ஹரியாணாவின் சட்டப்பேரவைத் தேர்தல், வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஹரியாணா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 1ஆம் தேதிக்கு பதில் அக்டோபர் 5ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையும் அக்டோபர் 4ஆம் தேதிக்கு பதில் 8ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் 8ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிஷ்னோய் சமூக மக்கள் கொண்டாடும் 100 ஆண்டுகள் பாரம்பரிய திருவிழா வருவதால், […]
Month: August 2024
`பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த வேண்டும்!’ – மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
இந்தியாவில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் வகையில், 2006-ல் மத்திய அரசால் குழந்தைத் திருமணம் தடைச் கொண்டுவரப்பட்டு, ஆண்களின் திருமண வயது 21-ஆகவும், பெண்களின் திருமண வயது 18-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. அதையடுத்து கடந்த 2021 இறுதியில் மத்திய அரசு, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் திருமண வயதை 21 ஆக நிர்ணயிக்க குழந்தைத் திருமணம் தடைச் சட்டம் 2006-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் இன்னும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. குழந்தைத் திருமணம் இத்தகைய சூழலில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி […]
Vinesh Phogat: ஹரியானா: `நமக்காக யாரும் வரப்போவதில்லை..!’ – விவசாயிகள் போராட்டத்தில் வினேஷ் போகத்
ஷம்பு கிராம எல்லையில் ஹரியானா விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 200 நாள்களை எட்டியுள்ள நிலையில் பெரிய அளவிலான போராட்டத்தை இன்று (சனிக்கிழமை) முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் விவசாயிகளுடன் இணைந்துள்ளார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். “உங்கள் மகள் உங்களுடன் நிற்கிறேன்” எனப் பேசி தனது உறுதியான ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். விவசாயிகள் போராட்டம் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி முதல் ஹரியானா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உறுதியை அளிக்க வேண்டும்’ […]
சென்னை பார்முலா 4-க்கான எப்ஐஏ சான்றிதழ் பெற இரவு 8 மணி வரை அனுமதி: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னையில் பார்முலா-4 ஸ்ட்ரீட் கார் பந்தய போட்டிகளை நடத்துவதற்கான சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழைப் பெறுவதற்கான கால அவகாசத்தை இரவு 8 மணி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் சென்னையில் பார்முலா-4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் இன்றும் (ஆக.31), நாளையும் (செப்.1) தீவுத்திடலை சுற்றிலும் உள்ள வட்ட வடிவ சாலையில் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஆயத்த ஏற்பாடுகளும் இரவு, பகலாக மேற்கொள்ளப்பட்டன. […]
சென்னை பார்முலா-4 கார் பந்தயம் தாமதமாக தொடக்கம்: புதிய அட்டவணை வெளியீடு
சென்னை: பார்முலா 4 கார் பந்தயங்களை நடத்துவதற்கான எப்.ஐ.ஏ-விடம் இருந்து பெறப்பட்ட தற்காலிக சான்றிதழ்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள புதிய அட்டவணையின்படி, இன்று இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கார் பந்தயங்களுக்கு அனுமதி வழங்கும் சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழ் இன்று (ஆக.31) மாலை 6 மணிக்கு கிடைக்கும் என்ற தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, பந்தயம் நடைபெறவுள்ள 3.5 கி.மீட்டர் தொலைவுக்கான வழித்தடத்தில் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து எப்.ஐ.ஏ-விடம் இருந்து […]
சீமான் குறித்து யூடியூபில் அவதூறு: காவல் ஆணையர் அலுவலகத்தில் நாதக புகார்
சென்னை: யூடியூபில் சீமான் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாதக மத்திய சென்னை மண்டல செயலாளர் ஸ்ரீதர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில், “தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் கடந்த 25-ம் தேதி ‘நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் – நாகை திருவள்ளுவன்’ என்ற தலைப்பில் காணொலி ஒன்று வெளியிடப்பட்டது. அதில், பேட்டி […]
ஃபார்முலா 4 – புதிய அட்டவணை வெளியீடு
ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடங்கும் என்றும் முதல்நாள் நிகழ்வுகள் இரவு 11 மணிக்கு நிறைவு பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஃப்ஐஏவிடம் இருந்து தற்காலிக சான்று பெறப்பட்டதன் அடிப்படையில், போட்டிக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி), ரேசிங் புரோமோஷன் நிறுவனம் (ஆா்பிபிஎல்) சாா்பில் பாா்முலா 4 காா் இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகிய […]
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை: பிரதமர் மோடி
புது தில்லி: நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து நடவடிக்கை தேவை என்று உச்ச நீதிமன்றம் சார்பில் நடந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். கடந்த ஒரு சில வாரங்களில், பெண்களுக்கு எதிராக குற்றங்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வலியுறுத்திப் பேசியிருக்கிறார். கொல்கத்தாவில், பெண் மருத்துவர் கொலைச் சம்பவம் மற்றும் மகாராஷ்டிரத்தில் பள்ளிச் சிறுமிகள் பலாத்காரம் போன்ற சம்பவங்கள் நாட்டையே உலுக்கியிருக்கும் […]
இவர்தான் உலகின் மிகச் சிறந்த ஃபீல்டிங் ஆல்ரவுண்டர்: ஜாண்டி ரோட்ஸ்
உலகின் மிகச் சிறந்த ஃபீல்டிங் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். ரவீந்திர ஜடேஜாவைப் போன்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் சிறப்பான ஃபீல்டர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: சுரேஷ் ரெய்னாவின் மிகப் பெரிய ரசிகன் நான். அவர் கிரிக்கெட் விளையாடிய நாள்களை மகிழ்ச்சியுடன் பார்த்தேன். தற்போது அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். கடந்த காலங்களில் இந்தியாவில் கிரிக்கெட் உள்கட்டமைப்புகள் பெரிய […]
2-வது டெஸ்ட்: இங்கிலாந்து 390 ரன்கள் முன்னிலை!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 390 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் 118 ரன்களும், பென் டக்கெட் 40 […]
