Sorting by

×

‘ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை’ – ஐகோர்ட் காட்டம்

மதுரை: நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்து அதிகாரிகள் செயல்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த காஜா மைதீன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், 'மணப்பாறை புத்தாநத்தம் கிராமத்தில் பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரத்தில் அகற்ற வேண்டும் என கடந்த ஆண்டு நவம்பரில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. எனவே நீதிமன்ற […]

மதுரை – பெங்களூர்: தென் மாவட்டத்தில் இருந்து 3-வது ‘வந்தே பாரத்’ சேவை | முழு விவரம்

மதுரை: தென்மாவட்டத்தில் இருந்து ‘வந்தே பாரத்’ ரயிலின் 3-வது ரயிலான மதுரை – பெங்களூர் ரயில் சேவை நாளை (சனிக்கிழமை) தனது முதல் பயணத்தை தொடங்குகிறது. சென்னை – நாகர்கோயில் மற்றும் மதுரை – பெங்களூர் இடையே சனிக்கிழமை (ஆக.31) ‘வந்தே பாரத்’ ரயில் முதல் சேவையை தொடங்குகிறது. இரண்டு ரயில் சேவைகளையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் தொடக்க நாள் சிறப்பு ரயில் […]

மாமல்லபுரம் கடலில் குளித்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு; மாயமான மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த சென்னை தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கடலில் குளித்த நிலையில், கடல் அலையில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும், கடலில் மாயமான 2 மாணவர்களை தீயணைப்பு படையினர் மற்றும் போலீஸார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம் பயிலும் 17 மாணவர்கள், மாமல்லபுரம் பகுதிக்கு இன்று (ஆக.30) சுற்றுலா வந்தனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றுபார்த்த அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி […]

தமிழகத்தில் ‘குரங்கு அம்மை’ நோயே இல்லாத நிலை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 

சேலம்: “தமிழகத்தில் குரங்கு அம்மை நோயே இல்லாத நிலை உருவாகியுள்ளது,” என மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் இன்று (ஆக.30) நடந்த 29-வது பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பட்டங்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது: “சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் 29-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். சேலம் […]

மத்திய அமைச்சரவை செயலராக பொறுப்பேற்றார் டி.வி.சோமநாதன்

ராஜீவ் கௌபா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து டி.வி.சோமநாதன் மத்திய அமைச்சரவை செயலராகக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். மத்திய அமைச்சரவை செயலராக இருந்த ராஜீவ் கெளபாவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அந்த பொறுப்புக்கு டி.வி.சோமநாதன் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இன்று பொறுப்பேற்றுள்ள டி.வி.சோமநாதன் புதிய செயலராக அடுத்த இரண்டு ஆண்டு காலத்துக்கு செயல் பட உள்ளார். கடவுள் நம்பிக்கையோடு விஜய் செயல்படுவது வரவேற்கத்தக்கது: தமிழிசை டாக்டா். டி.வி. சோமநாதன் (59), 1987ஆம் ஆண்டு இந்திய […]

அவனி லெகரா, மோனா அகர்வாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பாரீஸ் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள அவனி லெகரா மற்றும் மோனா அகர்வாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரீஸ் பாராலிம்பிக்கில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். பாரீஸ் பாராலிம்பிக்: தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்! பாரீஸ் […]

பாரீஸ் பாராலிம்பிக்: இந்தியாவுக்கு 4வது பதக்கம்

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஒரே நாளில் இன்று 4வது பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது. ஆடவர் 10 மீட்டர் துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியாவின் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதில் தென் கொரியாவின் ஜொ ஜியோங்டு தங்கப் பதக்கமும், சீனாவின் யாங் சாவோ வெண்கலப் பதக்கமும் வென்றனர். இத்துடன் இந்தியா 4 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 9வது இடத்திலும், சீனா 11 பதக்கங்களுடன் முதல் இடத்திலும் உள்ளது. அவனி லெகரா, மோனா அகர்வாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! […]

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் – முதல் பாடல் வெளியானது!

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் ரூ.100 கோடி வரை வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவரது இயக்கத்தில் அடுத்த படமாக ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் தயாராகியுள்ளது. தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் […]

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் நிபந்தனை தளர்வு 

மதுரை: அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத் துறை அதிகாரியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அங்கித் திவாரிக்கு, தினமும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் ஜாமீன் நிபந்தனை […]

“நெசவாளர்களுக்கு பாதிப்பு இல்லை” – ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆர்.காந்தி விளக்கம்

சென்னை: “தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் அதிகபட்ச அக்கறை செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செவ்வனே நிறைவேற்றி வருகிறது. எனவே அடிப்படை ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது பொறுப்பான மூத்த அரசியல் தலைவருக்கு அழகல்ல,” என்று பாமக நிறுவனர் ராமதாஸுக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று (ஆக.30) வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் 2025 திருநாளையொட்டி, […]