Sorting by

×

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா சாதனை வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டி சிட்டகாங் மைதானத்தில் நடைபெற்றது. அதில், முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 6 விக்கெட்டுகளை இழந்து 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சில் வங்கதேசம் 143 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ-ஆன் நிலைக்கு தள்ளப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய வங்கதேசம் 159 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 273 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. 2 டெஸ்ட் […]

இந்தியா-சீனாவும் ராஜதந்திர, ராணுவ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன: ராஜ்நாத் சிங்

இந்தியாவும் சீனாவும் கிழக்கு லடாக்கில் தெளிவாக வரையறுக்கப்படாத எல்லைக் கோட்டை (எல்ஏசி) ஒட்டிய பகுதிகளில் நீடித்து வந்த பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்தகான ராஜதந்திர மற்றும் ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் எல்லைத் தாண்டி வந்த சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய வீரா்கள் […]

“விஜய் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வன்மமும் இல்லை” – விசிக தலைவர் திருமாவளவன்

சென்னை: விஜய்யின் உரையில் இருந்த தெளிவற்ற விஷயங்களை சுட்டிக் காட்ட வேண்டிய இருந்ததால் சுட்டிக் காட்டினேன். விஜய் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வன்மமும் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் கூறியிருப்பதாவது: “எடுத்த எடுப்பிலேயே 30 சதவீத வாக்குகளை விஜய்யால் வாங்க முடியுமா? எம்ஜிஆர் கட்சி தொடங்கும் முன்பே அவர் திமுக காரர். தேர்தல் அனுபவம் உள்ளவர். அவருக்குப் பின்னால் வந்த எந்த நடிக்கருக்கும் எம்ஜிஆருக்கு […]

ஃபஹத் ஃபாசில், வடிவேலுவின் மாரீசன் போஸ்டர்!

தீபாவளியை முன்னிட்டு மாரீசன் படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மாமன்னனில் மிகச்சிறப்பாக நடித்த வடிவேலுவை நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முயன்று வருகின்றனர். அதற்காக,  நிறைய கதைகளை வடிவேலு கேட்டு வருகிறார். அப்படி, ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இருவரும் மாரீசன் என்கிற படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தை மலையாள இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு படத்தின் சிறப்பு போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. […]

பிளடி பெக்கர் படத்தின் சிறப்புக் காட்சி: ரசிகர்களுடன் பார்த்து ரசித்த படக்குழுவினர்

கோவை: தமிழகத்தில் கோவையில் திரையிடப்பட்ட பிளடி பெக்கர் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை படக்குழுவினர் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர். இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகி உள்ள பிளடி பெக்கர் திரைப்படம் தீபாவளி நாளான இன்று(அக்.31) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கோவை பிராட்வே திரையரங்கில் வியாழக்கிழமை காலை 7 மணி சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதனை படக்குழுவினர்களான நடிகர்கள் கவின், ரெடின் கிங்ஸ்லி, இயக்குநர் சிவபாலன் ஆகியோர் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர். இதையும் படிக்க| சிஎஸ்கே […]

தீபாவளி: சிவகாசி பட்டாசுகள் ரூ. 6,000 கோடிக்கு விற்பனை!

சிவகாசி பட்டாசு ஆலைகள் மூலம் ரூ. 6,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையானதாக தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பட்டாசு தொழிலின் மையமாக சிவகாசி கருதப்படுகிறது. நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 70 சதவீதம் இங்கிருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. சிவகாசியில் ஏறத்தாழ 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்கள் தயாரித்த ரூ. 6,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் இந்த ஆண்டு விற்பனையாகியுள்ளது. பட்டாசு விற்பனைத் தொடர்பாக தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள […]

கேம் சேஞ்சர் டீசர் தேதி!

நடிகர் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் மற்றும் அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையும் படிக்க: ஃபஹத் ஃபாசில், வடிவேலுவின் மாரீசன் போஸ்டர்! தமன் இசையமைப்பில் உருவான இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. […]

“2031-ல் திராவிட கட்சிகள் இல்லாத தமிழ்நாடு” – அண்ணாமலை கணிப்பு

சென்னை: “ஒரு திராவிட கட்சியுடைய வாக்கு மிகப்பெரிய அளவில் இப்போது சரிந்துகொண்டிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். அடுத்த தேர்தலில் அதன் வாக்கு வங்கி 12 சதவீதத்துக்கும் கீழே போய்விடும். அது நடந்தே தீரும். அந்த இடத்துக்கு வேறு ஒரு கட்சி வரும். 2026ஆம் ஆண்டு அதற்கான ஆரம்பமாக இருக்கும். 2031 திராவிட கட்சிகள் இல்லாத ஒரு தமிழ்நாடு உருவாகும்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில் […]

Tamilnadu News Live October 31, 2024: Top 10 News : பட்டாசு புகையால் மோசமான காற்றின் தரக்குறியீடு.. சிஎஸ்கே அணியில் மீண்டும் தோனி உள்ளிட்ட முக்கிய செய்திகள்!

தமிழ்நாடு செய்திகள் October 31, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். ​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

Top 10 News : பட்டாசு புகையால் மோசமான காற்றின் தரக்குறியீடு.. சிஎஸ்கே அணியில் மீண்டும் தோனி உள்ளிட்ட முக்கிய செய்திகள்!

Top 10 Tamil Nadu : சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்தது முதல் தோனியை தக்க வைத்த சிஎஸ்கே அணி வரை என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம். ​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL