Sorting by

×

போர்ச்சுகல்: ஹெலிகாப்டர் விபத்தில் 4 வீரர்கள் பலி, ஒருவர் மாயம்

போர்ச்சுகல்லில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 வீரர்கள் பலியானார்கள். வடக்கு போர்ச்சுகலில் உள்ள சமோடஸ் பகுதியில் தீயணைப்பு நடவடிக்கைக்கு பிறகு வெள்ளிக்கிழமை திரும்பிய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஒரு பைலட் மற்றும் ஐந்து வீரர்களுடன் சென்ற அந்த ஹெலிகாப்டர் டூரோ ஆற்றில் திடீரென விழுந்தது. இந்த சம்பவத்தில் 4 வீரர்கள் பலியானார்கள். ரஷிய ஹெலிகாப்டர் காணவில்லை: 22 பேரின் நிலை என்ன? ஹெலிகாப்டரின் விமானி அவ்வழியாகச் சென்ற படகு மூலம் விமானி மீட்கப்பட்டார். உடனே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். […]

கேரவன்களில் உடைமாற்றுவதை விடியோ எடுத்தார்கள்! கேரள படப்பிடிப்பு அனுபவம் பகிர்ந்த ராதிகா!

கடந்த 2017-ஆம் ஆண்டில் மலையாள நடிகை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் உள்பட பலரும் விலகினர். முக்கியமான பல பிரபலங்கள் மீது வழக்குப் பதிவும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் […]

“ரஜினி அன்று சொன்னதை மீண்டும் மீண்டும் ஏன் கிளப்பி விடுகிறீர்கள்?” – தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரத்தில் தேர்தலில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை தொட்டப்பநாயக்கணூரில் தொடங்கிய தங்கதமிழ்ச் செல்வன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. அதை பெருமைப்படுத்தும் விதமாக உலக அளவில் வீரர்களை வரவழைத்து மிகப்பெரிய கார் பந்தயம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. நிச்சயமாக இந்த கார் பந்தயத்தை சிறப்பு மிக்க பந்தயம் என்றே சொல்ல வேண்டும். கார் பந்தயம் நீதிமன்றம் கூட பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்த […]

தமிழ்வளர்ச்சித் துறையில் முதல்முறையாக உதவி இயக்குநர்கள் நேரடி நியமனம்: டிஎன்பிஎஸ்சி

சென்னை: தமிழ்வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர்கள் முதல்முறையாக நேரடி நியமன முறையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ் ஆட்சிமொழி சட்டத்தின்படி தமிழக அரசின் அனைத்து துறைகள், வாரியங்கள், பொதுத்துறை மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் தமிழை முழுமையாக பயன்படுத்தும் நோக்கில் தமிழ்வளர்ச்சித் துறை இயங்கி வருகிறது. தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் கீழ் இயங்கும் இத்துறையின் தலைமை பொறுப்பில் இயக்குநரும், அவருக்கு கீழ் துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அலுவலர்களும் பணியாற்றி வருகின்றனர். மாவட்ட […]

வனவிலங்குகளை கண்டு ரசித்தப்படி ஒரு சுற்றுலா செல்லலாமா – இது தாங்க சரியான சாய்ஸ்!

how to visit mudumalai tiger reserve and bandipur national park in one day, places to visit in Coimbatore during monsoon, how to book rooms in mudumalai and bandipur national park, முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் பந்திப்பூர் தேசிய பூங்காவிற்கு ஒரே நாளில் செல்வது எப்படி, மழைக்காலத்தில் கோவையில் பார்க்க வேண்டிய இடங்கள், முதுமலை மற்றும் பந்திப்பூர் தேசிய பூங்காவில் அறைகளை முன்பதிவு செய்வது எப்படி […]

எங்கேயும் ஓடி ஒளியவில்லை.. அவதூறு பரப்பாதீர்: நடிகர் மோகன்லால்

நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை, இங்கேதான் இருக்கிறேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று மலையாள நடிகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் நடிகருமான மோகன்லால் தெரிவித்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டில் மலையாள நடிகை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியானது. அதில் மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா். இதையடுத்து, மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து […]

ஹிமாசலில் கனமழைக்கு 150 பேர் பலி: 72 சாலைகள் மூடல்!

ஹிமாசலப் பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து 72 சாலைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 2 வரை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பிறந்து 6 நாள்களேயான குழந்தையைக் கொன்ற தாய்: காரணம்? சிம்லாவில் 35, மண்டியில் 15, காங்க்ராவில் 10, குலுவில் 9 மற்றும் உனா, சிர்மௌர் மற்றும் லாஹவுல் மற்றும் ஸ்பிதி மாவட்டங்களில் தலா ஒன்றும் மூடப்பட்டுள்ளதாக மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக மாநிலத்தில் 10 மின்சாரம் மற்றும் 32 […]

Mollywood விவகாரம்: `குறைந்தபட்சம் கேரளா இதற்காக குரல் எழுப்பியிருக்கிறது’ – சசி தரூர் சொல்வதென்ன?!

கேரள அரசு வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவில் #MeeToo அலையை எழுப்பியுள்ளது. தேசிய மகளிர் ஆணையம் ஹேமா கமிட்டி அறிக்கையை முழுமையாக வெளியிட வேண்டும் எனக் கேட்டுள்ளதால் பெரும் பூகம்பம் வெடிக்கக் காத்திருக்கும் நிலை உருவாகியிருக்கிறது. இந்த நேரத்தில் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், “இந்தியச் சமூகத்தின் மனப்பான்மையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்” எனப் பேசியுள்ளார். மலையாள திரையுலகில் எழுந்துள்ள #MeeToo பிரச்னையால் மூத்த உறுப்பினர்கள் அம்பலப்படுவதையும், காவல்துறையில் […]

“பொங்கலுக்கு முன்னதாக கோரிக்கைகள் மீது நடவடிக்கை” – கோவை போலீஸாருக்கு டிஜிபி உறுதி

கோவை: “வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக உங்களது மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், ” என்று கோவை மேற்கு மண்டல போலீஸாரிடம் மனுக்கள் பெற்று குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் பேசிய தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உறுதி அளித்துள்ளார். தமிழக டிஜிபி-யான சங்கர் ஜிவால் மண்டலம் வாரியாக போலீஸாரிடம் குறைகள் கேட்டு அவை தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, இன்று (ஆக.31) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோவை […]

எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குளிர்பானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே கீழ ஈரால் தேசிய நெடுஞ்சாலையில் குளிர்பானங்கள் ஏற்றிக்கொண்டு வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள ஆலையிலிருந்து குளிர்பானங்களை ஏற்றிக்கொண்டு, லாரி ஒன்று இன்று காலை புறப்பட்டு ஆந்திரா மாநிலம் விஜயவாடாவுக்குச் சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டுடன்காடு கிராமத்தைச் சேர்ந்த சேட்டையன் (41) என்பவர் ஓட்டினார். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or […]