கா கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 14 […]
