நமீபியாவில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, உணவுக்காக யானைகளை கொல்ல திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் கடந்த அரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவிலான கடும் வறட்சி காரணமாக பசியால் வாடும் 14 லட்சம் மக்களுக்கு உணவளிக்க காட்டில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றி நமீபியா சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமீபிய அரசியலமைப்பு சட்டத்தின்படி நாட்டிலுள்ள இயற்கை […]
Month: August 2024
கூலி – ஸ்ருதி ஹாசன் போஸ்டர்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் ஸ்ருதிஹாசனின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பிரதான வேடங்களில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கோட் படத்தில் மோகன்லால்? வைரலாகும் புகைப்படங்கள்! கூலி படத்தில் ஸ்ருதி ஹாசன் போஸ்டர். முன்னதாக, கூலி படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, மலையாள […]
கஸ் அட்கின்சன் சதம் விளாசல்; இங்கிலாந்து 427 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 427 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நேற்று (ஆகஸ்ட் 29) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அடுத்த ஓராண்டுக்கு ரஷித் கான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டாரா? முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து […]
தலித் நபரின் நிலை உங்களுக்கு எப்படித் தெரியும்? : கங்கனாவிடம் காங்கிரஸ் தலைவர் கேள்வி
இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கங்கனாவின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீனேட் மறுப்பு தெரிவித்துள்ளார். சுப்ரியா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, “சாதி கணக்கெடுப்பு இருக்கக்கூடாது என்று பாஜக எம்.பி. கங்கனா மீண்டும் கூறியுள்ளார். நீங்கள் ஒரு உயர் சாதியைச் சேர்ந்த பணக்காரர்; நடிகை மற்றும் ஒரு எம்.பி.யாக உள்ளீர்கள். அப்படி இருக்கையில் ஒரு தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியைச் சேர்ந்த ஒரு தனிநபரின் நிலை உங்களுக்கு […]
கடவுள் நம்பிக்கையோடு விஜய் செயல்படுவது வரவேற்கத்தக்கது: தமிழிசை
கடவுள் நம்பிக்கையோடு விஜய் செயல்படுவது வரவேற்கத்தக்கது என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அண்ணாமலை வெளிநாடு செல்வதையடுத்து கட்சி அமைத்துள்ள நிர்வாக குழு எச்.ராஜா தலைமையில் செயல்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை வைத்து இக்குழுவும் கட்சியில் உள்ள அனைவரும் தொடர்ந்து செயல்படுவோம்’ எனத் தெரிவித்தார். இந்த குழுவில் […]
புதிய சாதனை உச்சத்தில் நிஃப்டி, சென்செக்ஸ்!
மும்பை: பெஞ்ச்மார்க் குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில் புதிய உச்சத்தை எட்டியது. இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் பார்மா பங்குகளின் பேரணியால் உந்தப்பட்டு, ஆரம்ப நேர வர்த்தகத்திலிருந்தே இரு குறியீடுகளும் புதிய உச்சத்தை எட்டியது. இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 502.42 புள்ளிகள் உயர்ந்து 82,637.03 புள்ளிகளை எட்டிய நிலையில் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 105.7 புள்ளிகள் உயர்ந்து 25,257.65 […]
கர்நாடக அரசைக் கவிழ்க்க காங். எம்எல்ஏ-க்களுக்கு ரூ. 100 கோடி வழங்கும் பாஜக: சித்தராமையா!
கர்நாடக அரசைக் கவிழ்க்க காங். எம்எல்ஏ-க்களுக்கு பாஜக ரூ. 100 கோடி வழங்குவதாகக் கூறுகின்றனர் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “பாஜக எங்களின் அரசைக் கவிழ்க்க எம்எல்ஏக்களுக்கு ரூ.100 கோடி வழங்குவதாக எம்எல்ஏ ரவிக்குமார் கௌடா என்னிடம் தெரிவித்தார். பாஜக கர்நாடகத்தில் ஆட்சி அமைத்தது ’ஆபரேஷன் தாமரை’ மூலம் மட்டுமே. அவர்கள் மக்களின் ஆதரவால் என்றும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. கடந்த 2008, 2019 ஆண்டுகளில் அவர்கள் […]
பாரீஸ் பாராலிம்பிக்: தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. பாரீஸ் பாராலிம்பிக்கின் தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பாரீஸ் பாராலிம்பிக்: தங்கம் வென்றார் அவனி லெகரா! மோனாவுக்கு வெண்கலம் 100 மீட்டர் தடகளப் போட்டியில் 14.12 நொடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை சீன வீராங்கனைகள் தட்டிச் சென்றனர். Disclaimer […]
சிங்கப்பூர் செல்லும் மோடி!
பிரதமர் மோடி அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் சிங்கப்பூர் செல்லவிருப்பதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் வாராந்திர ஊடக மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேசியதாவது, “சுல்தான் ஹாஜி ஹசானல் போல்கியாவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி செப்டம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் புருனே தாருஸ்ஸலாமிற்கு பயணம் செய்யவுள்ளார். இந்தியாவிற்கும் புருனேவிற்கும் இடையிலான தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 40 ஆவது […]
யூடியூபில் பிரபலமடைய பேயாக மாறிய இளைஞர்!
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், யூடியூபில் பிரபலமடைவதற்காக, சேலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேய் வேடமிட்டு பொதுமக்கள் மத்தியில் உலவியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாழப்பாடி பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில், சேலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கருப்பு நிற ஆடையில் வெள்ளை நிறத்தில் எலும்புக்கூடு படம் வரைந்து அணிந்து கொண்டு, பேய் போன்ற தோற்றத்தில் துள்ளி குதித்து, பேருந்துக்கு காத்திருந்தப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சுற்றித்திரிந்தார். நமீபியாவில் நிலவும் கடும் வறட்சி.. […]
