தூத்துக்குடி: தூத்துக்குடி டாக் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 2 பேர் காயமடைந்தனர். தூத்துக்குடி முத்தையாபுரம் துறைமுகம் விரைவு சாலையில் டாக் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சோடா ஆஷ் மற்றும் அமோனியம் குளோரேட் உரம் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலையில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் ஜோயல் என்பவரிடம் மெக்கானிக்காக ஏரல் அருகே மஞ்சள்நீர்காயலைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் மகன் ஹரிஹரன் (23), தூத்துக்குடி காட்டன் சாலையைச் சேர்ந்த […]
Month: August 2024
`தமிழ்நாட்டு தனியார் நிறுவனங்களில் தமிழருக்கே வேலைவாய்ப்பு!’ – தனி சட்டம் இயற்ற சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாட்டிற்கு முதலீடு கொண்டு வர முதல்வர் அமெரிக்கா சென்றிருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் தொடங்கப்படும் தனியார் நிறுவனத்தில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பினை தர தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், “ஓசூரில் இயங்கும் டாடா மின்னணு நிறுவனம், தொழிற்சாலையில் பணியாற்ற உத்திரகண்ட் மாநிலத்திலிருந்து 4000 பெண்களை அழைத்து வரவிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நிறுவனம் பணித்தேவைக்காகச் சிறப்பு ரயில் மூலம் 800 […]
திருச்சி என்ஐடி சம்பவத்துக்கு இபிஎஸ் கண்டனம்
திருச்சி என்ஐடி-யில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (NIT- Trichy) பெண்கள் விடுதி அறையில், அங்கிருந்த மாணவி முன்பே இணையதள பழுது பார்க்க வந்த நபர் பாலியல் ரீதியாக அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதுகுறித்து புகாரளிக்க சென்ற மாணவியை காவல் நிலையத்தில் […]
2-வது டெஸ்ட்: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து; திணறும் இலங்கை!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் 118 ரன்களும், பென் […]
ஃபார்முலா கார் பந்தயத்திற்கு செல்பவர்கள் மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்
சென்னையில் நடைபெறும் ஃபார்முலா கார் பந்தயத்திற்கு செல்பவர்கள் மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும்இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் வரும் ஆகஸ்ட் 31, 2024 (சனிக்கிழமை) மற்றும் செப்டம்பர் 1, 2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம்நடைபெற உள்ளது. […]
`ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை என் ரத்தத்தால் வளர்த்தேன்; இன்று…!’- பாஜக-வில் இணைந்த சம்பாய் சோரன்
ஜார்க்கண்டில் தற்போது முதலமைச்சராக இருக்கும் ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் சிறையிலடைக்கப்பட்டபோது, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான சம்பாய் சோரன் முதல்வராக்கப்பட்டார். அதையடுத்து, ஹேமந்த் சோரன் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்ததும் ஜூலை மீண்டும் முதல்வரானார். இந்த சம்பவத்துக்குப் பிறகு சம்பாய் சோரன் பா.ஜ.க-வில் இணையப் போவதாகப் பேச்சுகள் அடிபட்டன. சம்பாய் சோரன் அதற்கேற்றவாறு சம்பாய் சோரனும், புதிய தொடங்குவதாகவும், அப்படியில்லையென்றால் வேறொருவருடன் இணைந்து பணியாற்றுவதாகவும் வெளிப்படையாகக் கூறிவந்தார். மேலும், இரண்டு நாள்களுக்கு […]
PM SHRI: `பி.எம்.ஸ்ரீ திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்’ – தமிழ்நாடு அரசுக்கு மத்திய அமைச்சர் கடிதம்!
சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய முதல் தவணையான ரூ.573 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என இரண்டு நாள்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ ஏற்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். அந்த கடிதத்தில், “மத்திய அரசு மாணவர்கள் தாய்மொழி உட்படப் பல மொழிகளைக் கற்க வேண்டும் என முயற்சிகளை […]
7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்கு விவசாயி மகள் சுவேதா தேர்வு!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த மாணவிக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திருச்சுழி அருகே உள்ள மைலி இலுப்பைக்குளத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (48). விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி (40). இவர்களது இளைய மகள் சுவேதா (18). இலுப்பைகுளம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர், திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து […]
குமரி தனியார் கல்லூரியின் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நிறுத்தம்
சென்னை: கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன் ஆராய்ச்சி மையம் கல்லூரியின் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதால், அங்கு தற்காலிகமாக செய்யப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்து, திருத்தப்பட்ட இறுதி இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த கல்லூரியில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீட்டு ஆணைகள் பெற்ற 5 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேறு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான ஆன்லைனில் பொது கலந்தாய்வு கடந்த […]
சென்னை ஃபார்முலா-4 பார்க்க பிரத்யேக பயணச் சீட்டு: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு
சென்னை: சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் நிகழ்வை பார்க்க ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக மெட்ரோ க்யூஆர் பயணச் சீட்டு மூலம் சென்னை மெட்ரோவில் பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் வரும் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. தெற்காசியாவிலேயே இரவு […]
