சென்னை தீவுத்திடல் பகுதியில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். எஃப்ஐஏ முதற்கட்ட அனுமதி கொடுத்த நிலையில் கார் பந்தயத்தின் பயிற்சி போட்டிகள் தொடங்கின. பயிற்சி போட்டிகள் இரவு 10.45 மணி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி), ரேசிங் புரோமோஷன் நிறுவனம் (ஆா்பிபிஎல்) சாா்பில் பாா்முலா 4 காா் இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகிய பந்தயங்கள் நடைபெறுகிறது. 3.7 கி.மீ. […]
Month: August 2024
19 சிக்ஸர்கள்… டி20 போட்டிகளில் ஆயுஷ் பதோனி புதிய சாதனை!
டி20 போட்டிகளில் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து இந்திய வீரர் ஆயுஷ் பதோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். தில்லி பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற போட்டியில் சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் நார்த் தில்லி ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி முதலில் பேட் செய்தது. இவர்தான் உலகின் மிகச் சிறந்த ஃபீல்டிங் ஆல்ரவுண்டர்: ஜாண்டி ரோட்ஸ் சௌத் தில்லி சூப்பர் […]
நிவேதா தாமஸா இது?
நடிகை நிவேதா தாமஸ் உடல் பருமனாக இருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை நிவேதா தாமஸ் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் தர்பார் படங்களில் நடித்து கவனம் பெற்றவர். முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் கதாநாயகி வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் நிதானமாக படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். நிவேதா தாமஸ். இவர் நடிப்பில் கடைசியாக சாகினி டாகினி (தெலுங்கு), எந்தாடா சஜி (மலையாளம்) நல்ல வரவேற்பைப் பெற்றன. Nivetha Thomas | […]
“என்.ஆர்.காங். – பாஜக அரசு பொம்மை அரசாக செயல்பட்டு வருகிறது” – நாராயணசாமி விமர்சனம்
புதுச்சேரி: “அதிகாரிகளின் கையில் நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டு என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு புதுச்சேரியில் ஒரு பொம்மை அரசாக செயல்பட்டு வருகிறது,” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து இன்று (ஆக.31) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி மவுனம் காக்கிறார். புதுச்சேரியில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ப முறை காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தியும், இந்த ஆட்சியில் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதற்கான ஆயத்த […]
மாமல்லபுரம் கடலில் குளித்தபோது மாயமான 2 கல்லூரி மாணவர்கள் சடலம் கரை ஒதுங்கின
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடலில் குளித்தபோது மாயமான 2 கல்லூரி மாணவர்களின் சடலம் சனிக்கிழமை காலை கரை ஒதுங்கியன. சென்னையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் அண்ணா நகரில் உள்ள கந்தசாமி கல்லூரியில் படித்து வருகின்றனர். அதில், பி.காம்., 3ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் 17 பேர் 9 பைக்குகளில் வெள்ளிக்கிழமை காலை மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர். பின்னர், புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து விட்டு, கடற்கரை கோயிலின் வடக்கு பகுதியில் உள்ள கடற்கரையொட்டி ஒரு படகில் […]
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆணையர் பலி
ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமார் நெஞ்சுவலியால் பலியானார். நெஞ்சுவலியால் மயக்கமடைந்த சிவக்குமார் உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர் சிகிச்சையில் சீதாராம் யெச்சூரி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி), ரேசிங் புரோமோஷன் நிறுவனம் (ஆா்பிபிஎல்) சாா்பில் பாா்முலா 4 காா் இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் […]
கோட் – மட்ட பாடல் வெளியீடு!
கோட் படத்தின் 4வது பாடல் வெளியாகியுள்ளது. லியோ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times). இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கூலி – சத்யராஜ் போஸ்டர்! படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி […]
தில்லி தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி தர்மேந்திரா நியமனம்!
தில்லி தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி தர்மேந்திரா இன்று மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். ஏஜிஎம்யூடி கேடரில் 1989 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான தர்மேந்திரா, தில்லிக்கு மாற்றப்படுவதற்கு முன்பு அருணாச்சலப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். ஏஜிஎம்யூடி கேடர் எனப்படும் அருணாச்சலப் பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கேடரின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான இவர், வருகிற பிப்ரவரியில் தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதைத் தொடர்ந்து மாற்றப்பட்டுள்ளார். நாளை (செப். 1) முதல் இவர் […]
பாகிஸ்தான் 274 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மழையால் ரத்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. மழை காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை. 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து 390 ரன்கள் முன்னிலை! பாகிஸ்தான் (274/10) போட்டியின் இரண்டாம் நாளான இன்று (ஆகஸ்ட் 31) டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி […]
விஜய் ஆண்டனியின் ஹிட்லர் வெளியீட்டுத் தேதி!
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட்லர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இறுதியாக நடித்த ‘ரோமியோ’, ‘மழைப்பிடிக்காத மனிதம்’ திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, ‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் ‘ஹிட்லர்’ என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். கோட் – மட்ட பாடல் வெளியீடு! செந்தூர் ஃபிலிம் இண்டர்னேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் […]
