Sorting by

×

சென்னையில் உயிரிழந்த காவல் உதவி ஆணையர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு

சென்னை: சென்னை பார்முலா-4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தபோது உயிரிழந்த காவல் துறை உதவி ஆணையரின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆணையராக பணியாற்றிவந்த சிவகுமார் (வயது 53) இன்று (31.8.2024) பகல் சுமார் 12.45 மணியளவில் சென்னை அண்ணா சாலை மன்றோ சிலை அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்த […]

தூத்துக்குடி, பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மற்றும் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Disclaimer :- This […]

அன்று மாணவி… இன்று ‘பொறுப்பு டீன்’… – மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுவாரஸ்யம்!

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ‘பொறுப்பு டீன்’ தர்மராஜ் ஒய்வு பெற்றதால் அவருக்கு பதிலாக மீண்டும் ‘பொறுப்பு டீன்’ ஆக நியமிக்கப்பட்ட இருதயவில் பேராசிரியர் செல்வராணி உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், எம்பிபிஎஸ், எம்டி போன்ற படிப்புகளை மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கடந்த ஏப்ரல் 30-ம் தேதி ‘டீன்’ ஆக இருந்த ரெத்தினவேலு ஒய்வு பெற்றார். அவரது பதிலாக பொறுப்பு ‘டீன்’ தர்மராஜ் இருந்து […]

பரந்தூர் போராட்டத்தை தீவிரப்படுத்த செப்.3-ல் முக்கிய ஆலோசனை

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தின் தீவிரத்தை குறைக்க, பகுதி பகுதியாக நிலத்தை கையகப்படுத்த அறிவிப்புகளை அரசு சார்பில் வெளியிட்டு வருகின்றனர். இந்தத் திட்டத்துக்காக மொத்தமாக கையகப்படுத்த உள்ள ஏகனாபுரத்தில் ஒரு பகுதி நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து அந்தப் பகுதி மக்கள் செப்டம்பர் 3-ல் கூடி ஆலோசிக்க உள்ளனர். சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக சுமார் […]

விடுதியில் பாலியல் அத்துமீறல்: விசாரணைக் குழு அமைக்கிறது திருச்சி என்ஐடி நிர்வாகம்

திருச்சி: விடுதி மாணவியிடம் பாலியல் அத்துமீறிய விவகாரம் தொடர்பாக, விசாரணைக் குழு அமைக்கும் பணியில் என்ஐடி நிர்வாகம் தீவிரம் காட்டியுள்ளது. திருச்சி என்ஐடி நிறுவனம் துவாக்குடியில் இயங்கி வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகக் கட்டுப்பாட்டில் உள்ள இந்நிறுவனத்தில் 7,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் தங்குவதற்காக 25 விடுதிகள் உள்ளன. அதில் ஒன்றான ஓபல் விடுதியில் இன்டர்நெட் சேவைக்காக கேபிள் ஒயர்கள் பொறுத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், […]

கோட் பட்ஜெட் ரூ. 400 கோடி.. அதில் விஜய் சம்பளம்… தயாரிப்பாளர் விளக்கம்!

கோட் படத்தின் பட்ஜெட் மற்றும் வணிகம் குறித்து தயாரிப்பாளர் பேசியுள்ளார். விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். நடிகர் விஜய் – இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்ற ஆக்சன், டீஏஜிங் காட்சிகள் படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது. […]

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட்டின் புதிய சாதனைகள்!

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனைகள் படைத்துள்ளார். இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 251 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், 483 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 19 சிக்ஸர்கள்… டி20 போட்டிகளில் ஆயுஷ் […]

தில்லி பேரவைக்கு இப்போது தேர்தல் நடந்தால் 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும்: சிசோடியா

தில்லி சட்டப்பேரவைக்கு இப்போது தேர்தல் நடந்தால் 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராஜேந்தர் நகரில் இன்று நடைபெற்ற ‘பத்யாத்ரா’ பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது, தன்னையும் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலையும் “போலி” வழக்குகளில் பாஜக சிறையில் அடைத்தது. மக்கள் என் மீது காட்டும் அன்பு மற்றும் பாசத்தால் பாஜக மக்கள் கவலைப்படுகிறார்கள். ஹரியாணா சட்டப்பேரவைத் […]

லாவோஸ் நாட்டின் இணைய மோசடி மையங்களில் சிக்கியிருந்த 47 இந்தியர்கள் மீட்பு!

லாவோஸ் நாட்டின் இணைய மோசடி மையங்களில் சிக்கியிருந்த 47 இந்தியர்கள் அங்கிருந்த இந்திய தூதரகத்தால் இன்று மீட்கப்பட்டுள்ளனர். லாவோஸ் நாட்டில் போலி வேலை வாய்ப்புகள் மூலம் அதிகம் ஏமாற்று வேலைகள் நடைபெற்று வருவதால் அதனைக் கட்டுப்படுத்துவதில் கவனத்துடன் இருக்குமாறு இந்தியத் தூதரகம் சார்பில் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய தூதரகம் சார்பில் அந்த நாட்டிலிருந்து இதுவரை 635 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். Embassy of India successfully rescues 47 Indians trapped in cyberscam centres in Golden […]

“சென்னை பார்முலா-4 பந்தயத்தால் எந்தப் பயனும் இல்லை” – பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி விமர்சனம்

தாம்பரம்: “இந்த கார் ரேஸுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் நுழைவாயிலை முழுமையாக அடைத்து உள்ளனர். மருத்துவமனைக்கு செல்பவர்கள் எப்படி செல்வார்கள் என தெரியவில்லை. இந்த கார் ரேசினால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை” என பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை இன்று (ஆக.31) தொடங்கியது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி […]