Sorting by

×

இரவு நேர பாா்முலா 4 காா் பந்தயம்: சென்னையில் இன்று தொடக்கம்

தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில், சாலையில் நடைபெறும் இரவு நேர பாா்முலா 4 காா்பந்தயம் சனிக்கிழமை (ஆக.31) தொடங்கி, இரு நாள்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி), ரேசிங் புரோமோஷன் நிறுவனம் (ஆா்பிபிஎல்) சாா்பில் பாா்முலா 4 காா் இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகிய பந்தயங்கள் நடைபெறுகிறது. 3.7 கி.மீ. தொலைவு கொண்ட சென்னை பாா்முலா 4 காா் பந்தய சா்க்யூட், தீவுத்திடலில் தொடங்கி, போா் நினைவுச் சின்னம், நேப்பியா் பாலம் […]

ரூ.1.25 கோடியில் காஞ்சிபுரத்தில் இருந்து அமெரிக்காவுக்கு தங்கத் தோ்

காஞ்சிபுரத்தில் இருந்து ரூ.1.25 கோடியில் தங்க முலாம் பூசப்பட்ட தங்கத் தோ் விரைவில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியாா் நிறுவனம் ஆன்மிக பொருள்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் சாா்பில், ஓரிக்கையில் உள்ள ஒரு மண்டபத்தில் கடந்த 75 நாள்களாக அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் சியாடலில் உள்ள வேதா கோயிலுக்கு தங்க ரதம் ரூ.1.25 கோடியில் ஆடா் பெறப்பட்டு செய்யப்பட்டுள்ளது. 23 அடி உயரமும், 4 டன் எடையும் உடைய இரும்பு […]

சவுக்கு சங்கா் மீது மீண்டும் குண்டா் சட்ட நடவடிக்கை ஏன்?தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

‘யூடியூபா்’ சவுக்கு சங்கரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்ட பிறகும் அவரை மீண்டும் குண்டா் சட்டத்தில் தடுத்து வைத்தது ஏன் என்பதை தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது. மேலும், அவருக்கு எதிரான வழக்குகளை சோ்த்து விசாரிக்க முடியாதா எனவும் கேள்வி எழுப்பியது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது சவுக்கு சங்கா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பாலாஜி […]

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

சென்னை: தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால், பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாகவே,வெயில் தணிந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு 8 மணி முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. குறிப்பாக, சென்னை நகரில் வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, தி.நகர், சைதாப்பேட்டை, […]

தமிழகத்தில் இயங்கிவரும் நிறுவனங்களுடன் அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் ஒப்பந்தம்: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

சென்னை: அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்களுடன்தான் ஒப்பந்தம் செய்துள்ளார் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். மூப்பனார் நினைவு தினத்தையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நினைவிடத்தில் பாஜகமாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மூப்பனாரைப் போல நாகரிகமான அரசியலை ஜி.கே.வாசன் முன்னெடுத்து வருகிறார். Disclaimer :- This story is generated by computerised program and has not been […]

மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு: ஜெ.குமரகுருபரன் தகவல்

சென்னை: மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை தூய்மைப் பணிகளை தனியாரிடம் வழங்க இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். மெரினா கடற்கரைக்கு தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை நாட்கள்,விழாக் காலங்களில் ஒரு லட்சம் பேருக்கு மேல் குவிகின்றனர். இதற்குஇணையாக பெசன்ட்நகர் எலியட்ஸ்கடற்கரையிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. Disclaimer :- This story is generated by computerised program and has not been […]

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு; விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்புக் வழக்கு விசாரணைக்கு, தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கரூர் குன்னம்பட்டியில் 22 ஏக்கர் நிலத்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உள்ளிட்டோர் மோசடி செய்ததாக, குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின்பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேகர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட […]

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.900 கோடிக்கு ஒப்பந்தங்கள்: 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நோக்கியா, பேபால், ஈல்டு இன்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப், இன்ஃபிங்ஸ், அப்ளைடுமெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர்ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோ நகரில்கடந்த 29-ம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். இந்த […]

கோவைக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்: நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அசாம் முதல்வர் வலியுறுத்தல்

புதுடெல்லி: சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேச அகதிகள், தமிழ்நாட்டில் கோவையை குறிவைத்து அங்குள்ள ஜவுளித் தொழிற்சாலைகளில் வேலையில் சேர முயல்வதாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இத்தகைய சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஹிமந்தா பிஸ்வாசர்மா கூறியதாவது: வங்கதேசத்தில் கலவரச் சூழல் உருவாகியுள்ள நிலையில், அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். கடந்த 27-ம் தேதி அசாம் எல்லை வழியாகநுழைய […]

சென்னை பிராட்வேயில் ரூ.822.70 கோடியில் பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து வளாகம் – தமிழக அரசு நிர்வாக அனுமதி

சென்னை: சென்னை மாநகராட்சி மூலம் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் குறளகத்தை உள்ளடக்கிய, பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகத்தை ரூ.822.70 கோடியில் அமைக்க தமிழக அரசு நிர்வாக அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியால் பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் தங்க சாலை பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் 1960-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1964-ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பிராட்வே பேருந்து நிலையமானது வெளியூர் செல்லும் […]