Sorting by

×

கோட் படத்தின் 4வது பாடல் ‘மட்ட’

கோட் படத்தின் 4வது பாடலான ‘மட்ட’ பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. லியோ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times). இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் – […]

மேற்கு வங்கத்தில் 48 மணி நேரத்தில் 7 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு: பாஜக

மேற்கு வங்கத்தில் 48 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் 7 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. பாஜக தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் பதிவில், “சிறுமிகள் உள்பட 7 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கடந்த 48 மணி நேரத்தில் மேற்கு வங்கத்தின் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது. மேலும், அதில் சில கொலைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், மம்தா பானர்ஜி எந்த முதல்வரும் வெட்கப்படக் கூடிய வகையில் மருத்துவர்களை […]

சென்னையை குளிர்வித்த மழை!

சென்னையின் பல்வேறு இடங்களில் இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது. கிண்டி, பல்லாவரம், சாலிகிராமம், வடபழனி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், கோபாலபுரம், திருவல்லிக்கேணி, அடையாறு, அம்பத்தூர், தேனாம்பேட்டை, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இரவு திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. சென்னையில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்! மேலும் மழைநீர் ஆங்காங்கே சாலைகளில் தேங்கியதால் பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். நேற்று (29.08.24) காலை மத்திய மற்றும் அதனை […]

பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் பொறாமையாலேயே அழிந்து விடும்: சித்தராமையா

கர்நாடகத்தில் சுதந்திர போராட்ட வீரர் சங்கோலி ராயண்ணாவின் வெண்கலச் சிலையைத் திறந்து வைக்கும் விழாவில் முதல்வர் சித்தராமையா பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் சித்தராமையா பேசியதாவது, “இந்தியா போன்ற சாதி அடிப்படையிலான சமூகத்தில், மகாத்மா காந்தி கூறியது போல், மிகவும் ஓரங்கட்டப்பட்ட நபருக்கும் கூட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நான் இந்தக் கொள்கையை நம்புகிறேன், அதற்கேற்ப எனது திட்டங்களை வடிவமைக்கிறேன். சாதாரணமான வெறுக்கத்தக்க அரசியல் மூலமாக நான் ஆட்சிக்கு வரவில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் ஆசீர்வாதத்தால்தான் நான் முதல்வரானேன். மக்களின் […]

சென்னை ஃபார்முலா-4 கார் பந்தயம்: கமல்ஹாசன், ரஹ்மான் வாழ்த்து

சென்னை: சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவது உற்சாகமளிக்கிறது. நம்முடைய விருந்தோம்பல், விளையாட்டு திறமைகளை பார்ப்பதில் ஆவலாக இருக்கிறேன். தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு […]

“தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு” – தமிழிசை கருத்து

கோவை: “ஆன்மிகம் அல்லாத அரசியல் என எதுவும் இல்லை. அண்ணாமலை வெளிநாடு செல்வதை அடுத்து, கட்சி அமைத்துள்ள நிர்வாகக்குழு ஹெச்.ராஜா தலைமையில் செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது,” என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினர். மேலும், அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால் மாணவர்களின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் மாநில தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று (ஆக.30) செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பாஜக மாநில […]

தமிழக அரசு சம்மதித்தபடி ‘பிஎம் ஸ்ரீ பள்ளிகள்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்: மத்திய அரசு

சென்னை / புதுடெல்லி: “தமிழக அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதிய பதில் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இதன்மூலம், தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதியுதவி பெறுவதில் சிக்கல் நீடித்துள்ளது. சமக்ரா சிக்‌ஷா திட்ட நிதி […]

“கட்டி விற்காமல் உள்ள வீட்டு வசதி வாரிய வீடுகளை விற்க குழு அமைப்பு” – அமைச்சர் தகவல்

சென்னை: “வீட்டு வசதி வாரியத்திடம் வீடு வாங்கியவர்களுக்கு விற்பனை பத்திரம் தாமதமின்றி தரப்படுவதாகவும், 4 ஆண்டுகளாக கட்டி விற்பனையாகாமல் உள்ள வீடுகளை விற்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,” அமைச்சர் சு.முத்துசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று (ஆக.30) தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், வீட்டுவசதித்துறை செயலர் காகர்லா உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: “வீட்டுவசதி […]

சென்னையில் செப்.21-ல் மநீம பொதுக்குழு கூட்டம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு மற்றும் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியது உட்பட 12 தீர்மானங்கள் […]

Tamilnadu News Live August 30, 2024: TOP 10 NEWS: ’பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர அழுத்தம்! உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

தமிழ்நாடு செய்திகள் August 30, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.  Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI