Sorting by

×

“கார் பந்தயம் நடத்தும் அரசிடம்  அமோனியா வாயு கசிவைத் தடுக்க பார்முலா உள்ளதா?” – சீமான்

சென்னை: “தூத்துக்குடியில் தனியார் உரத் தொழிற்சாலையில் இருந்து அமோனியா நச்சுப்புகைக் கசிவுக் காரணமாக உயிரிழந்துள்ள ஹரிஹரன் என்ற இளைஞரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு, தொழிற்சாலையின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் Tuticorin Alkali Chemicals and Fertilizers Limited என்கிற தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கசிவின் காரணமாக ஊழியர் ஒருவர் […]

நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவ் அலுவலகத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனின் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, 144 முதலீட்டாளர்களிடம் ரூ. 24.50 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவன இயக்குநரான தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், மோசடி வழக்கில் […]

குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாக பெற்றோர் குற்றச்சாட்டு!

புதிதாய் பிறந்த குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறிய பெற்றோரால் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மத்தியப் பிரதேசத்தில் அரசு நடத்தும் பிர்சா முண்டா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், ஆக. 23, வெள்ளிக்கிழமை, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை சிகிச்சையளிக்க புறஊதாக் கதிர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், மருத்துவர்கள் தவறான சிகிச்சையை வழங்கியதால், பிறந்து 9 நாள்களேயான குழந்தைக்கு தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறி, மருத்துவர்கள் மீது குழந்தையின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதனைத் […]

அர்ஜுன் தாஸின் புதிய பட போஸ்டர்!

கைதி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ். அதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தும் கவனிக்கப்பட்டார். தொடர்ந்து, அநீதி, ரசவாதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். நடிகர் அர்ஜுன் தாஸ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அதில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் ஒன்றையும் இணைத்து காதல் குறியீட்டுடன் காதலியை முகம் காட்டாமல் பதிவிட்டிருந்தார். கமர்ஷியலில் […]

ஜம்மு-காஷ்மீரில் 2 தேர்தல் பேரணியில் கலந்துகொள்கிறார் ராகுல்!

ஜம்மு-கர்ஷ்மீரில் செப்.4ல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரண்டு தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டு தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. வரும் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. அக்.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. […]

வேட்டையன் டப்பிங்கில் இயக்குநரை பாராட்டிய ரஜினி! (விடியோ)

இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழு விடியோ […]

சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு !

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டாபிராம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு அரசையும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து ஒரு சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு அவதூறு பரப்பும் விதமாக பேசினார். இந்த சம்பவம் குறித்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அஜேஷ் என்பவர் கடந்த ஜூலை மாதம் 22 […]

பாஜகவில் இணைந்த மற்றொரு ஜார்கண்ட் முக்தா மோர்ச்சா உறுப்பினர்

சம்பயி சோரன் பாஜகவில் இணைந்த அடுத்த நாளிலேயே மற்றொரு ஜே.எம்.எம். சட்டப்பேரவை உறுப்பினரும் பாஜகவில் இணைந்தார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான லோபின் ஹேம்ப்ரோம், இன்று ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவிலிருந்து பாஜகவில் இணைந்தார். கட்சியிலிருந்து விலகியதற்காக ஹேம்ப்ரோம் கூறியதாவது, “முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஷிபு சோரன் காலத்திற்கு பிறகு, கட்சி மாறிவிட்டது. இப்போதெல்லாம், கட்சியின் மூத்த தலைவர்களுக்கு மரியாதை அளிக்கப்படுவது கிடையாது. அதனால்தான், ஜார்கண்டின் வளர்ச்சிக்காகவும், பழங்குடியினரின் மேம்பாட்டிற்காகவும் நான் பாஜகவில் சேர முடிவு […]

பிரேசிலில் எக்ஸ் வலைதளத்திற்கு தற்காலிக தடை

பிரேசில் நாட்டில் எக்ஸ் வலைதளத்திற்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கில் எக்ஸ் வலைதள நிறுவனம் பதிலளிக்க மறுத்ததால், அடுத்த 24 மணி நேரத்தில் எக்ஸ் வலைதளத்திற்கு சட்ட விவகார பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என பிரேசில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பாகிஸ்தான்: 10 நாள்களில் 37 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை! உச்ச நீதிமன்ற உத்தரவை எலான் மஸ்க் மறுத்ததை அடுத்து பிரேசில் […]

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கோரி திருச்சியில் செப்.5-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கட்டக்கோரி திருச்சியில் வரும் செப்.5-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஆறு, ஏரி, குளங்களை தூர் வாரி, நீர்நிலைகளின் மட்டம் உயர்த்தப்பட்டது. பல்வேறு தடுப்பணைகளை தரமாகவும், உறுதியாகவும் மக்கள் பயன்பாட்டுக்கு கட்டிக்கொடுத்தது; திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பாலங்களும், சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் வடிவில், […]