Sorting by

×

இஸ்ரேலுக்கு உறுதுணையாக கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்கா!

இஸ்ரேலுக்கு உறுதுணையாக மத்திய கிழக்கு பகுதிகளுக்கு கூடுதல் படைகளை அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அக்டோபர் 7, 2023 அன்று காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் வெடித்ததில் இருந்து இதுவரை 41,595 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 96,200 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று காஸாவை தளமாகக் கொண்ட சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதையடுத்து மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், […]

தீவிரவாதத்துக்கு இடமில்லை: இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேச்சு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 30) தொலைபேசியில் பேசினார் . அப்போது, உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை என்றும், அமைதி மற்றும் நிலைத்தன்மை நிலவ மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கு இந்தியா உதவிகரமாக இருக்கும் எனவும் மோடி உறுதியளித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது, ”மேற்கு ஆசியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சமீபத்திய மேம்பாடுகள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினேன். நமது உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை. […]

விமான நிலைய வான்தடம் மூடல்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

இந்திய விமானப் படை தினத்தையொட்டி வான் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால், சென்னை விமான நிலைய வான்தடம் 15 நிமிடங்கள் முதல் இரண்டு மணிநேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின், விமானப்படை தின விமான கண்காட்சி தாம்பரம் மற்றும் மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக விமான நிலைய இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”இந்திய விமானப்படை தினத்தையொட்டி வான் சாகச நிகழ்ச்சி காரணமாக விமான அட்டவணையில் மாற்றம் குறித்து சென்னை […]

சத்தீஸ்கரில் சாலை கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.11,000 கோடி ஒப்புதல்!

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் உள்ள சாலைகளின் இணைப்பை வலுப்படுத்த ரூ.11,000 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில், முதல்வர் விஷ்ணு தியோ சாயுடனான மறுஆய்வுக் கூட்டத்தின் போது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடமிருந்து இந்த ஒப்புதல் பெறப்பட்டது. இந்த நிதி நான்கு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த செலவிடப்படும். அதே வேளையில், இது மாநிலத்தின் போக்குவரத்து நிலப்பரப்பை மாற்றியமைக்கும், தொழில்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதே போல மற்ற திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் […]

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: திமுக 4.0-ன் தொடக்கமும் கட்சியில் தாக்கமும்!

துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதிக்கு அரசியல் கட்சிகள், நடிகர்கள், நடிகர் சங்கம் என பல தரப்பினரும் தங்களின் வாழ்த்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, ‘திமுக 4.0’ தொடங்கிவிட்டது எனப் பேசி வருகின்றனர். அதாவது அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் அடுத்து உதயநிதி நான்காம் தலைமுறை தலைவராகப் பார்க்கப்படுகிறார் என்பதுதான் அதன் பொருள். ஆனால், உண்மையில் என்ன சாதித்தார் என திமுக தலைமை உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியை வழங்க முடிவு செய்தது என்னும் கேள்வி எழுந்துள்ளது. Disclaimer […]

3 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.92,000 கோடி கடனுதவி: துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

சென்னை: “கடந்த 3 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.92 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநில அளவிலான மணிமேகலை விருதுகள், வங்கியாளர் விருதுகள், சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் செயலர் ககன்தீப் […]

மெரினாவில் அக்.6 வரை ட்ரோன்கள் பறக்க தடை – விமான சாகச நிகழ்வுக்காக நடவடிக்கை

சென்னை: விமான சாகச நிகழ்ச்சியையொட்டி இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை மெரினா கடற்கரையில் ட்ரோன்கள் பறக்க விட தடை விதித்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் இன்று பிறப்பித்த உத்தரவு: “இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92-வது ஆண்டை நிறைவு செய்யும் வகையில் சென்னையில் அக்டோபர் 6-ம் தேதி பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணி நேரம் […]

சென்னை விமான நிலைய மோப்ப நாய் சீசர் ஓய்வு: பதக்கங்கள் அணிவித்து, கேக் வெட்டி மரியாதை

சென்னை: சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் கடந்த 8 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட 9 வயது மோப்ப நாய் சீசர் பணி ஓய்வு பெற்றது. அந்த மோப்ப நாய்க்கு பதக்கங்கள் வழங்கி, கேக் வெட்டி, சிகப்பு கம்பள விரிப்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தி வழி அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல், புதிதாக பணியில் சேர்க்கப்பட்டுள்ள 9 மாத மோப்ப நாய் யாழினிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு […]

“சமூக ஊடகங்களில் ‘டிஸ்கஸ்’ செய்வதை கவனிக்கிறேன்” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “சமூக ஊடகங்களில் என்ன ‘டிஸ்கஸ்’ செய்கிறீர்கள் என்று நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இங்கு பேசப்படும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது” என்று திமுக ஐடி விங் அணியினருடனான உரையாடலில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். திமுக தகவல் தொழில்நுட்ப அணி செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாகக் கொண்டாடி வருகிறது. திராவிட மாதத்தின் நிறைவுநாளான இன்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் யூடியூப் பக்கத்தில் சிறப்புரையாற்றினார். அதன் விவரம்: […]

துணை முதல்வரான பின்பு மதுரைக்கு வந்த உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு

மதுரை: துணை முதல்வராக பொறுப்பேற்று முதல் முறையாக இன்று இரவு மதுரை விமான நிலையத்துக்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக சார்பில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் திமுகவினர் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். விருதுநகரில் அக்.01-ல் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் வகையில் இன்று இரவு 8.30 மணியளவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். துணை முதல்வராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக வருகை தருவதால் […]